உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறவில்லை; இ.பி.எஸ்.

தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறவில்லை; இ.பி.எஸ்.

சென்னை; தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க., கூறவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஆளும் தி.மு.க., -அ.தி.மு.க., என அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அரசியல் களத்தில் தி.மு.க., கூட்டணியை விட எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி அமைய போகிறது என்பது பற்றிய கேள்விகளும் ஹேஷ்யங்களும் அதிகம் எழுந்து வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c5u3jxtu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்படிப்பட்ட சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இ.பி.எஸ். நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு இ.பி.எஸ்., அளித்த பதிலின் விவரம் வருமாறு; கேள்வி; தே.மு.தி.க.,வுக்கு கடந்த கூட்டணியின் போது ராஜ்ய சபா சீட் தருவதாக உறுதியானதாக...(இ.பி.எஸ். இடைமறிக்கிறார்) பதில்: அதெல்லாம் உரிய நேரத்தில்... அதாவது இந்த கூட்டணி, கீட்டணி அதெல்லாம் விட்ருங்க. நீங்க தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம். புரியுதா? (இடைமறித்த நிருபர் ராஜ்ய சபா சீட் தருவாங்கன்னு என்று பேசுகிறார். அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே இ.பி.எஸ்., மீண்டும் குறுக்கிட்டு பதிலை தொடர்கிறார்.) இ.பி.எஸ்; யார் சொன்னாங்க?(தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் விஷயம்)நாங்க சொன்னோமா? சொல்லுங்க பாக்கலாம். நாங்க ஏதாவது சொன்னோமா? யார் யாரோ சொன்னதை வச்சு எங்கிட்ட கேட்காதீங்க சார். நாங்க ஏதாவது வெளிப்படுத்தினோமா? தேர்தல் அறிக்கை வந்ததுல்ல... நாடாளுமன்ற தேர்தல் வந்ததுல்ல, அதில் என்ன வெளியிட்டோம். படிச்சு பாருங்க, அப்படித்தான் நடந்துக்குவோம். இவ்வாறு இ.பி.எஸ்., பதிலளித்தார்.தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய வேண்டுமானால் 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இந்த கணக்கீடுகளை ஒப்பீட்டளவில் கணக்கிட்டால் தற்போது 134 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள தி.மு.க.,வுக்கு 4 இடங்கள் கிடைக்கும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 2 இடங்கள் பெற வாய்ப்புள்ளது. ஒருவரை எம்.பி.,யாக தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., வசம் உள்ளனர். இரண்டாவதாக இன்னொருவரை தேர்வு செய்ய வேண்டுமெனில், ஓ.பி.எஸ்., அல்லது பா.ம.க., அல்லது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதில் யார் யாரிடம் அ.தி.மு.க., ஆதரவு கோரும் என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
மார் 04, 2025 20:23

புரிஞ்சுக்கோங்க எடப்பாடி, பிரேமலதா நூறு கோடி ரூபாய் கேக்கறாங்க.


Krishna Gurumoorthy
மார் 04, 2025 19:15

திமுக கொத்தடிமை எடப்பாடிபலமுறை சொல்லி விட்டோம் அதிமுக சமாதி எடப்பாடியின் கையில்


Nagarajan D
மார் 04, 2025 16:57

எல்லா பதவியும் நீயே வைத்துக்கொண்டால் யாரு எடப்பாடி உன்கூட கூட்டணிக்கு வருவாங்க... இப்ப இருக்கும் சூழலில் நீ கட்சி தலைவனா இருக்கும் வரை உங்கட்சிக்கு சமாதி கட்டாம நீ அடங்க மாட்ட போல


panneer selvam
மார் 04, 2025 16:49

Edapaddy ji, we understand you have not promised to DMDK , Premlatha Madame but you are so generous to give away one Rajya Sabha seat to Premlatha Son or her brother .


V K
மார் 04, 2025 16:20

என்ன பழநி தி மு க வுடன் ரகசிய கூட்டணியா அவனுக்கு ஒரு சீட்டு நீயா கொண்டு போய் கொடுத்துடுவ போல் இருக்கு


Kumar Kumzi
மார் 04, 2025 15:56

முதுகில் குத்துவது எட்டப்பன் பாட்டியின் குலத்தொழில் திருட்டு திராவிஷ கொத்தடிமை ஆண்டவருக்கும் இதே நிலைமை தான்


Velan Iyengaar
மார் 04, 2025 15:14

சொல்லிக்கொள்ளும்படி உள்ள ஒரு துக்கடா கட்சியும் இப்போ கூட்டணி விட்டு விலகும் ...


Anand
மார் 04, 2025 16:13

உண்டியன்ஸ்களை விடவா ஒரு துக்கடா கட்சி இருக்கும்?


ஆரூர் ரங்
மார் 04, 2025 15:06

தீயமுக கூட்டணி ஐந்தாவது வேட்பாளரையும் நிறுத்தி அதிமுக உறுப்பினர்கள் பலரின் வாக்குகளுக்கு ரேட் பேச வாய்ப்புள்ளது. எனவே எடப்பாடி தேதிமுகவுக்கு வாய்ப்பளித்தால் பிஜெபி வாக்குகளையும் வாங்கி வெற்றி பெறும். அதை விட்டுவிட்டு பங்காளின்னு நெனச்சு திமுகவுக்கு மறைமுகமாக உதவினால் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.


Shivam
மார் 04, 2025 17:56

என்ன பின் விளைவுகள் ரங்கு


sundarsvpr
மார் 04, 2025 14:54

எல்லாகட்சிகளிலும் பொதுக்குழுவை கூட்டி எந்த முடிவையும் எடுப்பதில்லை. செயல்குழுதான் முடிவு செய்கிறது. பொதுக்குழுவை கூட்டி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டால் அவர் தேர்வு செய்யப்பட்டாலும் இவர் பெற்ற ஆதரவு குறைவாகத்தான் இருக்கும்.


Narayanan
மார் 04, 2025 14:48

எந்த அரசியல்வாதிகளும் உண்மை பேசுவதில்லை. நீர்மட்டும் என்ன விதிவிலக்கா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 04, 2025 14:59

உண்மை பேசும் அரசியல்வாதிக்குத்தான் வாக்களிப்போம் என்று நாம் முடிவு கட்டினால் எந்த அரசியல்வாதிக்கும் ஓட்டுப்போட மாட்டோம் ....


சமீபத்திய செய்தி