வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எடப்பாடி என்னவெல்லாம் டான்ஸ் ஆடினாலும் சிறுபான்மை வோட்டுக்கள் வாராது இந்த திருட்டு திமுக அரசை எதிர்க்க எவ்வளோவோ காரணங்கள் இருக்கிறது அதைவிட்டு இதுபோல தேவைல்லாத ஆணி
சென்னை; ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி என்னவெல்லாம் டான்ஸ் ஆடினாலும் சிறுபான்மை வோட்டுக்கள் வாராது இந்த திருட்டு திமுக அரசை எதிர்க்க எவ்வளோவோ காரணங்கள் இருக்கிறது அதைவிட்டு இதுபோல தேவைல்லாத ஆணி