உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி... அ.தி.மு.க.,பற்றி மூச்சுவிடாமல் பேசிய மாஜி அமைச்சர்

அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி... அ.தி.மு.க.,பற்றி மூச்சுவிடாமல் பேசிய மாஜி அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: வரும் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் அருமையான, வலுவான, வல்லமையான கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.நிருபர்கள் சந்திப்பு என்றாகட்டும், பொதுக்கூட்ட மேடை ஆகட்டும். தமது பேச்சில் அனல் பறக்க, அதிரடியாக பேசுபவர்களில் ஒருவர் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. நடிகர் விஜய் பற்றியும், 2026 தேர்தலில் த.வெ.க., தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சி அமைக்க தயாராகி வருவதாக வெளியான அறிக்கை பற்றியும் நெல்லையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=spnbh02p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு பதிலளித்து ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளதாவது; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் அருமையான, வலுவான, வல்லமையான, தெளிவான, வெல்லப் போகும் கூட்டணி தெளிவாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை இ.பி.எஸ்., எடுப்பார்.இ.பி.எஸ்., உத்தரவை சரியாக செயல்படுத்துபவர்கள் நாங்கள். ஆகவே அவர் தான் முடிவை எடுப்பார். நாங்கள் ரெய்டுக்கு எல்லாம் பயந்து போகிறவர்களா? வ.உ.சி., நேதாஜி வரலாற்றை படித்து வளர்ந்து கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள். ஆகவே, ரெய்டுக்கும், கைதுக்கும் பயந்து பின்வாங்குபவர்கள் அ.தி.மு.க.,வினர் கிடையாது.அ.தி.மு.க., ஆட்சி மலரும். நாட்டு மக்கள் போற்றக்கூடிய ஆட்சி, அரசியல் தலைவர்களை மதிக்கக்கூடிய ஆட்சி. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தக்கூடிய அற்புதமான ஆட்சி இ.பி.எஸ்., தலைமையில் விரைவில் அமையும்.இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

panneer selvam
நவ 18, 2024 22:12

Everyone has the right to dream and of course Ex minister Balaji is both day and night dreams


வைகுண்டேஸ்வரன்
நவ 18, 2024 17:41

இ பி எஸ் ஸை எந்த கட்சியும் நம்ப மாட்டார்கள். அவர் காரியம் ஆனதும் காலை வாரி விடுவார் என்கிற தயக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே அதிமுக வுடன் கூட்டணிக்கு யாரும் போக மாட்டார்கள்.


MADHAVAN
நவ 18, 2024 17:32

பயப்படவில்லையென்றால் அப்புறம் எதுக்கு தலைமறைவாக இருந்தீங்க ? கீழான பேச்சுக்களை பேசி கேவலமாக சுற்றிய உனக்கு அரசியல் எதுக்கு ? கூவத்தூரில் ஊஞ்சல் ஆடுனது நீதானே ? திரிஷா ரம்பா ன்னு கேட்டது உங்க கூட்டம்தான் ?


சம்பா
நவ 18, 2024 17:07

அரசியல் தவிர்த்து. இவர் பேச்சு ரசிக்கும்படி இருக்கும்


குமரி குருவி
நவ 18, 2024 16:35

கடைசி இலவு பழுக்கும் என காத்திருப்போம் நமக்கு ஏமாற்றம் ...விஜய் சூடான அல்வா தந்தது போல் நிறைய அல்வா தயாராகி வருது....


CPVM Vishwa
நவ 18, 2024 16:31

செம்ம தலைவா


கூமூட்டை
நவ 18, 2024 16:21

கொடுத்து இருந்த போது என்ன செய்தீர்கள்


nv
நவ 18, 2024 16:12

இன்னும் ஒரு திராவிட joker பங்காளி. வெறும் வாய் சவடால் விட்டு வயிறு வளர்க்கும் கூட்டம்