உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசை, ஆசையாகவே இருக்கும்; தமிழிசைக்கு ஜெயக்குமார் பதில்

ஆசை, ஆசையாகவே இருக்கும்; தமிழிசைக்கு ஜெயக்குமார் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற தமிழிசையின் ஆசை, ஆசையாக தான் இருக்கும் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.ஆனால் அங்கு விரிசல்கள் ஏற்படக்கூடிய அளவுக்கு தி.மு.க., கூட்டணியில் விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கேட்கும் அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தி.மு.க., நினைப்பது போல் சுலபமான தேர்தலாக இருக்காது. எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். அந்த கூட்டணி ஆட்சியில் பா.ஜ., பங்கு பெறும் என்று கூறினார்.அவரின் கூற்றுபடி, தமிழகத்தில் 2026ல் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி என்று கட்சியினர் பேசி வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவரிடம் தமிழிசையின் பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு; அது அவர் கருத்து, அவர்கள் சொல்வார்கள். எல்லாருக்கும் தான் ஆசை இருக்கும். கேள்வி கேட்கும் உங்களுக்கும் கூட ஒருநாள் முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆசைக்கு நான் என்ன தடை போடுவது.ஆசை, ஆசையாகவே தான் இருக்கும். கனவு, கனவாக தான் இருக்கும். அது ஒரு போதும் நிறைவேற போவது கிடையாது. கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக, மக்கள் பிரச்னைகள் என போராடிக் கொண்டு தான் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
நவ 24, 2024 18:40

பங்காளிக்கு கோபம் .........


vadivelu
நவ 24, 2024 18:38

முதலில் எதிர் காட்சியாகவாவது வர பாருங்க.


Rajan
நவ 24, 2024 18:36

இவர்கள் ஆசை நிராசை ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் வாயை இழுத்து பூட்டி கொள்ள வேண்டும்


SUBBU,MADURAI
நவ 24, 2024 18:19

அதிமுகவின் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ, உதயகுமார், போன்ற இரண்டாம் மட்ட தலைவர்களுக்கு இன்னும் பாஜகவை பற்றிய விபரம் முழுமையாக தெரியவில்லை அவர்கள் எதிரியை கூட மன்னித்து விடுவார்கள் ஆனால் துரோகியை வஞ்சம் வைத்து பழிவாங்குவார்கள் அப்படி அவர்கள் பழிவாங்கிய துரோகிதான் மஹாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே. அவரின் சிவசேனா கட்சியை இப்படி கங்கணம் கட்டிக் கொண்டு கதையை முடித்தது ஏன் தெரியுமா? பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு அவர்களின் தயவில் முதல்வராக இருந்து ஆட்சி செய்து விட்டு திடீரென துரோகியாக மாறி பாஜகவின் முதுகில் குத்தி விட்டு கடைசியில் பாஜகவை எதிர்க்க எதிரிகளான காங்கிரஸ் மற்றும் சரத்பவாருடனுமே கூட்டணி வைத்து பாஜகவை எதிர்க்க துணிந்ததை பாஜகவினால் ஜீரணிக்க முடியவில்லை அதன் விளைவு உத்தவ் தாக்கரேவின் கட்சியை முற்றிலும் சிதைத்து விட்டு அவரையும் முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். அதே கதிதான் தமிழகத்தில் உள்ள எடப்பாடி என்கிற துரோகிக்கும் வெகு விரைவில் பரிசாக கிடைக்கப் போகிறது. அது தெரியாமல் இந்த ஜெயக்குமார் போன்ற வீணா போன ஆட்களெல்லாம் வெட்டி வீராப்பு பேசிக் கொண்டு அலைகிறார்கள்.


Perumal
நவ 24, 2024 21:44

yes it is correct


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை