உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்களும் வந்துட்டோம்ல! மழை களத்தில் மக்களுக்காக அணி அமைத்த அ.தி.மு.க.,!

நாங்களும் வந்துட்டோம்ல! மழை களத்தில் மக்களுக்காக அணி அமைத்த அ.தி.மு.க.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க., சார்பில் அணி அமைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ ஐ.டி. விங் சார்பில் RapidReponseTeam அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்றது. தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, மீண்டும் RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலற்ற தி.மு.க., அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க., உழைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Vellaisamy A
அக் 16, 2024 20:32

வாழ்த்துக்கள்


S.L.Narasimman
அக் 16, 2024 13:57

எடப்பாடியாருக்கு வாழ்த்துக்கள்.


raja
அக் 16, 2024 10:32

சபாஷ் சரியான போட்டி....


Venkateswaran Rajaram
அக் 16, 2024 09:55

இரண்டு திருட்டு திராவிட கழகங்களும் சேர்ந்து தரமில்லாதே வேலைகளை செய்து கொள்ளையடித்துவிட்டு மக்களை காப்பாற்றுவது போல் நடிக்கிறார்கள் ...எப்பொழுதுதான் மக்கள் உணர்வார்களா ...


சாண்டில்யன்
அக் 16, 2024 12:05

பில்கிஸ் பானு, கவுரி லங்கேஷ் பதினொருபேர் முன்கூட்டியே விடுதலை போன்ற தரமான வேலைகளெல்லாம் போற்றுதலுக்குரியவை இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதால்தான் நாற்பதிலும் புறக்கணித்தது தமிழ்நாடு. கவலைப் பட ஏதுமில்லை


கிஜன்
அக் 16, 2024 09:55

திராவிட கட்சிகள் போட்டி போட்டு மக்களுக்கு உதவுகின்றன .... தேஷ் ...களத்திலேயே காணோம் ...


raja
அக் 16, 2024 10:37

எதுக்கு அவங்களுக்கா ஒட்டு போட்ட... கொள்ளை அடிகிரானுவோன்னு புள்ளி விவரத்தில் சாட்சிகளோட சொல்லியும் கேவலம் ருவா 2000 ஒசி குவார்டரு ஒரு பிரியாணிக்கு ஆசை பட்டு விடியல் வெண்டுமுண்ணு போட்டீங்கள்ள.. எப்படி மனசாட்சியே இல்லாம அவங்கள கூப்பிடுகிராய் உடன் பிறப்பே


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 16, 2024 11:40

கிஜன் என்கிற பெயரில் ஒளிந்து இருக்கும் உடன்பிறப்பே திராவிட கட்சியில் ஆட்சிசெஞ்சி லஞ்சலாவண்ய திருடி உப்புதின்னவன் தான் தண்ணி குடிப்பான் என்பது கூட தெரியாத விளையாட்டு கைப்பாவையாக இருக்கிறாய் என நினைக்கையில் உனக்கு கொடுக்கப்படுகின்ற இருநூறு ரூபாய் கையூட்டு கூட தண்டகாசு தான் போலகிதே


சாண்டில்யன்
அக் 16, 2024 12:11

லஞ்ச லாவண்ய வழக்கில் சிறை சென்று வந்த ஒரே மாநில முதல்வர் என்ற உலக சாதனையாளர் குற்றவாளியாகவே மாண்டாரென்பது வரலாறு இந்த மாநிலமே ஒரு பக்கம் நிற்கும் போதும் சில உதிரிகள் மட்டுமே மறுபக்கம் நிற்பது என்ன காரணம்? சில கோடிகளும் பெட்டி பெட்டியா சரக்குமா?


SURESH M
அக் 16, 2024 09:39

கண்டிப்பாக ஆள்வார்கள்.. ஆனால் நடிகர்களும் இல்லை... தமிழை நேசித்த ...தமிழ் முன்னோர்கள் வாழ்வை மீட்டெடுத்த ... அன்பு சகோதர்கள் இருக்கிறார்கள்... நாமும் தோள்கொடுத்து பாடுபட்டால் அடுத்த தலைமுறை தமிழர்கள் நம் கலைகளோடும் கலாச்சாரமும் அன்பான உறவுகளோடும் .... மகிழ்வார்கள்


Sundar R
அக் 16, 2024 09:11

எந்த கட்சி வென்றாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் ஆட்சி செய்தால் தான் தமிழகத்தை அவர்கள் பொறுப்புடன் பாதுகாப்பார்கள்.


raja
அக் 16, 2024 10:43

சரியா சொன்னீங்க நண்பா... அண்ணாமலை தமிழன்.. தமிழை தாய் மொழியாக கொண்ட படித்தவர்.. பத்துவருடம் மத்தியில் ஆண்டு பதினைந்து வருடங்களை நோக்கி செல்லும் ஒரு ஊழல் கூட செய்யாத குற்றம் கூட சொல்லமுடியாத கட்சியின் மாநில தலைவர் .. அவருக்கு வாய்ப்பு கொடுக்க தமிழர்கள் முடிவெடுத்து விட்டார்கள்...


Prem
அக் 16, 2024 09:02

No use in giving press release. U r waiting for Tit for tat


Mohammad ali
அக் 16, 2024 09:52

தமிழில் கருத்து போடு


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 16, 2024 10:58

அலி மதராசாவில் அரபிக் தவிர இங்கிலீப்பீசு சொல்லி கொடுக்கலையோ ?


சமீபத்திய செய்தி