உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றியா! இந்தாண்டின் சிறந்த ஜோக்! மாஜி அமைச்சர் ஆரூடம்

200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றியா! இந்தாண்டின் சிறந்த ஜோக்! மாஜி அமைச்சர் ஆரூடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 200 தொகுதிகள் வெல்வோம் என்று தி.மு.க., கூறுவது இந்தாண்டின் மிக சிறந்த நகைச்சுவை என்று அ.தி.மு.க,, மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=599vfbzd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாள வில்லை. எப்போதும் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறது. 200 தொகுதிகளையும் வெல்வோம் என்று தி.மு.க., சொல்வது இந்தாண்டின் மிக சிறந்த நகைச்சுவை. பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்துவிட்டது.கூட்டணிக் கட்சிகள் நெருக்கடியால் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று நடிகர் விஜய் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.அவருக்கு யாரும் நெருக்கடி தரமுடியாது என்றாலும், மற்றவர்கள் கூறுகிறார்களே என்பதற்காக விலகி இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 08, 2024 22:39

அதிமுக ஒன்றிணையாமல் இப்படி இருக்கும் வரை இருநூறுக்கும் மேல் தொகுதிகளில் அவர்கள் வென்றாலும் ஆச்சரியப்பட முடியாது. எத்தனை அராஜகம் அடாவடித்தனங்கள் செய்தாலும் கொள்ளையே அடித்தாலும் மீண்டும் அவர்கள்தான்.


Ramesh Sargam
டிச 08, 2024 20:18

200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாவித கோல்மால் உத்திகளையும் பயன்படுத்தி வெற்றிபெறுவார்கள் அவர்கள். நேர்மையாக வெற்றிபெற முடியாது அவர்களால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை