உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியின் நலனுக்காக பேசினேன், நீக்குவார்கள் என தெரியாது: செங்கோட்டையன்

கட்சியின் நலனுக்காக பேசினேன், நீக்குவார்கள் என தெரியாது: செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம்: கட்சியின் நலனுக்காக தான் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேசினேன், ஆனால் நீக்குவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி;அதிமுக மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தொண்டர்களின் உணர்வுகள், மக்களின் எதிர்ப்பார்பை பிரதிபலிக்கின்ற வகையில் நேற்றைய தினம் அந்த விளக்கத்தை நான் வெளிப்படையாக தெரிவித்தேன்.அதற்கு இன்று கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளேன். பொதுவாக, ஜனநாயகம் என்பது ஒரு கட்சியில் ஒரு விளக்கம் கேட்டிருக்கவேண்டும். அந்த விளக்கம் கேட்காமல் இன்று ஜனநாயகத்தை காக்கிறோம், சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்துகளை சொல்வதற்கு எங்கள் கட்சியில் தடையில்லை என்ற பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்.என்னுடைய பணி இதை(ஒருங்கிணைப்பது)நோக்கி தான் தொடரும். நேற்றைய தினம் நான் எடுத்துச் சொன்ன கருத்தின் அடிப்படையில் தொடரும். 6 பேர் என்னை சந்திக்கவில்லை, பச்சைப்பொய் என்று இபிஎஸ் கூறியதற்கு நான் விளக்கம் அளித்துவிட்டேன். நாங்கள் சந்தித்தது, கருத்துகளை பரிமாறிக் கொண்டது, பொதுச் செயலாளர் இடத்திலே தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஏறத்தாழ 8 மாதங்கள் முன்னால் இதை தெளிவுபடுத்தி உள்ளேன். கட்சி பொறுப்புகளில் இருந்து நான் நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பதை இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை.இணைப்பு பற்றி பேசுவதற்கு பொதுக்குழு எப்போது கூடியது? பொதுக்குழு கூட்டினால் மட்டும்தான் பேச முடியும். 10 நாட்களுக்குள் இந்த பணியை(ஒருங்கிணைப்பது) துவங்க வேண்டும். ஒரு மாதம் ஆனாலும் பேசி தீர்க்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.கெடு விதித்ததை கண்டித்த செம்மலை தர்மயுத்தத்திற்கு போய்விட்டு வந்தவர். அதனால் அவர் அப்படி சொல்லி இருக்கலாம். யார் தான் இந்த கருத்தை வெளிப்படுத்துவது? தொண்டர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள், இந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று மக்களும் நினைக்கிறார்கள்.அவர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள், காலில் கூட விழுந்து இயக்கத்தில் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று காஞ்சிபுரத்திலே பேசி இருக்கிறார்கள். அதற்கு மேலே எந்த நடவடிக்கையும் இல்லை என்கிற போது, ஒரு விளக்கத்தை என் போன்றவர்கள் கட்சியின் நலன் கருதி வெளியிட்டோம்.என்னை நீக்கியது கட்சிக்கு பாதிப்பா என்பது போக போக தெரியும், காலம் தான் பதில் சொல்லும். டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், ஹெச் ராஜா, பிரேமலதா எனது கருத்து நியாயமான கருத்து என்று சொல்லி இருக்கிறார்கள். கட்சியின் நலன் கருதி தான் சொல்லி இருக்கிறார். என் நலன் கருதி அல்ல.காலம் தான் அனைத்துக்கும் பதில் சொல்லும், கொஞ்சம் பொறுத்து இருங்கள். இவ்வாறு செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Oorika Tha
செப் 12, 2025 15:20

எந்த கட்சி, யார் தலைவர் என்பதுக்கு எல்லாம் அப்பாற்பட்டு. பொது மேடையில் ஒரு கட்சியின் தலைவருக்கு கெடு விதிப்பது மிகுந்த திமிர்த்தனம்


சிட்டுக்குருவி
செப் 10, 2025 06:35

கட்சியின் நலனுக்காக பேசவேண்டுமென்றால் கட்சியில் உள்ள கட்சியின் அமைப்புக்குழுக்களிடம்தான் பேசவேண்டும் .அல்லது கட்சியின் தலைமையுடன் பேசவேண்டும் .பொதுவெளியில் கட்சிக்கு உடன்படாததை பேசி என்ன சாதிக்கமுடியும் என்பதை அறியவில்லையென்றால் கட்சியில் எந்த ஒரு பதவிக்கும் லாயக்கற்றவர் என்றுதான் அர்த்தம் .கட்சியின் தலைமையகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியவர்களெல்லாம் கட்சியின் தியாகிகளா ?ஜெயலலிதா அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் எல்லாம் கட்சியின் தியாகிகளா ?கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு வேறு ஆட்களே இல்லையா ? கட்சியின் இன்னொரு துரோகி ஆகாமல் கட்சியின் வேலையை பாருங்கள் பதவியை எதிர்பார்க்காமல் .அதுதான் உங்களுக்கு நல்லது .


M Ramachandran
செப் 08, 2025 20:45

அது அடிமாடு வேப்பிலைய்ய அடிச்சி வச்சிருக்கு. வெட்டு விழுந்தவுடன் அதற்கென தெரியாது.கசப்பு கடைக்கு போகுதா அல்லது நேரிடியாக பிரியாணி விருந்துக்கு போகுதா வென்று. இப்போ அப்படித்தான் தலையை ஆட்டிக்கொண்டு சிவந்த கண்களால் பார்க்கும். அப்புறம் விடியலின் வயதுக்குள் சென்று கடமுடா ஆயி அடுத்த நாளோ அதற்க்கு அடுத்த நாளோ கோல் மால் சாமி மாதிரி கடாமுடா சத்த துடன் வெளியேறி உரமா போக போகுகுது.


M Ramachandran
செப் 08, 2025 20:36

பதவி பித்து வெறி ஏரி உள்ளது.


ramani
செப் 08, 2025 10:34

இடைப்பாடி பழனிச்சாமியின் தாழ்வு ஆரம்பமாகிவிட்டது. இனிய அவருக்கு தோல்விதான். அவர் இனி வெற்றி பெறுவது கடினம்


Marcopolo
செப் 08, 2025 08:03

எடப்பாடியாரின் நாடி பிடித்து பார்க்கிறார். இவரை நம்பி எத்தனை பேர் வருகிறார்கள் என பார்க்கிறார் எண்ணம் ஈடேரவில்லை என்று தெரிந்ததும் பேச்சை மாற்றுகிறார்.அதிமுக பொருத்த வரையில் அவரே என்றும் தலைவர் ஆக இருப்பார். தலைமையை ஏற்று இருப்பவர்கள் கட்சியில் இருக்கட்டும்.


Nujra
செப் 07, 2025 13:11

பதவிக்கும் பணத்திற்கும் எடப்பாடி என்ன வேண்டுமனாலும் செய்வார்


Suresh Velan
செப் 07, 2025 14:21

பின்ன எப்படி இருப்பார்


அப்பாவி
செப் 07, 2025 10:55

என்ன, இதுவரை உள்ளடியா செஞ்சதை வெளிப்படையா செய்யலாம். சின்னம்மாவும் சேந்துப்பாரு.


metturaan
செப் 07, 2025 08:01

கருத்து சரி.... விவாதித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் .... சொன்ன இடம் தவறு சசி வலையில் விழுந்து விட்டாரோ என தோன்றுகிறது... சசி தினகரன் பன்னீர் பற்றி நன்கு தெரிந்தும் ஆதரவு தருவது தவறு


suresh Sridharan
செப் 07, 2025 07:09

பேசாமல் அண்ணாமலையை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் கட்சி தானாக வெற்றி பெற்றுவிடு கூட்டணி கூட தேவையில்லை இல்லை


புதிய வீடியோ