மேலும் செய்திகள்
ஸ்ரீ குமரனில் செயின் மேளா
1 minutes ago
ராமேஸ்வரம் பனாரஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு
3 minutes ago
நவ., வரையில் 693 கோடி பேர் ரயில்களில் பயணம்
47 minutes ago
சென்னை: நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கும், 'கொலீஜியம்' முறையாக இல்லை என தொடரப்பட்ட வழக்கு குறித்து, தலைமை நீதிபதியை அணுகும்படி, மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிபதி நிஷாபானு இல்லாமல், கொலீஜியம் அமைக்கப்பட்டதையும், கொலீஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகள் பட்டியலை எதிர்த்தும், பிரேம்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'இந்த வழக்கு பட்டியலிடப்படவில்லை' என, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில், வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த வழக்கை, விடுமுறை கால அமர்வில் பட்டியலிட வேண்டாம் என, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா அறிவுறுத்தியதாக, உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பதிவுத்துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியை அணுகும்படி அறிவுறுத்தினர்.
1 minutes ago
3 minutes ago
47 minutes ago