உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை வந்தார் அண்ணாமலை; இனி தமிழக அரசியல் சூடு பிடிக்கும்!

சென்னை வந்தார் அண்ணாமலை; இனி தமிழக அரசியல் சூடு பிடிக்கும்!

கோவை: கொடிசியா வளாகத்தில், 'விழித்திரு எழுந்திரு உறுதியாக இரு' என்ற நிகழ்ச்சியில் இன்று (டிச.,01) இரவு 7 மணிக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். 3 மாத இடைவெளிக்கு பிறகு அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான உயர் படிப்பு படிப்பதற்காக, 3 மாத காலம் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை சென்றிருந்தார். உயர் படிப்பு முடிந்த நிலையில், இன்று அவர் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ., வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f9cev4ml&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர், அங்கிருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட பா.ஜ., தரப்பில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு கொடிசியா வளாகத்தில், 'விழித்திரு எழுந்திரு உறுதியாக இரு' என்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். இரவு 7 மணிக்கு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். அவர் 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்பதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் தமிழகத்தில் இல்லாத 3 மாத காலத்தில் வெவ்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளார். உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அகில இந்திய அளவில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்று மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.இத்தகைய பின்னணியில், அண்ணாமலை இன்றைய கூட்டத்தில் பேச இருக்கிறார். அவரது பேச்சில், அனல் பறக்கும் என்று பா.ஜ., தொண்டர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

vinodh
டிச 08, 2024 10:27

நல்ல என்டேர்டைன்மெண்ட் எ இருக்கும்


Nallavan
டிச 05, 2024 07:27

அண்ணாமலை வந்துவிட்டார் 2026 தேர்தலில் ப ஜ க வேட்பாளர் அனைவரும் டெபாசிட் வாங்க பாடுபடுவர்


MADHAVAN
டிச 04, 2024 13:05

மெட்ராஸ் மதர??? என்ன மூடரா? ஐ பி எஸ் ஐ எ எஸ் என்று படித்தவருக்கு மட்டுமே அரசியல் அறிவு இருப்பதைப் போலவும், மற்றவருக்கு அறிவு இல்லாதது போலவும் உள்ளது உம்முடைய கருது, அப்படி பார்த்தால் என்ன மூடரா? மெத்த படித்த மேதாவிகளைவிட, அடிப்படை அரசியல், மற்றும் அனுபவத்தால் நல்ல திறமைமிக்க தலை சிறந்த தலைவர்கள் இங்கு ஏராளம், அண்ணாமலை போன்ற ஒரு அரைவேக்காட்டுக்கு இதுவே கடைசி முறை,


Madras Madra
டிச 02, 2024 17:29

இங்கு சிலர் அண்ணாமலையினை காமெடியனாக சித்தரிக்க முயல்கிறார்கள் இது ஒரு நயவஞ்சக பரப்புரை அண்ணாமலை நன்கு படித்தவர் சிறந்த அறிவாளி அரசியல் சாராத அவருடைய பல பேச்சுக்களை இவர்களால் புரிந்து கொள்ள கூட முடியாது ஆன்மீக அறிவு மிக சிறப்பு தேர்தலில் ஜெயிக்க தெரிந்தவன் மட்டுமே சிறந்த தலைவன் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களை என்னே என்று சொல்வது காமராஜரையே தோற்கடித்து சுய இன்பம் அடைந்த கூட்டம்தானே


MADHAVAN
டிச 06, 2024 13:34

மெட்ராஸ் மதர??? என்ன மூடரா? ஐ பி எஸ் ஐ எ எஸ் என்று படித்தவருக்கு மட்டுமே அரசியல் அறிவு இருப்பதைப் போலவும், மற்றவருக்கு அறிவு இல்லாதது போலவும் உள்ளது உம்முடைய கருது, அப்படி பார்த்தால் மோடி என்ன மூடரா? மெத்த படித்த மேதாவிகளைவிட, அடிப்படை அரசியல், மற்றும் அனுபவத்தால் நல்ல திறமைமிக்க தலை சிறந்த தலைவர்கள் இங்கு ஏராளம்


MADHAVAN
டிச 02, 2024 11:08

அண்ணாமலை வருகையால் பிஜேபி இல் தினம் தினம் புது புது பொய்மூட்டை கட்டவிழ்க்கப்படும்,


AMLA ASOKAN
டிச 02, 2024 09:08

அமெரிக்காவின் ட்ரம்பை விட அண்ணாமலையின் சென்னை வருகை தான் இன்றைய முக்கிய செய்தி . இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழ்நாடு இனி மேலே வந்து விடும் .


ram prasath
டிச 02, 2024 06:12

அண்ணாமலை தமிழ் நாடு வந்ததும் திருவண்ணாமலையில் பறை uruludhu


Thiagu
டிச 01, 2024 22:09

ஆக அண்ணாமலை டெபாசிட் வாங்கிடுவார்


AMLA ASOKAN
டிச 01, 2024 22:06

தமிழ் நாட்டில் அரசியல் செய்ய லண்டனில் படிக்க வேண்டுமா ? அல்லது பழைய வேலைக்கு திரும்பி போக பயன்படுமா ?


hari
டிச 01, 2024 22:20

அவர் என்ன பண்ணா உமக்கு என்ன......வழக்கம்போல 200 ரூபாய் வாங்கிட்டு தலைல மண்ணை போட்டுக்கோ


Oviya Vijay
டிச 01, 2024 22:03

அவரச்சும்மா வெச்சு செஞ்சு கேலி கிண்டல் பண்றோம்னு கூட தெரியாம "சும்மா அதிருதில்ல" என்று மடத்தனமாக முட்டு கொடுக்கும் சங்கிகளை என்னவென்று சொல்வது. ஒன்றுக்கும் ஆகாத வாய்ச்சவுடால் மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள, ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுப் போய் விழி பிதுங்கி நிற்கும் ஒரு காமெடியரைப் பார்த்து நீங்கள் வேண்டுமானால் பூரிப்படைந்து கொள்ளுங்கள். எங்களுக்கு அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி. அவ்வளவே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை