உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்கள் பணியே லட்சியம். மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களின் பேரன்பில் கோவை மாவட்ட கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது.கோவையில் கள ஆய்வு தொடங்கினேன். தமிழகம் முழுவதும் தொடர்ந்து வருவேன். அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றும் என்ற உறுதியை வழங்குகிறேன். நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன்.மக்கள் பணியே லட்சியமாகக் கொண்டுள்ளதால், மறுபடியும் திமுக ஆட்சி உறுதி. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க.,, கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். கோவை மண்டலம் தி.மு.க.,வின் கோட்டையாக திகழ்கிறது. கோவையில் எல்காட் ஐடி பூங்காவை திறக்க சென்ற போது ஆறு கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதியது.தொலைநோக்கு பார்வை கொண்ட தி.மு.க., எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்குவது வழக்கம். 2026ம் ஆண்டு ஜனவரியில் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் திறக்கப்படும். கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியை கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Matt P
நவ 15, 2024 18:46

2026ம் ஆண்டு ஜனவரியில் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் திறக்கப்படும்....பேரு கருணாநிதின்னு தானே வைப்பீங்க. உங்க அப்பன் பேரை வைக்காமல் இன்னொருத்தன் அப்பன் பேரையா வைக்க முடியும்? இல்லையா?


Matt P
நவ 15, 2024 18:44

மக்களும் கையேந்த தயாராயிருக்காங்க.


MADHAVAN
நவ 11, 2024 13:32

இந்தமாதிரி பேசினால், அடிமை கூட்டத்துக்கும், பார்ட்டிக்கு வயுறு ஏறியதா ? இப்போ வருவனுங்க பாருங்க


Naga Subramanian
நவ 08, 2024 13:34

பயத்தில் ஏற்பட்ட பினாத்தல் இது.


G Mahalingam
நவ 08, 2024 09:21

திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் தமிழ் நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. இப்போது அவ்வளவு கேடு கெட்ட ஆட்சி நடைபெறுகிறது


பேசும் தமிழன்
நவ 08, 2024 08:48

ஆசை... தோசை... அப்பளம்.... வடை..... ஒரு முறை தான் தமிழக மக்கள் ஏமாந்தவர்கள்...... மறுபடியும் ஏமாற மாட்டார்கள்.


venugopal s
நவ 08, 2024 07:15

மூன்றாம் முறையாக மத்தியில் பாஜகவின் ஆட்சியையே சகித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மாநிலத்தில் இரண்டாம் முறை திமுகவை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..


vijai
நவ 08, 2024 08:20

loose talk


Hari
நவ 08, 2024 09:33

சிறப்பான ஜோக்கர் வேணுகோபால்


xyzabc
நவ 12, 2024 06:45

வேணு குடி போதையில் பேசுவது போல உள்ளது


Matt P
நவ 15, 2024 18:48

தமிழ் ஆட்டு மக்களுக்கும் சகிப்பு தான் இருக்கிறது என்பதை அழகா சொல்றீங்க.


indian
நவ 08, 2024 06:22

உண்னம தான் முதல்வரே ஆனால் இந்த தடவை ரூபாய் 200 கினடயாது விலைவாசி (மின்சாரம், சொத்து வரி, பத்திரப்பதிவு, பால்)எல்லாம் விண்வெளி மூட்டும் அளவுக்கு ஏறி விட்டது. அதனால் தயவு செய்து இந்த மக்களுக்கு ரூபாய் 500 தரும்படி கேட்டுக் கொள்கிறேம். அடுத்த முனற நீங்கள் வந்து விட்டால் ஆட்சிக்கு இன்பநிதிக்கு மகளிர் பாதுகாப்பு துறை அனமச்சர் பதவியை கொடுத்து விடுங்கள். எம்ஆர் ராதா சொல்வது போல் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். தமிழ்நாட்டுக்கு சபீரிசன் நாடு என்று பெயர் மாற்றி விடுங்கள். திமுக ஆட்சியில் தான் அத்தன தொழில்கள் அழிந்து வருகிறது ஆனால் எல்லாம் சிறப்பாக இருப்பது போல் மாய உருவாக்கி வருகிறார்கள் இவர்கள் திரும்ப ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடு தான்


Mani . V
நவ 08, 2024 05:55

ஆயிரம், ரெண்டாயிரம், குவாட்டர், கோழிப் பிரியாணி, கொலுசு, அண்டா, குண்டா முதலியவற்றுக்கு சோரம் போகும் மக்கள் இருக்கும் வரையிலும் திமுக வுக்கு கவலையில்லை. மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து கொள்ளையடிக்கலாம்.


தனி
நவ 08, 2024 02:40

என்னது உன் மொகரகட்டய பாக்க 6 கிமீ தூரம் மக்கள் அலைமோதியதா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை