உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் துறையை சேர்க்கக்கூடாது

வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் துறையை சேர்க்கக்கூடாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: இந்தியா அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.வெளிநாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும், இரு தரப்பு ஒப்பந்தங்களிலும் இந்தியா இதுவரை வேளாண்மையை சேர்க்காமல் தவிர்த்து வருகிறது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு இணையாக உற்பத்தி மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் குறைந்த விலையில் உலக சந்தையில் விளைபொருட்களை விற்கின்றனர்.மேலைநாடுகளில் உள்ள விவசாயிகள் குறைந்தபட்சம் 500 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்கின்றனர்.இந்தியாவில் 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 92 சதவீதம். இந்தியாவில் உற்பத்தி செய்த உணவுப்பொருட்களுக்கு உரிய விலையும், உற்பத்தி மானியமும் கிடைக்காமல் விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்திக்கின்றனர். வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஆண்டுக்கு பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் என்கிறார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி.அவர் கூறியதாவது: இந்தியா தனது வேளாண் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்றும் இரு தரப்பு வர்த்த ஒப்பந்தத்த பேச்சு வார்த்தையில் விவசாய பொருட்களை விலக்கி வைக்க முடியாது என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் கூறுகிறார்.இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையில் வேளாண்மை இடம்பெறாது என்று மத்திய அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம்பெறுமானால் அமெரிக்க விவசாய பொருட்கள் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் போது இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Iyer
ஏப் 22, 2025 08:22

தப்பித்தவறி கூட மேற்கத்தியர்கள் உடன் விவசாயத்தில் எந்தவித உடன்பாடோ AGREEMENT ம் செய்யக்கூடாது. பசு ஆதார இயற்கை விவசாயத்தை கட்டாயப்படுத்தி நாம் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் நச்சற்ற சத்துள்ள உணவு ALIKKAMUIYUM.


Iyer
ஏப் 22, 2025 08:17

நம்மாழ்வார் அறிவுரையின்படி நாம் நமது வேளாண்மையை 100 வருடங்கள் பின்னோக்கி கொண்டு செல்லவேண்டும். சிக்கிம் மாநிலம் போல் ரசாயன விவசாயத்தை முழுவதும் ஒழிக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 09:35

அப்போ மக்கள் தொகையையும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிற்கு குறைக்க வேண்டும். இயற்கை விவசாயம் மூலம் 80 கோடி பேருக்குக் கூட இரண்டு வேளை உணவளிக்க முடியாது. மீதி மக்கள் பட்டினி கிடக்க வேண்டியதிருக்கும்.இலங்கை உதாரணம்.


GMM
ஏப் 22, 2025 08:02

5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 92 சதவீதம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது. 5 ஏக்கர் கொண்டு உங்கள் குடும்பம் / உள்ளூர் தேவைக்கு பயிர் செய்து கொள்ளுங்கள். வர்த்தகத்தில் நுழைய சில ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. ஆவணம் அறியாமை, நில உச்ச வரம்பு, உழுபவனுக்கு நிலம், விவசாயம் தெரியாதவர்கள் கடன் வாங்க நிலம் விற்பனை, அபகரிப்பு மூலம் கைமாறியது. சிறு, குறு நிலம் ஆனது. வர்த்தக ஒப்பந்தம் இவர்களை பாதிக்காது. ஒரு தறி, ஒரு செக்கு, ஒரு மாடு.. வைத்து இருப்பது தன், உறவினர் தேவையை பூர்த்தி செய்ய போதும்


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 06:22

அமெரிக்காவில் எந்த வேளாண் பொருள் விலை குறைவாக கிடைக்கிறது ? ஆப்பிள் பீச் பிளம்ஸ் எல்லாமே விலை அதிகம் .சூதாட்டம் ஆடி தற்கொலை செஞ்சுக்கிரகங்க தான் இந்தியாவில் அதிகம்


புதிய வீடியோ