உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரலை கடித்தவர் பற்கள் உடைப்பு: அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் மோதல்

விரலை கடித்தவர் பற்கள் உடைப்பு: அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெ.நா.பாளையம்: கோவையில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.கோவை பெரியநாயக்கன்பாளையம் அ.தி.மு.க., கிளை சார்பில் கஸ்துாரிபாளையத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க.,வை விமர்சனம் செய்து பேசினர். இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ், அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க., பிரமுகர் குணாவிடம் தட்டிக் கேட்டார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், குணாவின் கைவிரலை விஷ்வபிரகாஷ் கடித்தார். குணாவின் உறவினர் ஒருவர், விஷ்வபிரகாசை தாக்கியதில், இரண்டு பற்கள் உடைந்தன. குணாவும், விஷ்வபிரகாசும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அப்போது மருத்துவமனைக்கு வந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ரகுநாதனை, தி.மு.க.,வினர் அடித்து உதைத்தனர். முகத்தில் காயம் அடைந்த அவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து குணாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.,வினரும், விஷ்வபிரகாசுக்கு ஆதரவாக தி.மு.க.,வினரும் மருத்துவமனை முன் திரண்டனர். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரோடு ஈஸ்வரன் கோவில் முன் தி.மு.க.,வினரும், ஜோதிபுரத்தில் அ.தி.மு.க.,வினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., (பொறுப்பு) அதியமான் உறுதி அளித்ததையடுத்து, இரு தரப்பினரும் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால், கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிந்தனை
மார் 31, 2025 15:21

ஆஹா தமிழகத்தின் லட்சணமும் சந்தி சிரிக்கிறது


Dharmavaan
மார் 31, 2025 12:00

ரவுடி பொருக்கி கூட்டம் திராவிட கூட்டம்


RAMESH
மார் 31, 2025 11:56

பேரூராட்சி தலைவர் விஸ்வ பிரகாஷ் ரவுடி ராஜ்யம் நடத்துவது உறுதியாகி விட்டது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உடன் கைகலப்பில் ஈடுபட்டார்.. போலிஸ் தேடிய போது தலைமறைவு வாழ்க்கை.. சூழ்ச்சி செய்து பதவியை பிடித்தார்.. அரசியலுக்கு லாயக்கற்ற நபர்....


M Ramachandran
மார் 31, 2025 11:36

இரு திருட்டு திராவிட கட்சிகள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபணம் ஆகிறது


sankaranarayanan
மார் 31, 2025 10:43

வெட்கமாக இல்லை அரசியல் கட்சி பிரமுகர்கள் பற்கள் உடைப்பு கைகால்கள் முறிப்பு இவர்கள் எல்லோருமே காட்டுமிராண்டி பேர்வழிகள்தான் என்று முன்பே யாரோ ஒரு பெரிய அரசியல்வியாதி சொல்லியிருக்கிறாரே அதை இவர்கள் நிரூபித்து காட்டுகிறார்கள் இவர்களை கூட்டில்தான் அடைக்க வேண்டும்


Barakat Ali
மார் 31, 2025 10:15

ஒரு கட்சி ஆளுகையில் இன்னொரு கட்சிக்கு கட்டிங் போவது அந்நாள் தொடங்கி இந்நாள் வரை உண்டு .....


Padmasridharan
மார் 31, 2025 08:18

இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு தேவையா.. என்ன நோக்கத்துடன் சேர்த்து வைக்கிறார்கள், கோடிகளை பார்த்து சேர்க்கவா அல்லது ஆட்சிகளை பிடித்து உட்காரவா.


Sampath Kumar
மார் 31, 2025 07:42

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது இதான் போல


Kasimani Baskaran
மார் 31, 2025 07:20

கற்காலத்தில் பிறந்திருக்க வேண்டியதுகள்... இப்பொழுது பிறந்து வந்து உயிரை எடுக்கிறதுகள்..


Appa V
மார் 31, 2025 06:17

கருத்து போடவே 200 கை விரலை கடிக்க ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை