ஆக.30ல் அ.தி.மு.க., மாவட்ட செயலர் கூட்டம்
சென்னை:அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுடன், ஆக.30ம் தேதி, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், ஆக.30ம் தேதி காலை 10:30 மணிக்கு, கட்சியின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.