உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.கடந்த 2011 - 2016 அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.அந்த பணத்தை, தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, தன் தாய் முத்தம்மாள் பெயரில், மகன்கள் பிரபு, சண்முகபிரபு மற்றும் மைத்துனர் பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக கடனாக பெற்றது போல கணக்கு காட்டியதாக, புகார் கூறப்படுகிறது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, அக்., மாதம் வைத்திலிங்கம் மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தனர்.இந்நிலையில், 2002ம் ஆண்டு பண மோசடிதடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.வைத்திலிங்கம் இப்போது, ஓ.பி.எஸ்., அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mani . V
ஜன 16, 2025 05:44

நம்பித் தொலைவோம், இன்றைய மந்திரிகள் அனைவருமே யோக்கிய சிகாமணிகள், பரம ஏழைகள், குடிசைவாழ் மக்கள்.


Kasimani Baskaran
ஜன 15, 2025 22:14

ஆத்தா தீம்க்கா நபர்...


தாமரை மலர்கிறது
ஜன 15, 2025 20:53

பிஜேபி தலைமைக்கு கீழ் வெகுவிரைவில் அதிமுக அடிபணியும் என்பதில் சந்தேகமில்லை. வலிக்கிற இடத்தில அடிச்சா, அம்மியும் நகரும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. சொத்துக்களை புடுங்கினா தான் கூட்டணிக்கு குனிஞ்சுக்கிட்டே வரும். எடப்பாடி படுத்துகிட்டே கூட வருவார்.


venugopal s
ஜன 15, 2025 20:10

பாஜக அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வது பட்டவர்த்தனமாக தெரிகிறது!


Ganesh Subbarao
ஜன 16, 2025 12:04

செய்தியை சரியா படி அவரு இருப்பது ஓபிஸ் அணி சரியான கூமுட்டை


Ramesh Sargam
ஜன 15, 2025 19:58

ஒரு அரசியல் சொத்துக்களை முடக்கினால் போதாது. முன்னாள், இந்நாள், இனி வரப்போகும் நாட்களில் உருவாகும் அரசியல் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படவேண்டும். இன்று தழகத்தின் தமிழர்களின் மீதுள்ள கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழவழி செய்யுங்கள். அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


Barakat Ali
ஜன 15, 2025 19:46

அதிமுகவை மொத்தமாக முடித்துவிட்டு திமுகவுடன் சல் லாபம் செய்வோம் .....


GMM
ஜன 15, 2025 18:51

கட்சி உறுப்பினருக்கு மேல் பதவி வகிக்கும் போது இருந்த சொத்தை தவிர உயிர் தோழி, அமைச்சர் , உறவினர் பலர் சொத்துக்களை முடக்கலாம். முடக்கிய சொத்தில் 10 சதவீதம் தொடர்புடைய ஆடிட்டர், வக்கீல் சொத்தில் பிடித்தம் செய்யலாம். வழக்கில் சிக்கிய அரசியல் வாதிகள் அனைவருக்கும் பொருந்த வேண்டும். இல்லாவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது.


கல்யாணராமன்
ஜன 15, 2025 18:46

சொத்துக்கள் முடக்கம் என்பது சாதாரணமாக செய்து விட முடியாது. கணக்கில் வராத சொத்து என்பது முழுவதும் தெரிந்த பிறகுதான் முடக்க முடியும். நான் சொல்வது சரிதானே? அதிமுகவின் ஒரு முன்னாள் அமைச்சர் சேர்ந்துள்ள சொத்து மட்டும் தெரிய வந்துள்ளது. மற்ற முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், எம் பிக்கள்,வாரிய தலைவர்கள் சொத்துக்கள் சோதனை செய்யப்பட்டால் எவ்வளவு தேறும்? அடித்து திமுகவும் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், எம் பிக்கள் அனைவரின் சொத்துக்களும் சோதனை இடப்பட்டு கண்டு பிடிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் மொத்த கடனை அடைத்த பிறகு உபரியாக பல கோடி தேறும்.


J.Isaac
ஜன 16, 2025 08:52

இந்தியா முழுவதுமாக நடந்தால் இந்திய கடன் 60 லட்சம் கோடியை அடைத்து விடலாம்.


N Sasikumar Yadhav
ஜன 15, 2025 18:43

விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளான திராவிட முன்னேற்ற கலகத்தினரின் சொத்துக்களையும் முடக்கவேண்டும்


சம்பா
ஜன 15, 2025 18:40

ஒன்றும் பிரச்சனை இல்ல எல்லாம் : பேசி முடிக்க படும் சுமுகமாக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை