மேலும் செய்திகள்
தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.,வை பலப்படுத்துவோம்
01-Nov-2024
சென்னை:அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாள் நுாற்றாண்டு விழா, நவ., 24 காலை 10:00 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.இதில் பங்கேற்க, கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், வைகைச் செல்வன் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.இவ்விழாவில், கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ள நிலையில், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அடுத்தடுத்து அழைப்பு வழங்கி, அனைவரையும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறினர்.
01-Nov-2024