உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொதுக்கூட்டம் பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க., பொதுக்கூட்டம் பழனிசாமி அறிவிப்பு

சென்னை:'மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் 25ல் அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க., மாணவரணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ல் தமிழகத்தில் துவங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சி. அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த, அ.தி.மு.க., மாணவரணி சார்பில், வரும் 25ம் தேதி சனிக்கிழமை, கட்சி மாவட்டங்களில பொதுக்கூட்டங்கள் நடக்கவுள்ளன.வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி -- கிருஷ்ணகிரி, திண்டுக்கல் சீனிவாசன் -- திண்டுக்கல், -வேலுமணி- கோவை, ஜெயகுமார் -- வட சென்னை, சி.வி.சண்முகம் -- விழுப்புரம் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பர்.வரும் 25ம் தேதி, அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில் ஊர்வலமாக சென்று, அன்னை தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப் போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ