அ.தி.மு.க.,வில் வெள்ளத்துரை
சென்னை: ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் எஸ்.பி., வெள்ளத்துரை நேற்று அ.தி.மு.க.,வில், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். அவர் அளித்த பேட்டி: அரசு பணியில் இருந்ததால், அரசியலுக்கு வரவில்லை. தற்போது, ஓய்வு பெற்று விட்டேன். அ.தி.மு.க., ஒரு நிலையான கட்சி என்பதால் இணைந்துள்ளேன். எம்.ஜி.ஆர்., வேறு; தற்போது உள்ள முதல்வர் வேறு. இருவரும் நடிகர்கள் என்ற காரணத்தால் அவர்களை ஒப்பிட முடியாது. மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு கூறினார்.