உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்துவரும் அதிமுக.,வின் செல்வாக்கு

தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்துவரும் அதிமுக.,வின் செல்வாக்கு

சென்னை: கடந்த 2014ல் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக.,வின் செல்வாக்கு சரிந்து வருகிறது.லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியான நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி மற்றும் பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தது. இதில் அதிமுக.,வின் செல்வாக்கு படிப்படியாக சரிவை சந்தித்து வருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 37 இடங்களை வென்றது. அந்த தேர்தலில் அதிமுக.,வின் ஓட்டு சதவீதம் 44.92 ஆக அதிகரித்திருந்தது. அப்படி இருந்த அதிமுக.,வின் நிலைமை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சரியத் துவங்கியது. 2019ல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் ஆகிய இரட்டை தலைமையுடன் லோக்சபா தேர்தலை அதிமுக சந்தித்தது. பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. ஓட்டு சதவீதமும் 19.39 சதவீதமாக குறைந்தது.தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வெளியேற்றிவிட்டு தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது இபிஎஸ் தலைமையிலான அதிமுக. அதில் 32 தொகுதிகளில் அதிமுக வேட்பாளரும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும் என 34 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. இவை அனைத்திலும் தோல்வியடைந்தது. ஆனால் முந்தைய லோக்சபா தேர்தலை விட ஓட்டு சதவீதம் சற்றே அதிகரித்து 20.46 ஆக இருக்கிறது.

சட்டசபை தேர்தல்

அதேபோல், சட்டசபை தேர்தல்களை பொறுத்தவரை 2016ல் ஜெயலலிதா தலைமையில் தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் உட்பட மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது. அதில் 136 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல், அதிமுக மட்டும் 40.88 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 179, கூட்டணி கட்சிகள் 12 என 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் போட்டியிட்டது. அதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றன. ஓட்டு சதவீதமும் 33.29 ஆக குறைந்தது.இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது அக்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

konanki
ஜூன் 06, 2024 05:44

பாஜக டெல்லி தலைமையுடன் நல்ல முறையில் பேசி கூட்டணி வைத்திருந்தால் 15 சீட் வெற்றி வந்திருக்கும். மத்திய அமைச்சரவையில் 2 காபினெட் அமைச்சர் பதவி உறுதியாக கிடைத்திருக்கும். எங்க கிராமத்தில் சொல்வாங்க எது மேலேயோ கோவித்து ஏதோ பண்ணமா போனா யாருக்கு நஷ்டம்??


konanki
ஜூன் 06, 2024 05:39

10 தேர்தல் தோற்ற பழனிச்சாமி என்ற மாபெரும் சாதனையாளர்


konanki
ஜூன் 06, 2024 05:37

அதிமுக வை முழுமையாக அழிக்காமல் விடமாட்டார் பொது செயலாளர்


ramani
ஜூன் 06, 2024 05:09

இடைப்பாடி பழனிச்சாமியின் தவறினால் இந்த கதி நேர்ந்திருக்கிறது. முதலில் தலைமையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் விஜய்காந்த் கட்சி சீமான் கட்சி போன்று தேய்ந்து விடும்.


Soumya
ஜூன் 05, 2024 23:04

பதவி சுகத்துக்காக கட்சியை அழித்த எட்டப்பன் தீமுகாவின் கைக்கூலி


Ranganathan
ஜூன் 05, 2024 22:50

வைகோ போல எடப்பாடி தப்பு தப்பாக முடிவு எடுத்து அதிமுகவை மறுமலர்ச்சி தி.கழகம் போல காணாமல் ஆக்கி விடுவார் போல. திமுக கூட்டணியின் 40 தொகுதி வெற்றிக்கு அடிப்படை காரணமே, தனது ஈகோவால் பிஜேபியை கூட்டணியிலிருந்து விரட்டியது தான். அந்த கூட்டணி மட்டும் இருந்து இருந்தால் 35 சீட் வரை ஜெயித்து இன்று சந்திரபாபு நாயுடு போல கிங் மேக்கர் என பெருமையாக வலம் வந்திருப்பார்


Tiruchanur
ஜூன் 05, 2024 21:20

எடுபிடி எடப்பாடி கதை கந்தல் தான். இனி அவர் அரசியல் பயணம் முடிவடையும். அதிமுக தொண்டர்கள் இனி அவரை விட்டு வைக்க மாட்டார்கள். எப்படிப்பட்ட கட்சி, இப்படி சிறுபான்மையினர் ஓட்டுக்காக தன்னையே அழித்துக்கொள்ளும் நிலை வந்து விட்டது


Rajesh
ஜூன் 05, 2024 21:19

பழனிசாமி பகல் கனவு கண்டு வீணா போய் விட்டார்...... இஸ்லாமியர் ஓட்டு கிடைக்கும்னு நெனைச்சி குல்லா போட்டுக்கிட்டார் இப்போ தலையில துண்டு தான் விழுந்துருக்கு


sankaranarayanan
ஜூன் 05, 2024 21:05

எடப்பாடியும் பன்னீர் செல்வமும் ஆளுக்கு ஒரு இலையை பிய்த்துக்கொண்டு சண்டைபோட்டதின் விளைவு இது இரண்டு இலைகளும் கருகிவிட்டன இனி அவைகளை புத்துயிர் பெற இந்த இருவர்களையும் கட்சியிலிருந்து அகற்றிவிட்டு புத்தம் புதிய இளமையான நபர் ஒருவர் கூட்டமாக வந்து கட்சி தலைமைக்கு வந்து இரண்டு பாகங்களையும் சேர்த்தால்தான் இனியாவது பசுமையான இரட்டை பார்க்க முடியும் யாராவது உடனே முன் வருவார்களா?


M Ramachandran
ஜூன் 05, 2024 18:32

அறிவு கூர்மையில்லாத தலைமையினால் கட்சி தேய்க்கிறது. இந்த முன் யோசனையற்ற பழனியின் தெளிவற்ற தன்னிச்சை செய்கையால் கட்சி தேய்ந்து சின்னாபின்னமாகி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கு. சுய நல கேசுகளிலிருந்து தப்பிக்க தீ மு க்கா வுடன் மறைமுக அஜெண்டா வைத்து கொண்டு கட்சியையும் தொண்டார்களையும் பாலி கொடுத்து கொண்டிருக்கிறார். பரிதாபம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை