மேலும் செய்திகள்
செயல்பாட்டுக்கு வந்தது தகவல் ஆணைய இணையதளம்
12-Jun-2026
சென்னை: இந்திய விமான நிலையங்களின் தரவுகளை அறிந்து கொள்ள, aai.aero என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின், விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், இந்திய விமான நிலையங்கள் தொடர்பான தகவல், மாநிலம் வாரியாக, மாதாந்திர பயணியர் வருகை விபரம் போன்றவை இடம்பெறும். விமான நிலையங்கள் வாரியாக, உள்நாடு மற்றும் சர்வதேச பயணியர் வருகை குறித்த விபரங்களை, ஆணையம் இணையதளத்தில் வெளியிடும். கடந்த சில நாட்களாக இதற்கான அணுமதியை, விமான நிலைய ஆணையம் ரத்து செய்து வந்தது. தற்போது, இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பயணியர் வருகை விபரங்கள், மீண்டும் வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
12-Jun-2026