உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகா திடீர் முடிவு; முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு சிக்கல்

கர்நாடகா திடீர் முடிவு; முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: தமிழக எல்லையை ஒட்டியுள்ள சோமனஹள்ளி என்ற இடத்தில், சர்வதேச விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு தீர்மானித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் நகரான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், கர்நாடகா எடுத்துள்ள இந்த முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

70 கி.மீ., இடைவெளி

ஓசூருக்கும், சோமனஹள்ளிக்கும் இடையிலான துாரம், 50 கிலோ மீட்டருக்கும் குறைவு. அதேசமயம், பெங்களூரின் வடபகுதியில் தற்போது செயல்படும் சர்வதேச விமான நிலையத்துக்கும், சோமனஹள்ளிக்கும், 70 கி.மீ.,க்கு மேல் இடைவெளி உள்ளது.ஒரே நகரில் இரண்டு விமான நிலையங்கள் அமையும் போது, 50 கி.மீ.,க்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை. அப்படி பார்த்தால், கர்நாடகா அரசு தேர்வு செய்துள்ள சோமனஹள்ளி மிகவும் பொருத்தமானது என்கின்றனர், அதிகாரிகள்.பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பது என, பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசு முடிவு செய்து விட்டது.

வேகம் காட்டவில்லை

ஆனால், தற்போதுள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துக்கும், கர்நாடக அரசுக்கும் உள்ள ஒப்பந்தப்படி, 2033 வரை, 150 கி.மீ., சுற்றளவில் இன்னொரு விமான நிலையம் அமைக்கக்கூடாது. இதனால், கர்நாடக அரசு வேகம் காட்டாமல் இருந்தது.ஓசூரில், 2,000 ஏக்கரில் ஏர்போர்ட் அமைப்போம் என, சட்டசபையில் ஜூன் 27ம் தேதி ஸ்டாலின் அறிவித்ததும், கர்நாடகா சுதாரித்தது. ஆண்டுக்கு மூன்று கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக ஓசூர் விமான நிலையம் உருவாக்கப்படும் என, ஸ்டாலின் சொல்லி இருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை தொடர்ந்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள், ஓசூரிலும் அதை சுற்றிலும் ஆய்வு செய்து, ஐந்து இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, கெம்பகவுடா விமான நிலைய நிர்வாகத்துடனும், ஓசூரில் தற்போது இயங்கி வரும் சிறிய விமான நிலையத்தின் நிர்வாகத்துடனும் தமிழக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதன் பின்னரே கர்நாடக அரசின் செயல் வேகம் பிடித்தது. பெங்களூரை சுற்றிலும், ஐந்து இடங்களை பட்டியலிட்டு விவாதித்தனர். தெற்கு பெங்களூரில் ஹரோஹள்ளி, சோமனஹள்ளி, தென்மேற்கே பிடதி ஆகியவை ஆராயப்பட்டன. பிடதியில் நிலப்பரப்பு சமதளமாக இல்லாததால், அது பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டது. ஹரோஹள்ளியில் ஏற்கனவே தொழிற்சாலைகள் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், அதுவும் சரிப்படாது என்று முடிவு செய்தனர்.

பெங்களூருக்கு வடமேற்கே உள்ள குனிகல், தோப்ஸ்பெட் ஆகியவற்றை ஆராய்ந்த போது, கெம்பகவுடா விமான நிலையத்துக்கு மிக அருகில் உள்ளதால், இவையும் நிராகரிக்கப்பட்டன. சோமனஹள்ளியில் நிலம் எடுப்பது ஒரு பிரச்னையாக இருக்காது. ஏற்கனவே அங்கு, 3,000 ஏக்கர் திறந்த நிலம் இருக்கிறது. மேலும் 2,000 ஏக்கர் ஆர்ஜிதம் செய்வதில் சிரமம் இருக்காது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர். 'சர்வதேச தரத்தில் 5,000 ஏக்கரில் விமான நிலையம் அமைப்பது நம் இலக்கு. தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் கட்டவிடாமல் தடுக்க நினைக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் நலனே அரசுக்கு முக்கியம்' என்று துணை முதல்வர் சிவகுமார் சொல்கிறார்.இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைத்தால், ஓசூர் திட்டத்தை தமிழகம் கைவிடுவதை தவிர வழியில்லை. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை கர்நாடகா நிராகரித்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஓசூர் அதிவேகமாக வளர்ச்சி அடையும்; அதனால், பெங்களூரின் சர்வதேச முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற அச்சமே உண்மையான காரணம் என, வல்லுனர்கள் சொல்கின்றனர். ஓசூரில் விமான நிலையம் வந்தாலும், பெங்களூருக்கு அதே போன்ற பாதிப்பு நேரும். எனவே தான் அவசரமாக பெங்களூருக்கு தெற்கே, ஓசூரை ஒட்டிய சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டி யாராவது பிரச்னை கிளப்பினால், சோமனஹள்ளியில் அமைக்க இருப்பது கெம்பேகவுடா ஏர்போர்ட்டின் விரிவாக்கம் என்று வாதிட கர்நாடக அரசு முன்வரலாம். தேவைப்பட்டால் ஒப்பந்தத்திலும் திருத்தம் செய்ய அந்த அரசு தயாராக உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

kumar.s.
அக் 22, 2024 02:53

ஒன்னும் கவலைப்படவேண்டாம் நண்பா. நம்ம அதானிய கூப்பிட்டு ஒரு கொலாபரேஷன் அக்கிரமெண்ட் போட்டுட்டா சோலி முடிஞ்சுது அம்புடுதான்.


praveen kumar
அக் 21, 2024 16:54

ஸ்டாலின் ராகுல் காந்தி இக்கு ஃபோன் போட்டு ஏர்போர்ட் ஓசூர் ல தான் வரணும்..இல்லே உங்களுக்கு எலேச்டின் ல ஆதரவு இல்லை இன்னு சொன்ன போதும்.. எதுக்கு இவ்ளோ தலை வலி


நிக்கோல்தாம்சன்
அக் 21, 2024 15:20

என்னோட விவசாய நண்பர் , தமிழ் நாட்டு விவசாயி சஞ்ஜீவி இப்போ குனிகல் அருகில் தான் விவசாயம் செய்து வருகிறார் , அவர் மிகவும் வருந்தி கொண்டிருந்தார் , இப்போ குஷியாயிருப்பாரு


நிக்கோல்தாம்சன்
அக் 23, 2024 17:35

அவர் இந்த மாதிரி விமான நிலையம் வந்தால் அங்கு விவசாயம் செய்யவிடாமல் புரோக்கர்கள் தொல்லை அதிகமாகி விடும் என்று வருந்தினார் , அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் புரோக்கர்கள் என்றால் கேட்க வேண்டுமா ?


பாமரன்
அக் 21, 2024 14:36

நம்ம தளத்தில் மேயும் பகோடா அறிவுவாளிங்க படுபயங்கரமான ஐடியால்லாம் குடுத்து கலகலப்பாக வச்சிக்கிட்டு இருக்காங்க... ஜாலியா இருக்கு படிக்க... மேபி சாயங்காலத்துக்குள்ள யாராவது அண்ணா அறிவாலயம் அண்ணா சமாதி போன்றவற்றை காலி பண்ணிட்டு பஸ் ஸ்டேண்ட் மாதிரி ப்ளேன் ஸ்டேண்ட் கொண்டுவரனும்னு ஐடியாவையும் சொல்வாங்கன்னு எதிர்பார்க்கிறோம்... அப்புறம் இந்த விமான போக்குவரத்து துறை மட்டுமே கட்டாயத்தின் பேரில் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றி இந்தியாவில் நடக்கும் ஒரேயொரு ஏரியா. நினைச்ச மாதிரியெல்லாம் எதுவும் செய்திட முடியாது... ஸோ.. கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிச்சி பார்த்ததில் இரண்டு ஸ்டெப் ஆக்சன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்னு தோனுது... முதலில் ஒசூர் பக்கம் அதாவது ஏற்கனவே இருக்கும் சிறிய விமான நிலையத்தை ஒட்டியே தற்போதைய பெங்களூர் விமான நிறுவனம் இரண்டாவது ஏர்போர்ட் அமைக்க சொல்லலாம். அவிங்க எந்த அப்ஜக்சனும் பண்ண மாட்டாங்க... ரெண்டாவது மற்றும் முக்கியமா தற்போதைய பெங்களூர் விமான நிலையத்தை நம்ம ஸ்பான்சர் அடேஷ்னிக்கு சிங்கிள் டெண்டர்ல குடுக்கனும். அவர்களும் திறமையடைஞ்சிட்டாங்க... உதாரணமாக மும்பை விமானநிலையம். மேற்சொன்ன இரண்டும் தடக்கறப்போ சைலண்டா ஜி ஸ்கொயர் ஓசூரில் பாதியை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகள் கூட்டுகளவானிகள் மூலம் நடவடிக்கை எடுக்கும்.. சில சேப்பு கொடியர்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு போன்ற அப்பாவிகளை வச்சி ரெண்டு வருஷம் போராட்டம் மற்றும் மீடியா கவரேஜ் பார்த்துக்கலாம்... எனக்கென்னவோ இதான் நடக்கும்னு தோனுது... எல்லாருக்கும் சான்ஸ்.. அதனால் என்னை வையப்பிடாது பகோடாஸ்... டீலா...??


Vijay D Ratnam
அக் 21, 2024 14:12

தமிழ்நாடு அவசியத்துக்கு செய்கிறது. கர்நாடகா வீம்புக்கு செய்கிறது. கர்நாடகாவின் இந்த அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு விரைந்து ஓசூர் சர்வதேச விமான நிலைய பணிகளை தொடங்க வேண்டும். விமான போக்குவரத்து துவங்குவதில் வேகம் காட்ட வேண்டும். எதிர்கால ஓசூருக்கு இணையாக கிருஷ்ணகிரியை டெவலப் செய்ய வேண்டும். ஓசூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது பெங்களூர் இரண்டாவது விமான நிலையம் நம்ம பாண்டிச்சேரி விமான நிலையம் போல காற்று வாங்கும். இரண்டு ஏர்போர்ட் செயல்பாட்டுக்கு வரும்போது கோடிக்கணக்கான ரூபாய் வெட்டி செலவு ஆகும்.


Parthiban
அக் 21, 2024 14:09

இதற்கு ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே நான் சிஎம் செல் க்கு யோசனை கூறியிருக்கிறேன். அதாவது கெம்பகௌடா விமான நிலையத்தில் இருந்து ஓசூர் 75 கிலோமீட்டர். ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது, அதையும் தாண்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரியமங்கலம் பேரூராட்சி. ஓசூரில் இருந்து கரியமங்கலம் சரியாக 75 கிமீ. கெம்பகௌடா விமான நிலையத்தில் இருந்து 152 கிமீ . விமான நிலைய ஒப்பந்தப்படி , 150 கி மீ குள் வேறு விமான நிலையம் அமைக்க கூடாது. மேலும், தற்போது கெம்பகௌடா விமான நிலையத்தில் இருந்து ஓசூர் 75 கிமீ. ஒரு கால் , ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடிய வில்லை என்றால் , இங்கிருந்து கெம்பகௌடா வி நி செல்ல 2 மணி நேரம் ஆகும் . போக்குவரத்து நெரிசல். அதுவே ஓசூரில் இருந்து கரியமங்கலம் 75 கிமீ. புதிய சாலை அமைத்தால் , 40 நிமிடங்களில் சென்று விடலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் கரியமங்கலம் தாலுக்கா அதனை சுற்றி உள்ள ஊர்கள் பயன் பெரும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 13:53

சரியான வாதம் செய்ய இயலாதவர்கள் தான் தனிமனித தாக்குதல் எழுதுகிறீர்கள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 13:52

இந்திய அரசியல் அமைப்பின் அதிகாரபூர்வ உண்மையை எழுதினால், கோட்டர், தத்தி என்று ஏதேதோ எழுதுகிறார்கள் பாவம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 13:51

சரியான வாதம் செய்ய இயலாதவர்கள் தான் தனிமனித தாக்குதல் எழுதுகிறீர்கள்.


raja
அக் 21, 2024 15:44

கேவலம் ருவா 200 காக படுபயங்கரமான முட்டு கொடுக்கும் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் லை யார் தான் மனிதனாக மதிப்பார்கள் உடன் பிறப்பே


திண்டுக்கல் சரவணன்
அக் 21, 2024 13:45

கர்நாடகாவுக்கு தமிழகம் வளர்வது எப்போதும் பொறுக்காது. எனவே தமிழகம் திட்டமிட்டபடி ஓசூரில் விமான நிலையம் கட்டவேண்டும். தென்கர்நாடக வளச்சிக்கு ஓசூர் விமான நிலையம் உதவும். தமிழகம் விரைந்து செயல்படவேண்டும்


முக்கிய வீடியோ