உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கவர்னருடன் அஜித் தோவல்... ஆலோசனை : உளவு தகவல்கள் குறித்து பேச்சு

தமிழக கவர்னருடன் அஜித் தோவல்... ஆலோசனை : உளவு தகவல்கள் குறித்து பேச்சு

சென்னை, செப். 1- சென்னை வந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேற்று காலையில் கவர்னர் ரவியை சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். நாட்டின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பான உளவு தகவல்கள் குறித்து, இருவரும் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. அஜித் தோவல் கடந்த மாதம் 29ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். அங்கு, வரும் 21ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் அங்கு நடந்த பாதுகாப்பு மாநாட்டில், தோவல் கலந்து கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7eri3en4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தார்.

இணைந்து பயிற்சி

சீனாவின் மூன்று போர் கப்பல்கள் கடந்த 26ம் தேதி இலங்கை சென்றன. அக்கப்பல்களுடன் இலங்கையின் விஜயபாகு என்ற போர் கப்பல் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது. அதேபோல், இந்தியாவின் ஐ.என்.எஸ்., மும்பை போர் கப்பலும் 26ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்றது. அக்கப்பலுடன் இலங்கையின் கஜபாகு போர் கப்பல் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டது.இரு நாட்டு கப்பல்களும் ஒரே நேரத்தில் இலங்கை சென்றதும், பயிற்சியை முடித்து, 29ம் தேதி நாடு திரும்பியதும், பல கேள்விகளை எழுப்பியது. இப்பின்னணியில், அஜித் தோவல் அவசர பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார்.

ஆய்வு

நேற்று காலையில் கவர்னர் ரவியுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்; மாலை 5:10 மணிக்கு டில்லி திரும்பினார்.கவர்னருடன் நடந்த ஆலோசனையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது குறித்தும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவுவது குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'வங்கதேசத்தில் இருந்து அசாம் வழியாக சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகள், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் குடியேறுகின்றனர். 'இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதாக கூறியிருந்தார்.

ஆலோசனை

அந்த விவகாரம் குறித்தும், போதைப் பொருள் நடமாட்டம் குறித்தும், இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் சில முறை அஜித் தோவல் தமிழகம் வந்து, கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது கவர்னர் மாளிகை தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நேற்றைய சந்திப்பு புகைப்படம் மட்டும், அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டதுகவர்னர் மாளிகை சார்பில், 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், 'தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், கவர்னர் ரவி, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து, விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனையை மேற்கொண்டார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

திராவிட மாடல் மனித நேய மாடல்
செப் 01, 2024 21:56

ஒரு உதவாக்கரை யின் வெட்டி வேலை


M Ramachandran
செப் 01, 2024 20:12

உருபடியாக ஒரு முன்னேற்றமும் இல்லை. CBI திரட்டி வைத்திருந்த ஆவணகங்களை இஙகுள்ள ஆளும் அரசியல் வாதிகள் தூண்டுதலால் அவர்கள் போலீசை வைத்து திருடி கொண்டு போனார்கள். என்ன செய்ய முடிந்தது.


N.Purushothaman
செப் 01, 2024 15:47

திருட்டு திராவிடனுங்க தீவிரவாதிங்க , போதை பொருள் கடத்துறவனுங்க கூட எல்லாம் சகவாசம் வச்சி இருந்தால் சந்திப்பு நடத்தி தானே ஆகணும் .... மொத்தத்தில் சமூக நீதி காத்தான் ஆட்சியில் தமிழகம் சர்வ நாசமாகி கொண்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது .. .


T.sthivinayagam
செப் 01, 2024 12:17

தமிழகத்துக்கு புது கவர்னர் எப்போது வருவார் ஏன் காலதாமதம் என தமிழக மக்கள் கேட்கின்றனர்


Srinivasan K
செப் 01, 2024 12:39

no chance for now at least next five years


tv swami
செப் 01, 2024 14:29

புலம்பியே saavu


sridhar
செப் 01, 2024 20:43

கிரண் பேடி வருவாங்க , ஓகேவா


ஆரூர் ரங்
செப் 01, 2024 10:48

பிடிபடும் மீன் திருடர்களை இலங்கையே தேயிலைத் தோட்டம் போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடுத்தலாம்.சிறையில் வைத்து ஓசிச் சாப்பாடு போட்டு திருப்பியனுப்புவதில் அர்த்தமில்லை. கடலின் அடியாழம் வரை வலைபோட்டு குஞ்சுகளையும் பிடித்து மீன்வளத்தை நிரந்தரமாக சிதைப்பது சற்றும் ஏற்க கூடியதல்ல. பவளப்பாறை களும் கூட சிதைக்கப்பட்டுவிட்டன.


Corporate Goons
செப் 01, 2024 10:19

மோடி ஏஜெண்டுகளின் உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் ஒன்றும் எடுபடாது


tv swami
செப் 01, 2024 14:31

ஜெய் ஶ்ரீ ராம்


பாமரன்
செப் 01, 2024 09:38

பார்க்கப்போனால் எங்க பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ இந்த விசிட்ல டிஸ்கஸ் பண்ணாமல் போன ஒரே விஷயம்


பாமரன்
செப் 01, 2024 09:34

மேபி நம்ம பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ பழைய சிரிப்பு போலீஸை பார்த்து நானும் ரிடையர் ஆகப் போறேன்...அதூக்கப்புரமாவது உன்னயே மாதிரி எதப்பத்தியும் கவலையில்லாமல் ங்ஙெங்ஙெங்ஙேன்னு திறிஞ்சிக்கிட்டு இருக்கும் டெக்னாலஜி பற்றி கேட்டிருப்பாரோ..?


Kasimani Baskaran
செப் 01, 2024 18:32

சிரிப்பு போலீஸ் ஏன் எஸ்ஆர்எம் மிலும் அதை சுற்றியும் திடீர் என்று வேலை செய்ய ஆரபித்தது? ஜிக்கு பயந்தா அல்லது கவர்னருக்கு பயந்தா? இல்லை உடன்பிறப்புக்கள் நலன் கருதியா?


ஆரூர் ரங்
செப் 01, 2024 09:33

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் குறுக்கே நிற்கிறது.( SR பொம்மை வழக்கு தீர்ப்பே அபத்தம்). அரசியல் சட்டத்திற்கு எதிராக நடக்கும் அரசுகளைக் கூட கலைக்க இயலவில்லை . பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகூட ஆளமுடிகிறது. . . நாடு நாசமாகவதில் சிலருக்கு மகிழ்ச்சியோ?.


பாமரன்
செப் 01, 2024 09:32

இன்னாடாயிது... ரெண்டு நாள் முன்னாடி தான் நம்ம ரகசிய ஏஜெண்ட் பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ இலங்கைக்கு யாருக்கும் தெரியாமல் போனதா சொல்லி குதூகலப்பட்டோம்... இப்போ என்னன்னா அது ஒரு மாநாடாம்ல... இந்த அலப்பறை தேவையா நமக்கு...


Ramasamy
செப் 01, 2024 10:57

200 உபிஸ் , நாட்டின் பாதுகாப்பு பற்றி .... சாராய கும்பலுக்கு என்ன தெரியும் ?