உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்புவனம்:சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரம் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், அஜித்குமாரை காவலர்கள் தாக்கிய வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார். இது வழக்கின் விசாரணைக்கு முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கிய வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில், சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் 2 போலீசார், பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அவரது வீட்டு வாசலில் இரண்டு சிவகங்கை மாவட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளார். வெளிமாவட்ட போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ள நிலையில் அவர்கள் ( ராமநாதபுர மாவட்ட) போலீசார் வரும் வரை இவர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் . 24 மணி நேர பாதுகாப்பு பணி என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ஆயுதப்படை போலீசார், ஒரு உள்ளூர் போலீசார் பணியில் உள்ளனர். மடப்புரம் கோவில் உதவி கமிஷனர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhakt
ஜூலை 03, 2025 23:13

திராவிஷ நரி பாதுகாப்பா?


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2025 22:45

பாலுக்கு பூனை பாதுகாப்பு. பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சி, திருட்டை தடுக்க திராவிட பாதுகாப்பு. இது போன்ற எத்தனை செய்திகளை படித்துவிட்டோம்.


Ramesh Sargam
ஜூலை 03, 2025 22:04

இப்படி ஒரு தனி மனிதருக்கு காவல் துறையினர் எவ்வளவு நாட்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும். ஆகையால் சக்தீஸ்வரனை மிரட்டுபவர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்களை கைதுசெய்து கடுமையாக தண்டிக்கவேண்டும். வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும்.


rama adhavan
ஜூலை 03, 2025 18:48

மிக பாத்துக்காப்பான இடம் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓரு பகுதிதான். அங்கு இவருக்கு வீடு கொடுத்து விடலாம். பாதுகாப்பும் பலமாக இருக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 03, 2025 18:41

பாலுக்கு பூனை காவலா? திருடன் கையிலேயே வீட்டு சாவி. சூப்பர் மாடல். சூப்பர் அப்பா. இது திராவிட மாடல் அல்ல... அதையும் தாண்டிய அப்பா மாடல்.


sankaranarayanan
ஜூலை 03, 2025 18:39

திராவிட மாடல் அரசில் இதெல்லாம் சகஜமப்பா துப்பு கொடுக்க வந்தவர்களை விலாசம் தெரியாத அளவிற்கு தாக்கப்பட்டு ஜாமீனும் மறுக்கப்பட்டு முடிவில் ஜாமீனும் மறுக்கப்பட்டு கொலையே செய்துவிடுவார்கள் வழக்கு முடிந்துவிடும் இதுதான் நடப்பு


தென்காசி ராஜா ராஜா
ஜூலை 03, 2025 18:21

மிரட்டிய வர்கள் மிது என்ன நடவடிக்கை அவர்கள் பின்புலம் என்ன


M S RAGHUNATHAN
ஜூலை 03, 2025 18:01

ஏன் அறநிலையத் துறை அமைச்சர் வாய் திறக்க வில்லை.


M S RAGHUNATHAN
ஜூலை 03, 2025 18:00

இந்த கோயில் அறநிலைய மேற்பார்வையில் உள்ளது. புகார் அளித்த பெண்மணி, இந்த காவலர் wheel chair கேட்டதாகவும் அதற்கு அந்த காவலர்₹ 500/- கேட்டதாகவும் சொல்லி இருக்கிறார். இவர் ஒரு பேராசிரியர். படித்தவர். உடனே ஏன் கோயில் செயல் அலுவலரிடம் அந்த காவலரைப் பற்றி புகார் செய்யவில்லை. நான் ₹100 கொடுக்க ஒப்புக் கொண்டார். விவாதம் நடந்ததாக சொல்கிறார். ஆனால் இவர் சொல்வதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. Wallet parking கிடையாது என்று தெரிந்ததும், அவரே அவருடைய வண்டியை குறிப்பிட இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு வர வேண்டியது தானே? ஏன் சாவியை சண்டை போட்டவரிடமே கொடுத்தார். இந்த பெண்மணியின் புகார் முற்றும் cock and bull story. பெண்மணியின் தாயார் வீட்டில் இருந்து கிளம்பும் போதே நகை அணிந்து இருந்தாரா அல்லது scan centre இல் கழட்டிவிட்டு, பின்பு கோயிலுக்கு வந்தாரா ? புகார்தாரர் மெத்த படித்தவர். அவர் தன் தாயிடம் Scan எடுக்க போவதால் நகைகள் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டாமா? ஒரு சாமானியனான எனக்கு தோன்றும் சந்தேகம் ஏன் காவல் துறைக்கு எழவில்லை? எந்த அனுமானத்தில் அந்த இளைஞரை விசாரணைக்கு உட்படுத்தினர். இந்த பெண்மணி பொய் சொல்கிறார் என்று சந்தேகம் வருகிறது.


saravan
ஜூலை 03, 2025 17:57

எதற்கு நீதிமன்றம் ரகசியமாக வைக்க வேண்டிய சாட்சியை காட்சிப்படுத்தி இப்போது பாதுகாப்பு ஏற்பாடு சரி யாரிடம் இருந்து பாதுகாப்பு, இறப்பு நடந்தது காவலர்களின் விசாரணையில் மொத்தத்தில் மோசம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை