உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு; 20 காளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு; 20 காளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கிய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பெற்றார். காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=40rybw1q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலகளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்களில் ஒன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து, இன்று(ஜன., 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூரில் குவிந்தனர்.வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.கடைசி சுற்று முடிவில், 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரர் முதலிடம் பெற்றார். 14 காளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் இரண்டாமிடம், 10 காளை அடக்கிய விக்னேஷ் மூன்றாம் இடம் பெற்றனர்.போட்டியில் பங்கேற்ற வீரர்கள் உட்பட 70 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 11 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காளை முட்டியதில் காயம் அடைந்த பார்வையாளர் மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்தார்.இன்று நடிகர் சூரி சார்பில் அவிழ்த்து விடப்பட்ட 3 காளைகளையும் எந்த வீரர்களாலும் அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிராவயல் மஞ்சு விரட்டு!சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இன்று மஞ்சு விரட்டு நடந்தது. இதில் காளை அடக்க முயற்சித்த வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரர்கள் 177 பேர் காயம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Professional
ஜன 16, 2025 15:47

செத்து சுண்ணாம்பு ஆகி பல மாமாங்கம் ஆனபின்பும் ஒருவன் இந்த அளவுக்கு மக்களால் தோண்டி எடுத்து கழுவி கழுவி ஊத்தப்படுகிறான் என்றால்... எப்பேர்ப்பட்ட அயோக்கியன் அவன்.. கட்டுமரம் கல்லறைல மைண்ட் வாய்ஸ்: யப்பா என்னத்தான் செத்த பெறவும் வச்சி செய்றாங்கன்னு நெனச்சேன்.. பெருசு என்னவிட கேவலம்போலருக்கு


Ramesh Sargam
ஜன 16, 2025 13:13

இந்த காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த முரட்டுக்காளைகளை, அதான் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் புரியும் அந்த முரட்டுக்காளைகளை, அந்த அயோக்கியக்காளைகளை யார் அடக்குவீர்கள்...?


அன்பே சிவம்
ஜன 16, 2025 10:54

1). ஜல்லிக்கட்டு விளையாடி தமிழக மக்கள் மகழ்ந்தனர் என்பதில் மகிழ்ச்சி. 2).ஜல்லிகட்டு என்பது கோவில் விழா, கோவில் வளாகத்தில் கோவில் காளையினை வணங்கி தொடங்கும் விழா ஜல்லிகட்டு வீரர்கள் என்பவர்கள் விரதம் இருப்பார்கள், கோவிலில் நேர்ச்சை கடன் செய்வார்கள், காப்பு கட்டிகொள்வார்கள் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து காளை வளர்ப்போர் அழைப்பார்கள், அதுவும் கோவில் வளாகத்துக்கு அழைப்பார்கள் 3).கோவில் முன்னால் முகூர்ந்தகால் நட்டு உரிய பூஜைகள் வழிபாடுகள் நடந்தபின்புதான் ஜல்லிகட்டு தொடங்கும், 4).கோவிலுக்கான காளை முதலில் வரும் அதை யாரும் தொடமாட்டார்கள் ஆக கோவில் முன்னால் நடக்கும் விழா அது, அதை விழா என்றோ போட்டி என்றோ கூட சொல்லமுடியாது. 5).அது கோவில் கொண்டாட்டத்தில் ஒன்று. 6).மோடி ஜல்லிகட்டுக்கான சட்டத்தை திருத்தும்போது அதாவது பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது பீட்டா அமைப்பு குழப்பியபோது சில திருத்தங்களை மோடி அரசு செய்தது 7)அப்படி செய்யும்போது ஜல்லிகட்டு தமிழகற்களின் சமய விழா, சமய சம்பிரதாய கொண்டாட்டம் என மாற்ற சொல்லி எவ்வளவோ சொன்னார்கள் 8) பன்னீரும் கேட்கவில்லை, மோடிக்கு சொல்லவும் யாருமில்லை கோவில் கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக இருந்த ஜல்லிகட்டை அரங்கம் கட்டி திசைமாற்றுகின்றார்கள், 9).இனியாவது அச்சட்டம் தமிழக என்பது கோவில் பாரம்பரிய விழா என மாற்றபட் வேண்டும்.


Svs Yaadum oore
ஜன 16, 2025 11:22

ஜல்லிகட்டு தமிழற்களின் சமய விழா, சமய சம்பிரதாய கொண்டாட்டம் என மாற்ற சொன்னால் அதை ஏன் பன்னீர் கேட்கவில்லை?? PETA என்பதும் உலகெங்கும் மதம் மாற்றிகள் உண்டாக்கிய அமைப்புதான். சமத்துவ பொங்கல் என்பது போல ஜல்லிக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு என்று மாற்றி விட்டார்கள் ....


Svs Yaadum oore
ஜன 16, 2025 09:19

இந்த விடியல் மந்திரிகள் அராஜகம் நிறுத்த பட வேண்டும் .... அலங்காநல்லூரில் காளைகளின் உரிமையாளர்கள் போராட்டம் .... அலங்காநல்லூர் மக்களின் காளைகள் இல்லாமலே ஜல்லிக்கட்டு.. அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் உள்ளூர் மக்களை புறக்கணித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்துகின்றனர். ....அதேபோல, அலங்காநல்லூர் மரியாதை மாடுகளை முறைப்படி பெயர் சொல்லி அறிவிக்கப்படுவதில்லை....படு கேவலமான விடியல் ஆட்சி நடக்குது ....


GMM
ஜன 16, 2025 08:51

முன்னோர் கூறியது. அலங்கா நல்லூர் கோவிலுக்கு காளையை நேர்ந்து, தானமாக கொடுக்கும் பழக்கம் இருந்தது. அதிக பசு பயன் தருவது போல் அதிக காளை தராது. கோவிலும் பராமரிக்க முடியாமல், காளையை ஓட விட்டு, முதலில் பிடிப்பவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்பட்டது. திராவிட கதைகள் வரலாற்றை திரித்து தான் எழுதப்படும்.?


Svs Yaadum oore
ஜன 16, 2025 08:45

என்னய்யா ஆட்சி நடக்குது இங்கே?? படு கேவலமான ஆட்சி ...இந்த ஜல்லிக்கட்டில் விடியல் மந்திரிகளின் அதிகார வெறி, அராஜகம், போலீஸ் மற்றும் அடியாட்களை வைத்து மிரட்டுவது. அலங்கா நல்லூர் மக்கள் போராட்டம் ....இதில் ஜாதி பிரச்னையும் உண்டு ....ஆட்சியா நடக்குது ...படு கேவலமான விடியல் ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை