உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்; உறவினர்கள் கண்ணீர்

ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்; உறவினர்கள் கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. இதில், கடையநல்லுாரைச் சேர்ந்த இருவர், 8 மாதங்களுக்கு முன், அங்கு பணிக்கு சென்ற வர்கள் என தெரிய வந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்புகள், அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதும், வெளிநாட்டினரை கடத்துவதும் வழக்கமாக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sjmvhfkc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நேற்று முன்தினம், மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே, தனியார் நிறுவனத்தில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அங்கு பணிபுரிந்த ஐந்து இந்தியர்களை துப்பாக்கி முனையில் கடத்தியது. கடத்தப்பட்டவர்கள், மாலியில் மின்மயமாக்கல் பணிக்காக சில மாதங்களுக்கு முன் அங்கு சென்றவர்கள். இந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற இந்தியர்கள், பாதுகாப்பாக அந்நாட்டின் தலைநகர் பமாகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடத்தப்பட்ட ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என, தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அடுத்த கொடியங்குளம் புதியவன், 52, நாரைகிணறு பொன்னுதுரை, 41, வேப்பங்குளம் பேச்சிமுத்து, 42, தென்காசி மாவட்டம், கடைய நல்லுார் அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா , 36, புதுக்குடி தளபதி சுரேஷ், 26, என, தெரியவந்துள்ளது. இவர்களை புளியங் குடியை சேர்ந்த மாரியப்பன் என்ற அவர்களின் உறவினர், அங்கு பணிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், ஐந்து பேரும் மும்பையை சேர்ந்த, 'ட்ராயிங் ரெயில் லைட்டிங்' என்ற நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கல் திட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி உள்ளனர். இவர்களுடன், 100 இந்தியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், தற்போது 18 பேர் மட்டுமே அங்கு பணியில் இருந்துள்ளனர். இவர்களில் தற்போது ஐந்து பேரை ஆயுத கும்பல் கடத்தியுள்ளது. இவர்களை உடனடி யாக மீட்க கோரி, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்க உள்ளனர்.தூதரம் நம்பிக்கை கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த நவ.,6ம் தேதி மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும், மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மாலி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இந்திய தூதரகம் தொடர்ந்து பேசி வருகிறது,' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்னத்த சொல்ல
நவ 10, 2025 11:26

இது வெளிநாட்டு விவகாரம். மத்தீய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என எல்லோருக்கும் தெரியும். ஆனா நாங்க திமுக்கா அரசுதான் திட்டுவோம்.


duruvasar
நவ 10, 2025 09:07

தவறு. தூத்துகுடிலிருந்து மாலிக்கு அவசரகால விடியல் பேருந்து அனுப்பிவைக்கப்பட்டு மீட்டு வருவார்கள். ஓட்டுநர் நாம தி..சிவாதான்


D Natarajan
நவ 10, 2025 08:37

விடியல் அரசு உடனே கடிதம் எழுதி விடும். பின்னர் ஒரு அமைச்சர் விமான நிலையத்தில் இருந்து விடிவிக்கப்பட்டவர்களை அழைத்து வருவார்.


raja
நவ 10, 2025 07:14

கவலை படாதே.. துருப்பிடித்த இரும்புக்கை சர்வாதிகாரி தம் திருடர் படைகளை அனுப்பி இவர்களை மீட்டு வருவார் பேருந்து அனுப்பியாவது....


அப்பாவி
நவ 10, 2025 06:16

இங்கே பாலும் தேனும் ஆறா ஓடும்போது அங்கே பாலைவனத்துக்கு ஏன் போறீங்க? நம்மாளுங்க வந்தா கொடி ஆட்டி , டான்ஸ் ஆடி வரவேற்கவா?


duruvasar
நவ 10, 2025 09:09

ஐயா ஸ்டாலின் சொன்னதை அப்படியே நம்பிவிட்டார் .


naranam
நவ 10, 2025 04:49

விடியல் அப்பா உடனே ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்து ஒன்றை அனுப்பி விடுவார்..


முக்கிய வீடியோ