உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; நயினார் நாகேந்திரன் விருப்பம்

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; நயினார் நாகேந்திரன் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலியில் நெல்லையப்பர் திருக்கோவிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளி தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை, நயினார் நாகேந்திரன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் ஒப்படைத்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்னைக்கு பின்னால் பா.ஜ., இல்லை. அவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cf2zcelu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். தி.மு.க., கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல், தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து இருப்பது சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும். என்.ஆர். சி., என்ற சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது அல்ல.அண்டை நாடுகளிலிருந்து மேற்கு வங்கத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய நாட்டில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

montelukast sodium
மே 22, 2025 22:28

அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்உங்க மதவாத அரசியல் இங்கே எடுபடாது நாகேந்திர


montelukast sodium
மே 22, 2025 22:24

DMK WIN 2026 AGIN


venugopal s
மே 22, 2025 20:16

பாஜகவுடன் கூட்டணி அமைத்து எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது!


RAVINDRAN.G
மே 22, 2025 16:33

பிஜேபி தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை இருந்தபோது இருந்த உத்வேகம் இப்போது 1% கூட இல்லை. இது பிஜேபி வளர்ச்சிக்கு அவர்களே வைத்துக்கொண்ட ஆப்பு. கடுமையான களப்பணிகளால் அண்ணாமலை கட்சியை வளர்த்தார். இப்போது பிஜேபி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. இப்படி இருந்தால் 3026ல கூட பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது. சுரத்தே இல்லாம பிஜேபி இருக்குதுங்க. கை கூடிவரும் நேரத்தில் அண்ணாமலை மாற்றம் போகபோகத்தான் தெரியும்.


Padmasridharan
மே 22, 2025 15:18

ஒருத்தர வீழ்த்தணும்னா ஒன்றிணைய வேண்டுமா.. தனி ஆளா விஜயம் செய்து ஜெயிக்க முடியாதா. கொடுத்த வாக்குகள் நிறைவேறுகிறதோ இல்லயோ காவலர்களுடன் சேர்ந்து குற்றங்கள் அதிகரித்து உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே.


துர்வேஷ் சகாதேவன்
மே 22, 2025 23:01

எல்லா கட்சிகளும் சேர்ந்து உங்களை ஒழிக்காமல் இருக்க பார்த்து கொள்ளுங்க


P. SRINIVASAN
மே 22, 2025 15:13

வாய்ப்பு இல்ல ராஜா. உங்க மதவாத அரசியல் இங்கே எடுபடாது நாகேந்திர


angbu ganesh
மே 22, 2025 16:18

எது மாதவாத கட்சி உங்களுக்கு ஒன்னு தெரியல புரியல ரம்ஜான் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மட்டும்தான் உங்க அல்ப காட்சிகள் பண்ணுது ஆனா காலம் காலமா ஹிந்துக்களின் நாடான இந்தியர்களின் ஹிந்துக்களின் நம்பிக்கை அசிங்க படுத்தறானுங்க இதுல எது மதவாத, மதப்பிரிவினை கட்சின்னு உங்களுக்கு புரியலையா


RAVINDRAN.G
மே 22, 2025 16:34

முஸ்லீம் லீக்கு மதவாத கட்சி இல்லையா சார். இதே கேள்வியை கேட்கலாமே


சத்யநாராயணன்
மே 22, 2025 14:48

வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறீர்கள் கூட்டணியாக ஊழல் செய்யத்தானே அண்ணாமலை அவர்கள் இருந்த இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை