உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 234 தொகுதிகளிலும் கூட்டணிக்கு வெற்றி; சொல்றது யாருன்னு பாருங்க!

234 தொகுதிகளிலும் கூட்டணிக்கு வெற்றி; சொல்றது யாருன்னு பாருங்க!

சென்னை: 'அ.தி.மு.க.,வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்' என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து இன்று முதல் பணிகளை துவங்கி இருக்கிறோம். அ.தி.மு.க.,வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய ஒற்றுமை, நட்புணர்வுடன் சிறப்பாக உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பல்வேறு துறை அரசு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயை காணவில்லை

வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் ஆர்பாட்டம் செய்ய அவசியம் இல்லை. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். உண்மை நிலவரம் களத்தில் ஆர்பாட்டம் நடத்துபவர்களிடம் கேட்கும் போது தான் தெரிகிறது. விஜய் குறித்த நிலைப்பாடுகளை அவரிடம் தான் கேட்க வேண்டும். மாநாடு நடத்திய பிறகு விஜயை பொது வெளியில் யாரும் சந்திக்கவில்லை. நீங்கள் விஜயை செய்தியாளர்களை சந்திக்க வைத்து கேள்வி கேட்க வேண்டும். விஜயின் கட்சி கொள்கை, கூட்டணி வியூகங்கள் பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.

234 தொகுதிகளில் வெற்றி

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்கான பணி இன்று முதலே துவங்கி இருக்கிறோம். விஜயபிரபாகரன் உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்குவது குறித்து அறிவிக்க உள்ளோம். ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. அனைத்து மாவட்டங்களின் சாலைகளும் எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

வாய் சவடால்

அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாய் சவடால் விட்டு கொண்டு, அதிகாரம் பவரை வைத்து கொண்டு மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவங்க கூட்டணியில் பல குளறுபடிகள். 2026ம் ஆண்டு கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. முதல்வர், துணை முதல்வர் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

panneer selvam
நவ 12, 2024 00:19

Premlatha madame , yes , you are right with a small correction. You and Your alliance master AIADMK should work very hard at least to get back the deposits. Would you remember , how even your party founder Vijayakanth lost his deposit in 2016 assembly election ? All because of your misguidance and greediness


MADHAVAN
நவ 10, 2024 19:45

2016 ல விஜயகாந்தை ம ந கூ ல நிக்க வச்சு, மண்ணை கவ்வ வச்சு சோழிய முடிச்சுவிட்டது,


Perumal Pillai
நவ 10, 2024 16:27

சீட் யும் தந்தாங்க தொகையும் தந்தாங்க . தொகைக்காக நடத்தப்படும் ஒரு கட்சி .


வைகுண்டேஸ்வரன்
நவ 10, 2024 15:20

குடும்ப அரசியல், மன்னராட்சி என்று திமுக வை விமர்சித்து எதிர்க்கும் இ பி எஸ் எப்படி இந்த கட்சியின் குடும்ப அரசியலை எதிர்க்க மாட்டார் போல. ஹா ஹா ஹா..


வைகுண்டேஸ்வரன்
நவ 10, 2024 15:18

தே மு தி க இன்னும் இருக்கா? சதீஷ் சத்தமே இல்லை யே?


Oviya Vijay
நவ 10, 2024 14:47

நடந்து முடிந்த தேர்தலில் இவர்கள் எதிர்பார்த்த கட்சி இவர்களை சீண்டாமல், எங்கு சென்றால் தங்கள் பேரம் படியும் என கடைசி நிமிடம் வரை காத்திருந்து விட்டு தனித்து நின்றால் போணி ஆக மாட்டோம் என தெரிந்து வேறு வழி இல்லாமல் உப்புக்கு சாப்பாணி கட்சியாக மாறியிருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்பார்த்தபடியே மிகச்சிறப்பான தோல்வியைத் தழுவி தற்போது மீண்டும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று எப்போது தான் இவர் உணர்வாரோ!!! கட்சியைக் கலைத்து விட்டு மக்கள் மத்தியில் கேப்டனுக்கு இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்... தேமுதிகவுக்கு எதிர்காலம் என்பதெல்லாம் இனி ஜென்மத்துக்கும் கிடையாது... ஓட்டை உடைசலை வைத்துக் கொண்டு கட்சியை நடத்துவது போல் பாசாங்கு செய்ய வேண்டாம்... டேமேஜ் இன்னும் அதிகமாகும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை