உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,-தே.மு.தி.க.,வுடன் கூட்டணியா? முயற்சி செய்வோம் என நயினார் நாகேந்திரன் பதில்

பா.ம.க.,-தே.மு.தி.க.,வுடன் கூட்டணியா? முயற்சி செய்வோம் என நயினார் நாகேந்திரன் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பா.ம.க., தே.மு.தி.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு முயல்வோம்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கட்சி ஆரம்பித்தவுடன் மத்திய அரசை விரட்டியடிப்போம் என்று விஜய் கூறுவது வேடிக்கையான விஷயம். தி.மு.க.,வை வீழ்த்த பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளாக எல்லாத்தையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வோம். பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு முயல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7zw0krp3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் ரீதியாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில தி.மு.க., ஏஜென்ட்டுகள்! ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது. இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது! இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்! பதற்றம் வேண்டாம், இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஏப் 14, 2025 08:55

ஆளுக்கு நாலு கோடி வெட்டினா வரலாம்.


pmsamy
ஏப் 14, 2025 08:11

நாகேந்திரனுக்கு .... போகிறார்கள் அதற்கு துணையாக மற்றவர்களை அழைக்கிறான்


Sundar R
ஏப் 13, 2025 16:19

நயினார் அவர்கள் தேமுதிகவை நம்பி பிரயோஜனம் இல்லை - விஜயகாந்த் சின்சியராக திமுகவை விட்டு வெளியேறி ஜெயலலிதா அவர்களுடன் கூட்டணி வைத்து பெரிய அளவில் வெற்றி பெற்றார். பிறகு கம்யூனிஸ்ட்கள் மற்றும் திருமாவளவனுடன் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி வைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்து விஜயகாந்திற்கு heavy financial loss ஆகி விட்டது. எந்த தேர்தலில் போட்டியிட்டாலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பு தான் விஜயகாந்த் இருந்த போதும், விஜயகாந்திற்கு பிறகும் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார்கள். விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, 2021 அசெம்பிளி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பு பாஜக தோற்கும் வகையில், திமுக ஜெயிக்கும் வகையில் ஹிந்து ஓட்டுக்களைப் பிரிக்க தினகரனோடு கூட்டணி சேர்ந்தார்கள். 2024 பாராளுமன்ற தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பு பாஜக தோற்கும் வகையில், திமுக ஜெயிக்கும் வகையில் ஹிந்து ஓட்டுக்களைப் பிரிக்க தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் தேமுதிகவினர் திமுகவினரோடு தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் தேமுதிகவினர் திமுகவினரோடு தான் வியாபாரம் செய்கிறார்கள். தமிழருவி மணியன் ஐயா அவர்கள் ஆரம்ப காலத்தில் தேமுதிகவை பாஜக, பாமக ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொடுத்தார். விஜயகாந்த், ராமதாஸ் ஐயா ஆகியோருக்கு தேசபக்தி உண்டு. அதனால் தான் மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விஜயகாந்த் மறைந்த காரணத்தால், தற்போதைய தேமுதிக, தேமுதிமுக ஆகிவிட்டது. பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைத்தாலும், தேமுதிகவினர் ஸ்டாலினுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள். பாஜகவை தேர்தல்களில் வெற்றி பெற வைப்பது தேமுதிமுகவினரின் வேலை இல்லை. எனவே, தேமுதிமுகவுடன் கூட்டணி வைப்பது பாஜகவுக்கு வேலையற்ற வேலை. வெட்டி வேலை என்பதை உறுதியாகக் கூறலாம்.


Kumar
ஏப் 13, 2025 15:33

பாஜக க்கு பயம் அதனால் தான் சபதத்தை முடித்தது செருப்பு அணிந்து விட்டார் அண்ணாமலை


ManiK
ஏப் 13, 2025 14:59

அருமையான அறிக்கை நைனார்ஜி. பேசும்போதும் தென்றல் போல பேசி மக்களுக்கு திமுகவின் கபட நாடக ஆட்சியை புரியவையுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை