உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா

யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா

சென்னை: யாருடன் கூட்டணி என்று உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்.அதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.பிரேமலதா அளித்த பேட்டி:ஜனவரி 9 ஆம் தேதி கடலுாரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நேரத்தில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்பதாக நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். வருகின்ற தேர்தல் 2026 தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல்.எங்கள் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதை முடிவெடுக்கக்கூடியவர்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தான்.அதிமுக, பாஜ இடையே நடந்த சந்திப்பு ஏற்கனவே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் சந்திப்பு அவ்வளவு தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் இல்லை.அதனால் அந்த நிகழ்வை நாங்கள் மிக சாதாரணமான நிகழ்வாக பார்க்கிறோம். மற்ற கட்சிகளை கலந்து ஆலோசித்து அதற்குப் பிறகு தான் தெளிவான முடிவு கிடைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர் கருத்தை கூறியுள்ளார். தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் என பாஜ, அதிமுக பேச்சுவார்த்தையில் பேசியதாக வரும் தகவல் உண்மையானதா, அந்த லிஸ்டை யார் கொடுத்தது. அதிகாரப்பூர்வமாக அந்த விபரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட பதில் சொல்ல முடியும்.இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nathansamwi
டிச 25, 2025 22:21

உண்டியல் குலுக்கி ..


சிட்டுக்குருவி
டிச 25, 2025 20:43

விஜயகாந்த் சொந்த சுய லாபத்திற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை .பொறுக்கமுடியாத ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள் ,சொத்து அபகரிப்புகளே அவருடைய மனசாட்சியை உலுக்கின .ஆனால் அது சுயநலக்கட்சியாக மாற்றப்பட்டுவிட்டது அவருக்கு செய்யும் துரோகம் .அறிந்து செயல்படுவது அறிவுடைமை .


Bhaskaran
டிச 25, 2025 19:07

பெரிய பெட்டி தர்றவங்களோடுதான் கூட்டு


Barakat Ali
டிச 25, 2025 18:30

பேரம் படியலையா அண்ணி ????


பாலாஜி
டிச 25, 2025 18:12

தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் டெபாசிட் இழப்பு ஏற்படும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் பிரேமலதா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை