உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பாரதம் இயக்கத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு

துாய்மை பாரதம் இயக்கத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு

சென்னை: 'துாய்மை பாரதம்' இயக்கத்தை ஊரக பகுதிகளில் செயல்படுத்த, நடப்பாண்டு முதல் தவணையாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பாக, 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.ஊரக பகுதிகளில், துாய்மை பாரதம் இயக்கத்தின் முதல் கட்டம் 2014ல் துவக்கப்பட்டு 2019 வரை செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2020 - 21ல் துவக்கப்பட்டு நடப்பாண்டு வரை செயல்படுத்தப்படுகிறது.திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை தக்க வைத்தல், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் வழியே, கிராமங்களில் துாய்மை நிலையை மேம்படுத்துதல் போன்றவை இரண்டாம் கட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு தமிழகத்தில் 240 கோடி ரூபாயில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு முதல் கட்டமாக, கடந்த அக்டோபரில், 75 கோடி ரூபாய் ஒதுக்கியது.தமிழக அரசு 50 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை