உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022ம் ஆண்டு முதல் மார்ச் 2023ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைத்த தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022ம் ஆண்டு முதல் நவம்பர் 2022ம் ஆண்டு வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை , விடுப்பு ஒப்படைத்த தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.31கோடி வழங்க வேண்டும்.தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டு முதல் மார்ச் 2023ம் ஆண்டு வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனானிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைத்த தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ள பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 28, 2024 19:59

தேர்தல் 2026 -ஆம் ஆண்டு. அதற்கு முன்பே திமுக உஷார் ஆகிவிட்டது. போக போக மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அவர்கள் எதிர்பார்த்திராத பல விஷயங்கள் நடக்கும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள்.


சம்பா
அக் 28, 2024 17:00

இனி எல்லாமே நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை