மேலும் செய்திகள்
‘108’ ஆம்புலன்ஸ் 3ம் தேதி முதல் வேலைநிறுத்தம்
31-Oct-2026
சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ‘இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம்’ செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில், 7,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணி நேரத்தை வரன் முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், நேற்று இரவு 8:00 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். நேற்று மாலை, நிர்வாகத்துடன் பேச்சு நடந்தது. இன்றும் பேச்சு நடக்க உள்ளது. இதனால், நேற்று இரவு முதல் நடக்க இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக, தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
31-Oct-2026