உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவின் வரி அரசியல்; யாருக்கு பாதிப்பு? நம் தேசத்துக்கு துணை நிற்க ஏற்றுமதியாளர்கள் உறுதி

அமெரிக்காவின் வரி அரசியல்; யாருக்கு பாதிப்பு? நம் தேசத்துக்கு துணை நிற்க ஏற்றுமதியாளர்கள் உறுதி

திருப்பூர்: அமெரிக்கா விதித்துள்ள வரி, இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி விளக்கியுள்ளார்.அவர் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையே தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணம் இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை (டேரிப்) 25 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளதுதான்.இரு நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை, 5 கட்டங்களை தொடர்ந்து இழுபறியாக நீடிப்பதால் அதிருப்தியை வெளிப்படுத்தி தங்கள் தேவைக்கு ஏற்ப இந்தியாவை கையெழுத்திட வைக்கும் முயற்சியே என்பது தெளிவாகிறது.கொரோனாவுக்கு பின், உற்பத்தி நிலைப்பாட்டை பல்வேறு வளர்ந்த பொருளாதார நாடுகளில் உள்ள நிறுவனங்கள், சீனாவில் இருந்து மாற்றும் முடிவை எடுத்து இந்தியாவை விருப்ப நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்து கொண்டுள்ளனர். அவை தங்களின் உற்பத்தியை தமிழகம், உ.பி., தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் துவங்கியுள்ளன. மேலும், பல நிறுவனங்கள் இந்தியாவெங்கும் தங்கள் உற்பத்தியை துவங்க உள்ளது.

ஜவுளித்துறைக்கு பாதிப்பா?

தற்போதைய வரிவிதிப்பு ஜவுளித்துறைக்கான பின்னடைவு என்று சொன்னால் முற்றிலும் உண்மையே. அமெரிக்காவுக்கான இந்தியாவின் பிரதான ஏற்றுமதியில் ஜவுளி பொருட்களும் உள்ளன. திருப்பூரை பொறுத்தமட்டில் இங்கு நடைபெறும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏறத்தாழ, 50 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது. தற்போது, வியட்நாம், வந்தேசம், பாகிஸ்தானுக்கு அமெ ரிக்கா குறைவான வரியையே விதித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் பங்கை மூன்று நாடுகளும் தனதாக்கி கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தால், உடனடியாக முடியாது. ஆனால், இந்த சூழல் நீடித்தால் ஆறு மாத காலத்தில் கடும் பின்னடைவை சந்திப்போம். இருப்பினும், சூழல் நீடிக்காது என்றே சொல்ல வேண்டும். வியட்நாமை பொறுத்தமட்டில் ஆடை உற்பத்திக்கான 73 சதவீத துணி சீனாவிலிருந்தே வருகிறது. துணியின் உற்பத்தி குறித்து அமெரிக்காவுக் கான தரவுகளை அளிக்கும்போது அவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பே உள்ளது.

அமெரிக்க நுகர்வோருக்கே சிக்கல்

இவ்வளவு வரிவிதிப்பின் விளைவுகள் இறுதியாக நுகர்வோரை அல்லவா சென்றடையும்? அப்படியான சிக்கலை அமெரிக்க நுகர்வோர்கள் சந்திக்க துவங்கியுள்ளனர்; கொரோனா காலத்திற்கு பின் சற்று எழுந்த நுகர்வு மீண்டும் மந்தநிலையை நோக்கி நகர்கிறது. அங்குள்ள பல்வேறு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் அதிருப்தியை அமெரிக்கா அரசிடம் பதிவு செய்துள்ளன. இதனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரக்கூடிய வாய்ப்பே அதிகம்.இதுபோன்ற நிலையை சீனா கடந்த மாதங்களில் எதிர்கொண்ட நேரத்தில் அந்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் மின் கட் டண சலுகை, வங்கி கடனில் வட்டி குறைப்பு, ஏற்றுமதிக்கான சலுகைகளை உயர்த்துதல் போன்ற நடவடிக்கை காரணமாக உற்பத்தி மற்றும் ஏற்றும தியாளர்களுக்கு துணை நின்றது. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை வாயிலாக நல்ல தீர்வினை எட்டினர்.

அரசின் கட்டுப்பாடும் உறுதியும்

அதேபோல, மத்திய அரசும் உடனடியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை வாயிலாக நல்லதொரு தீர்வை எட்டும்வரை அல் லது அடுத்த ஆறு மாதங்களுக்குள் வேறு சந்தை வாய்ப்புகளை பெற்று தங்கள் நிறுவனத்தை ஸ்திரப்படுத்தும் வரை தேவையான சலுகைகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். நாட்டின் ஒட் டுமொத்த நலனுக்காக அரசுடன் நாங்கள் வலுவாக நிற்கிறோம். எங்களுக்கு வலுவைத் தொடர்ந்து அளிப்பது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஜெகதீசன்
ஆக 03, 2025 18:21

நிலமை சரியாகும் வரை நமது அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்கி, விலையை சீராக வைக்க உதவனும்.


V.Mohan
ஆக 03, 2025 17:30

அய்யா பெரியவர்களே நான் என்னவோ இதுநாள் வரை அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன் . ஆனால் திருவாளர் டிரம்ப் சர்வாதிகாரி மாதிரி இப்படி தன மனம் போன போக்கில் வரிகளை ஏற்றுவதும் இறக்குவதும் .... அமெரிக்காவில் ஜனநாயகம் இருக்கிறதா ??? டிரம்ப் ஜனநாயக வழிகள் பற்றி அறியாதவரா அல்லது என்னை ஒருத்தரும் ஒன்னும் - புடுங்க முடியாது என்கிற உயர்ந்த எண்ணம் போல இருக்கிறது . யாருப்பா அமெரிக்கா நிதி மந்திரி ?? மந்திரி சபை மாதிரி ஏதும் அங்கு இல்லை போல.... அமெரிக்கா மக்களை கஷ்டப்படற வேலையை செய்வதில் இருந்து அரசியல்வாதிகள் மடை மாற்றி விட்டனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இப்போ போய் ஜவுளி துறையில் வேலை செய் , மூளையை கசக்கி வேலையை செய் என்றால் என்ன ஆகும் .? சரி அது டிரம்ப்போட தலை வலி. ஏனய்யா கொஞ்சம் வருஷம் முன்னாடி எல்லா நாடுகளையம் கையெழுத்து போட வெச்ச W T A உலக வியாபார ஒப்பந்தம் என்ன காலாவதி ஆயிடுச்சா ??? ஐ நா சபை மாதிரி வெட்டி சமாச்சாரம் தானா ???


Ramesh Sargam
ஆக 03, 2025 12:29

அமெரிக்காவை ஒதுக்கி, வேறு இந்தியாவுடன் நட்பு பாராட்டும் நாடுகளை அணுகி வியாபாரம் செய்வது நல்லது. பிறகு பாருங்கள் இந்த டிரம்ப் தானாகவே நம்மிடம் வருவான், வரிகளை குறைத்துக்கொண்டு.


ஆரூர் ரங்
ஆக 03, 2025 11:37

டிரம்ப் அமெரிகாவில் பணவீக்கம் அதிகரிக்க தன்னாலியன்ற எல்லாவற்றையும் செய்கிறார். மற்ற நாடுகளுக்கு விதிப்பதை விட இந்தியத் தயாரிப்புகளுக்கு ஐந்து முதல் எட்டு சதவீதம் மட்டுமே அதிக வரி. இதை புத்திசாலித்தனமான PRODUCT MIX,POSITIONING மார்கெட்டிங் மூலமே சமாளித்து விடலாம். இழப்பு எப்படியும் வரி செலுத்தும் அமெரிக்க சாதாரண மக்களுக்கே. மேலும் நமது முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான செல்போன் மின்னணு சாதனங்கள், மருந்துகளுக்கு வரியில்லை என்பதனால் பாதிப்பு குறைவு. மாநில அரசின் கூடுதல் சலுகைகளை எதிர்பார்ப்பது வீண். தேர்தல் ஆண்டில் உதவவே மாட்டார்கள்.


அப்பாவி
ஆக 03, 2025 11:12

அமெரிக்காவில் கனெக்டிகட் போன்ற மாநிலங்களில் துணிமில்கள் 1970 கள் முதல் மூடிக் கிடக்கின்றன. இற்றனைக்கும் துணிமணிகளுக்கு அங்கே வரி கிடையாது. டாரிஃப் உயர்ந்தால் உள்ளூர் உற்பத்தி துவங்க வாய்ப்பு உள்ளது. ட்ரம்ப் இல்ல, வேறு யார் வந்தாலும் இது மாதிரி நடக்கும். இனி வரும் அமரிக்க அதிபர்கள் ட்ரம்பை விட கடுமையாக நடந்து கொள்வார்கள்.


Nagercoil Suresh
ஆக 03, 2025 10:32

திருப்பூர் காட்டன் ஆடைகள் தரத்தில் உயர்ந்தவை, ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் பிற்காலங்களில் தரத்திற்காக விலை உயர்ந்தாலும் அதன் மவுசு குறையப்போவதில்லை. அமெரிக்கர்கள் சுமாராக 35 கோடி மக்கள் தான் உள்ளனர், அதனால் வேறு நாடுகளிடம் புதிதாக வர்த்தக தொடர்வுகளை ஏற்படுத்த அரசு உதவ வேண்டும், அமெரிக்க அரசுக்கு வரி விதிப்பால் நிதி கிடைக்கலாம் அதே நேரம் நுகர்வோர் தலையில் அதிக சுமையும் ஏற்றுவது. இறக்குமதியை மட்டும் நம்பி இருக்கும் நாடு ஒத்த காலில் அதிக நேரம் நிற்க முடியாது. இந்தியாவிற்கு இந்த வரி விதிப்பு கடக்கும் கரு மேகங்களுக்கு ஒப்பானது...


சமீபத்திய செய்தி