உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் கோரிக்கை குறித்து நாளை அமித்ஷா பஞ்சாயத்து!: அழைப்பு ஏற்று டில்லி செல்கிறார் அ.தி.மு.க., பழனிசாமி

செங்கோட்டையன் கோரிக்கை குறித்து நாளை அமித்ஷா பஞ்சாயத்து!: அழைப்பு ஏற்று டில்லி செல்கிறார் அ.தி.மு.க., பழனிசாமி

பா.ஜ., மேலிடத்தின் அழைப்பை ஏற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நாளை டில்லி செல்கிறார். அங்கு, 'அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்தும் இறுதிக்கட்ட பேச்சில் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பிளவு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k00ic31r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தோல்வி

தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிகள் மட்டுமே இக்கூட்டணியில் இடம் பெற்றன. அதே நேரத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த மற்றொரு கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பல சிறிய கட்சிகள் இடம் பெற்றன. தேர்தலில் இரு கூட்டணியும் தோல்வியையே தழுவின. அதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ஜ., - அ.தி.மு.க., இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது. மேலும், சில கட்சிகள் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனி சாமியின் பேச்சை கேட்டு, பா.ஜ., தங்களை புறக்கணிப்பதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அ.ம.மு.க.,வும் கூட்டணியில் இருந்து விலகியது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., - புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் தற்போது கூட்டணியில் இல்லை. பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க.,வும் தற்போது அக்கூட்டணியில் இல்லை. இப்படி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலவீனமாகி வரும் சூழலில், 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் கொடுத்தார். அதை ஏற்க மறுத்த பழனிசாமி, அவரது கட்சி பதவிகளை பறித்தார். இதையடுத்து, டில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இருவரும் தன்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பது குறித்து பேசியதாகவும் கூறினார். இது, பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அ.தி. மு.க.,விலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நிபந்தனைகள்

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., மேலிட அழைப்பில் நாளை மாலை டில்லி செல்கிறார்; அங்கு, அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குறித்து ஏற்கனவே பழனிசாமிக்கு அமித் ஷா பல யோசனைகளை தெரிவித்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட ஆலோசனை என்ற பெயரில் நடத்தும் 'பஞ்சாயத்து'க்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அழைக்கப்பட்டிருப்பதாகவே அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க., ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பழனிசாமிக்கு, அமித் ஷா நிபந்தனைகள் விதிக்கலாம் என தெரிகிறது. இந்த பேச்சின் போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த, மேலும் பல கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான நடவடிக்கைகள் குறித்து பழனிசாமியிடம் அமித் ஷா பேசுவார் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனையும் நேரில் சந்தித்து பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார். பிரசார தேதி மாற்றம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நாளை டில்லி செல்வதால், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7ம் தேதி முதல் சட்டசபை தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, இதுவரை நான்கு கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். அவர், தன் ஐந்தாம் கட்ட பிரசார பயணத்தை வரும் 17ம் தேதி, தர்மபுரி மாவட்டம் தர்மபுரி தொகுதியில் துவக்கி, 26ம் தேதி, கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் நிறைவு செய்வார் என்று அ.தி.மு.க., தலைமை அறிவித்திருந்தது. தற்போது அவர் நாளை டில்லி செல்வதால், 17, 18ம் தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில், வரும் 28, 29ம் தேதிகளில் பழனிசாமி பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Gokul Krishnan
செப் 16, 2025 08:33

படையப்பா பட காமெடி தான் ஞாபகம் வருகிறது


ஜெய்ஹிந்த்புரம்
செப் 15, 2025 20:53

சாணக்கியன் அசிங்கப்பட போறாப்பு


ஜெய்ஹிந்த்புரம்
செப் 15, 2025 20:52

சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா


Sun
செப் 15, 2025 20:04

ஓ.பி.எஸ் ஐ எடப்பாடி பிரிந்து போக சொல்லவில்லை அவராகத்தான் பிரிந்து நின்றார். வேலுமணி, தங்கமணி, முனுசாமி எத்தனையோ பேர் சமாதானம் பேசியும் கூட அவர் கேட்காமல் நீதிமன்றங்களையும், பா.ஜ.கவையும் நம்பினார். எடப்பாடியை நம்பவில்லை. தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து பா.ஜ கூட்டணியில் அண்ணாமலை காலத்தில் இருந்தார் .யார் தூண்டுதலோ? இப்ப வெளிய வந்து எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை தான் கூட்டணியில் சேர மாட்டேன் என்கிறார். ஒரு வேளை செல்லூர் ராஜீவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் சேர்வார் போல . இவர்கள் போக சசிகலா தான் தான் அ.தி.மு.க என்கிறார். இவங்க பத்தாதுன்னு புதிய இம்சை அரசன் செங்கோட்டையன் வேறு. ஓ.பி.எஸ் ஐ முதல்வர் பதவியில் இருந்து நீக்கியவர் சசிகலா.தினகரனை நீக்கச் சொன்னவர் ஓ.பி.எஸ். இவ்வளவு குழப்பங்களுக்கு இடையேயும் எடப்பாடி ஆட்சியையும், கட்சியையும் காப்பாத்தி வைப்பாராம்? இவங்க யாருமே எடப்பாடி கிட்ட பேச மாட்டாங்களாம்? அவர ஏத்துக்க மாட்டாங்கலாம்? ஆனா எடப்பாடி போய் அய்யா, சாமின்னு அவங்ககிட்ட கெஞ்சி கட்சில சேர்த்துக் கிறணுமாம்?


Natchimuthu Chithiraisamy
செப் 15, 2025 19:24

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தவேண்டிய ஒரு இடம். சசிகலா முன்னாள் முதல்வர் பன்னீர் சண்டையில் தினகரன் பன்னீரை தாக்கியதால் தான் ஆட்கள் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தேர்வு நடந்துள்ளது. அதற்க்கு பன்னீரும் ஓர் காரணம்.


Natchimuthu Chithiraisamy
செப் 15, 2025 19:19

ஒரு வாசகர் எழுதிய செய்தி COPY / PASTE செய்துள்ளேன். கடந்த சில மாதங்களாக "அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும்" என்றல்லாம் சிலர் கூறி வருகின்றனர். முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. அதிமுக பிளவுபடவில்லை. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவ்வளவுதான். இவர்களை நீக்கியதால்தான் தோல்வியடைகிறது என்ற கூற்று பொய்யானது. பன்னீர்செல்வம் உடனிருந்த போதுதான் சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றது. பன்னீர்செல்வம் இல்லாததால் முக்குலத்தோர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காது என்று சொல்வது ஒரு மாயை. அப்படியென்றால் 2021 சட்டசபை தேர்தலில் தென்தமிழகத்தில் அதிமுக ஓட்டு குறைந்தது ஏன்? பன்னீர்செல்வமே அவரது சொந்த தொகுதியில் மிகவும் சிரமப்பட்டுதான் வென்றார். அந்த தேர்தலில் உள்ளடி வேலை செய்து தென்தமிழகத்தில் அதிமுக தோற்க காரணமாக இருந்ததே இந்த பன்னீர்செல்வம்தான். தனது சமுதாய மக்களிடமும், சொந்த தொகுதியிலும் செல்வாக்கை இழந்த ஒரு அரசியல்வாதி பன்னீர்செல்வம். இவர் வந்து மாபெரும் இயக்கமான அதிமுகவை வெற்றிபெற வைப்பார் என்பது நகைப்புக்குரியது.


Nelson
செப் 15, 2025 19:12

நான்கு மாதங்கள் கூடத் தாக்குப் பிடிக்காது என்ற கேலி வார்த்தைகளைப் பொய்யாக்கி நான்கு ஆண்டுகளாக நல்ல ஆட்சி தந்தார் எடப்பாடியார்....எவ்வளவு குழி பறிப்பு வேலைகள் செய்தாலும் எடப்பாடியார் அனைத்தையும் வெற்றிகண்டு ஆட்சியைப் பிடிப்பார்....


Natchimuthu Chithiraisamy
செப் 15, 2025 17:44

அமைச்சர்களாக பணியாற்றி அதிமுகவிலிருந்து பலபேர் பிரிந்து சென்று திமுகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் தமிழக பிஜேபி தலைவர் கூட அப்படி தான் எனவே அவர்களை மீண்டும் அதிமுகவிக்கு வரவேண்டும் என்று சொல்லமுடியாது. வேறு கட்சி போகமுடியாமல் வயதாகி விட்டதால் மேலும் மிகப்பெரிய ஆளுமையில் இருந்தவர் இப்படி இங்கு வரமுடியும் இளையவர் புதிய கட்சி ஆரம்பித்தும் விட்டார் எப்படி அவரை சேர்த்த முடியும். எல்லாம் அமிட்ஷா அவர்களுக்கு தெரியும். பிஜேபி கட்சிக்குள் அடங்கும் மாறு அவர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு தாமரையை கொடுத்து விட வேண்டியது ஏன் எடப்பாடி பழனிசாமி அவர்களை காயப்படுத்த வேண்டும். பல நாட்களாக அண்ணாமலை அதையே செய்து பலனில்லை இப்பொழுது செங்கோட்டையனை வைத்து செய்கிறார்கள். இதனால் பிஜேபி -அதிமுககிக்கு தான் பின்னடைவு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். திமுக இதை ஆதரிக்கிறது பல வழிகளில்


Easwar Kamal
செப் 15, 2025 17:20

எடப்பாடி கொஞ்சம் இறங்கி வரவேண்டும். ஆடம் பிடித்தல் எடப்பாடி டெபாசிட் கூட இழக்க நேரிடும். அமித் இதையும் செய்வார் அதுக்கு மேலேயும் செய்வார். அமித்துக்கு வயது உள்ளது எடப்பாடி இந்த எலேச்டின் ஓடி ஆடி ஒட்டு கெக்கலாம் அடுத்த எலெக்ஷன் காணாமல் கூட போகலாம். பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து எலக்ஷன் சந்தித்தால் தப்பிக்கலாம். இல்லவிட்டால் எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் பிஜேபி தன விளையாட்டை செயும். நீங்கள் ஒன்று பெரிய நேர்மையான அரசியல்வாதி கிடையாது. நீங்கள் என்ன attoliyam செயதீர்கள் என்று அமித்த்திடம் லிஸ்ட் இருக்கலாம். என்ன இந்த திமுக விட கொஞ்சம் கம்மியாக பணம் அடித்து இருக்கலாம். ஏன் என்றல் நீங்கள் ஆட்சி செய்த காலம் சிறியது. உங்களுக்கும் 5 வருடம் இருந்து இருந்தால் திமுக சவால் கொடுத்த இருக்கலாம் commision அடிப்பதில்.


Haja Kuthubdeen
செப் 15, 2025 16:43

அதிர்ந்த எடப்பாடி..அடக்கிய அமிட்ஷா...இதானே நாளைக்கு ஆர்மீஸ் போஸ்ட்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை