உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். டில்லியில் இருந்து நேற்றிரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த அமித்ஷாவை மத்தியமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமித்ஷா உடன் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் தமிழிசை இல்லத்திற்கு சென்றனர்.ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று சந்தித்தார். அரசியல் கட்சி தலைவர்களையும் அங்கு சந்தித்துப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

எவர்கிங்
ஏப் 12, 2025 06:59

இந்த மகராசி தமிழக பாஜகவுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த நேரம் மறுபடியும் நோட்டாவிவிருந்து.....தாமரை மறைந்தே தீரும்


பல்லவி
ஏப் 11, 2025 20:28

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத சம்பவம் ஞாபகம் வருகிறது


raju
ஏப் 11, 2025 13:05

ஏன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் வரவில்லை


sasidharan
ஏப் 11, 2025 12:47

முதலில் வலுவான கூட்டணி அமைத்து இப்போதுள்ள ஆட்சியை அகற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை