உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா தமிழக வருகை ஒத்திவைப்பு; பழனிசாமி முடிவுக்காக காத்திருப்பு

அமித் ஷா தமிழக வருகை ஒத்திவைப்பு; பழனிசாமி முடிவுக்காக காத்திருப்பு

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்களை, கட்சியில் அல்லது கூட்டணியில் மீண்டும் இணைப்பது தொடர்பாக பழனிசாமியின் முடிவு தெரியாததால், கடந்த வாரம் தமிழகம் வர இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இதனால், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

முயற்சி

பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலை சரி செய்து, ஒன்றிணைந்த பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., மேலிட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இரு கட்சிகளின் தலைவர்களையும், அமித் ஷா ஒரு முறை சந்தித்து பேசினால், அக்கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து விடும் என, அவருக்கு தகவல் சொல்லப்பட்டது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில், தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்த்தால், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் கடந்த 7ம் தேதி, தமிழகம் வந்து, பா.ம.க., - தே.மு.தி.க., தலைவர்களை சந்தித்து பேசவும், தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் ஆலோசிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, ராமதாஸ் பிடி கொடுக்கவில்லை. இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக, பா.ஜ., மேலிடத்துக்கு தகவல் சென்றுள்ளது.

வாய்ப்பு

இருந்தபோதும், ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் வாயிலாக, ராமதாசை, அமித் ஷா சந்தித்துப் பேசினால், அவரும் தே.ஜ., கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என, பா.ஜ., தரப்பில் கட்சி மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, தினகரன், பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, இன்று சென்னையில் நடக்க உள்ள கட்சி பொதுக்குழுவில் ஆலோசித்துவிட்டு பதில் கூறுவதாக, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அ.தி.மு.க., பொதுக்குழு முடிந்த பின், தமிழகம் வர அமித் ஷா முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவே, கடந்த 7ம் தேதி, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 10, 2025 21:12

அதனால் தான் பாஜகவை தவிர்க்கிறார்.


vivek
டிச 10, 2025 22:38

அங்கே காங்கிரஸ் கழட்டிட்டு போகுதே பொய்ஹிந்து


rama adhavan
டிச 10, 2025 22:49

தவிர்தால் நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சிக்கு நல்லது. ஆனால் பழனிச்சாமி அதள பாதாளத்திற்கு போய் தொண்டர் இல்லாமல்அரசியலில் அஸ்தமனம் ஆகி விடுவாறே?


S.L.Narasimman
டிச 10, 2025 16:56

அதிமுகாவில் சேர்ப்பதும் விலக்குவது அவர்கள் கட்சி விவகாரம் சேர்ப்பதில் கட்சிக்கு எவ்வித பாதிப்பு வரும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த அந்த கட்சி தலைவர்களுக்கு தெரியும்.


Rengaraj
டிச 10, 2025 15:47

காத்திருக்கலாம், தவறில்லை. எடப்பாடி நம்முடைய மாநிலத்தில் ஒரு முக்கியமான எதிர்க்கட்சி தலைவர். முதல்வராக இருந்தவர். அனுபவசாலி. அரசியலை கீழ்மட்டலிருந்து பார்த்தவர். கீழ்மட்டத்திலிருந்து வளர்ந்தவர். அவருடைய அனுபவத்தில் அவரும் வாக்காளர்களின் எண்ணவோட்டத்தை எடைபோடக்கூடியவர். இன்று நடந்த பொதுக்குழுவில் அவருக்கே முழு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறது என்று சொன்னால் கட்சி அவர் தலைமையில் இயங்க காத்திருக்கிறது என்று பொருளாகிறது. அனைத்து தொகுதிகளிலும் தன்னந்தனியாக திமுகவை எதிர்கொள்ள அண்ணாதிமுகவை விட வேறு பலமான , சரியான எதிர்க்கட்சி எதுவும் இல்லை என்றும் சொல்லலாம். என்னதான் நமக்கு வலு இருந்தாலும் கூட்டணியாக எவ்வளவு பேரை துணைக்கு வைத்துக்கொண்டு போட்டியை சந்திப்பது சாணக்யத்தனம். இதில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு களத்தில் எதிர்க்கட்சிகளோடு தேர்தலை சந்திப்பது மிக நல்லது. எடப்பாடி இதை உணர்ந்து தேர்காற்றாற்போல் வியூகங்களை வகுப்பார் என்று நம்பலாம்.


Venugopal S
டிச 10, 2025 15:09

இந்திய அரசியலில் எப்படி இருந்தவர் தமிழக அரசியலில் இப்படி ஆகி விட்டாரே!


duruvasar
டிச 10, 2025 14:11

மேங்கோ புளித்ததோ வாய் புளித்ததோ மேட்டர்


அப்பாவி
டிச 10, 2025 11:24

யாருக்கோ யாரோ காத்திருந்தது போய்...


S.V.Srinivasan
டிச 10, 2025 09:48

எடப்ஸ் கூட்டணியை விட்டி வெளியில் வருவது பி ஜே பிக்கு நல்லது. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம்.


பாலாஜி
டிச 10, 2025 07:54

சபாஷ் எடப்பாடி பழனிசாமி.


vivek
டிச 10, 2025 09:08

சபாஷ்...அப்போ திமுகவிற்கு ஆப்பு நிச்சயம்...


SULLAN
டிச 10, 2025 16:19

ஆப்பு ஆ திமுகவு க்கா


vivek
டிச 10, 2025 18:21

ஆம் இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை