உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துாய்மை பணியாளர் போராட்டத்தில், சட்ட விரோத கும்பல் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி முடிவை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை, ஆக.,13 நள்ளிரவில் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, போலீசார், துாய்மை பணியாளர்களை தாக்கி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதோடு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, ஜோதி என்பவர் உட்பட 12 பெண் துாய்மை பணியாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1hrqqc9a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஆஜராகி, ''போராட்டத்தில் 1,400 பெண்கள் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க, 200 பெண் காவலர்கள் அழைத்து வரப்பட்டனர். துாய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது, கட்டுப்பாடுடன் செயல்படும்படி, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதை மீறி, போலீசார் அத்துமீறி உள்ளனர்,'' என்றார்.இதை மறுத்த, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். போலீசார் மீது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தாக்குதல் நடத்தினர்.''போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்து, துாய்மை பணியாளர்களை தவறாக வழிநடத்தி, தாக்குதலை நடத்தியது. பேருந்துகளையும் சேதப்படுத்தி உள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன,'' என்றார்.இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தும்போது, இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது புதிதல்ல' எனக்கூறிய நீதிபதிகள், 'நீதிமன்றம் உத்தரவிட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை' என, கேள்வி எழுப்பினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும்போது, அதுகுறித்து ஓட்டளித்தவர்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுக வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் முறையான அனுமதி பெற்று, போராட்டங்களை நடத்த வேண்டும். இது தொடர்பாக, அனைத்து ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Padmasridharan
செப் 13, 2025 08:42

அனுமதி பெற்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கூக்குரல் இட்டால் அது எப்படி போராட்டம் ஆகும் சாமி. . காக்கி உடை அணிந்தவர்கள் மனசாட்சியோடு எத்தனை பேர் நியாமான வேலையில் ஈடுபடுகிறார்களென்று அவர்களுக்கே தெரியும். தற்பொழுது தூய்மை பணியாளர்களும் மக்களிடையே சண்டை போடுவதும், பணம் வாங்குவதும் நடக்கின்றது.


Gajageswari
செப் 13, 2025 05:42

அரசு எந்த போராட்டமாக இருந்தாலும் சமுக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறுகிறது. இனி வரும் காலங்களில் போராட்டம் நடத்துபவர்கள் அடையாள அட்டை அரசு வழங்க வேண்டும். உதை அணிந்து கொண்டு போராடீடம் நடத்த வேண்டும் என்ற விதி ஏற்படுத்தலாம.


ManiMurugan Murugan
செப் 13, 2025 00:26

தூய்மை பணியாளர்கள் அரசு துறை யைச் சார்ந்தவர்கள் ஒரு துறை யை தனியார் மயமாக்க வேண்டும் என்றால் சரியான காரணங்களுடன் சட்டசபை ரயில் அறிக்கை வெளியிடப்ப பட்டு அது குறிப்பிட்ட துறையில் ஒட்டப்பட்டு தொழிலாளர்கள் கருத்து கேட்டு நடக்க வேண்டும் இப்படி எவ்வித அறிக்கை யும் இல்லாமல் மாற்றுவது சட்டப்படி குற்றம் ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றம் ஓடும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை சொல்லி விட்டு அதை மறைக்க ஒப்புக்கு ஒப்பாரி வைப்பது கேவலம் ஒரு துறையை தனியாரிடம் விற்றுவிட்டு வீடுகட்டி தருவதாக சொல்வது திரை கதை வசன நாடகம் தனியார் துறைக்கு எதற்கு வீடு இதைக் கூட யோசி க்கும் நிலையில் இல்லை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி மக்களை ஏமாற்ற இப்படி வசனம்


M S RAGHUNATHAN
செப் 12, 2025 18:38

விடியல் ஆட்சியில் நீதித் துறையிலும் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது.


Muralidharan S
செப் 12, 2025 16:10

விவசாயிகள் போராட்டம் என்று விவசாயிகளின் போர்வையில் சட்ட விரோத / சமூக விரோத கும்பல்களை நுழைத்த மாதிரியா..??? தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் சிலர் யூட்டுபர் ஒருவரின் வீட்டிற்குள் சென்று மல கழிவுகளை வீசிய மாதிரியா ???.. இந்தியாவில் சில மாநிலங்களிலும் நடக்கும், நடத்தப்படும் கலவரங்களாக போராட்டங்கள் என்ற பெயரில் இருக்கட்டும்... உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளில் நிகழும் / நிகழ்த்தப்படும் போராட்டங்களாகட்டும்.. இதன் பின்னால் ஏதோ சில மிகப்பெரிய அழிவு சக்திகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.. எல்லாமே ஒரு organized crime போல இருக்கிறது.. இந்தியா சுதாரித்துக்கொள்ளவேண்டும்...


lana
செப் 12, 2025 15:34

சட்ட virotha கும்பல் ன்னு ஒன்னு இங்கு தனியாக இருக்கிறதா. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது


shakti
செப் 12, 2025 14:32

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலும் இதுதான் நடந்தது.. என் ஜி ஓ புகுந்து கலவரம் நடத்தியதால் தான் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது ..அப்போது அதை எதிர்த்த தீய மு க , இப்போது அதே சாக்கை சொல்கிறது


திகழ்ஓவியன்
செப் 12, 2025 12:44

உண்மை தான் அங்கு சிலர் இந்த போராட்டத்தை வெளி ஆட்களை இறக்கி எப்படி ஜல்லிக்கட்டு விற்கு கொண்டுபோனோமோ அப்படி கொண்டு செல்லவேண்டும் என்று பேசியதா சொல்லுகிறார்கள், கடைசியில் கோர்ட்டு அங்கிருந்து அப்புற படுத்த சொல்ல இது முடியாமல் போனது


கூத்தாடி வாக்கியம்
செப் 12, 2025 11:48

தி முக வை தான் அப்படி சொல்றரோ


திகழ்ஓவியன்
செப் 12, 2025 12:41

இல்லை DESIGN பார்த்த மத கலவரத்தில் ஈடுபடும் பிஜேபி குண்டர்கள் போல் தான் இருக்கு


vivek
செப் 12, 2025 13:53

அந்த கும்பலில் இருந்தார்


M Thavanantham
செப் 12, 2025 11:00

நமது பிரதமர் உள்துறை அமைச்சர் நிதி அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் நான் 20-10-1994 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் மாநில அரசு அதிகாரம் பெற்று பணி செய்து மூன்று ஆண்டுக்கு பின் சீனியர் லாயர் ஆக பட்டம் பெற்றவர் நமது மத்திய அரசு துறையில் அந்த பணியில் 2007 ஆம் ஆண்டு வரை நமது ஆசியாவிலே மிக பெரிய வெற்றி கண்டு உள்ளது 4-12-2008 ஆம் ஆண்டு சப்பணி இஇணைக்கப்பட்டு உள்ளது சப்பணி