உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு

சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு

சென்னை : சத்ய சாய் பாபாவின் அற்புதங்களை விளக்கும், 'அனந்தா' படம், அடுத்த மாதம் 'ஜியோ ஹாட் ஸ்டாரில்' வெளியாக உள்ளது.சத்ய சாய் பாபாவின் அருளால், ஐந்து பேரின் வாழ்க்கையில் நடந்த அற்புதம், படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சென்னையில் வெளியிட்டார். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேலாண் அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் மேற்பார்வையில், டாடா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். தேவா இசையமைக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7nxt4jrd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழாவில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது: இது, மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன், பாடலாசிரியர் பா.விஜய், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என, போனில் கேட்டார். நான் அவரின் எழுத்து மற்றும் அரசியல் திறமைகளை வியந்து பேசிக் கொண்டிருந்த போதே, 'அவரிடமே பேசுங்கள்' என்றார். அப்போது, கருணாநிதி முதல்வராக இருந்தார். அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அவரை சந்தித்ததும், 'பாட்ஷா' படத்தை வெகுவாக பாராட்டி விட்டு, தன் கதை, வசனத்தில் இயக்கும் வாய்ப்பை அளித்தார்.அப்போது, தினமும் காலை, 4:00 முதல் 6:00 மணிக்குள் வசனத்தை வாசிப்பார். கதை நகரும் சூழலை விவரிப்பார். ஒரு இடத்தில், 'இன்னும் சிறப்பாக இருக்கலாமே' என்றேன். அவர், ஒரு இயக்குனர் தான் படத்தின் ஆணி வேர் எனக்கூறி, என் கருத்துக்களையும் அனுமதித்தார். பா.விஜய் நடிப்பில் அந்த படம் தயாரான போது, கருணாநிதி மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இன்னொரு நாள், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் போனில் அழைத்து, 'சங்கமம்' படத்தை வியந்து பாராட்டினார். தற்போது, 'அனந்தம்' படத்தின் டீசரை, அவரது மனைவி துர்கா வெளியிட்டுள்ளார். இந்த படம், பக்தி இழையோடு உருவாகி இருந்தாலும், இது, பெரிய திரைக்கு ஏற்ற வகையில், விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்டுள்ளது. இது, பாபாவின் அருளால் நிகழ்ந்துள்ளது. அவரது பக்தர்கள், இதை பார்க்கும் போது, அவரையே தரிசித்த உணர்வை பெறுவர். உண்மையான அன்பு, மனிதாபிமானம், அனைவருக்கும் உதவும் குணம் உள்ளிட்ட, சாய்பாபாவின் உயர்ந்த போதனைகளை, இந்த படம் வெளிப்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், நடிகர்கள் தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்