இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளை தவிர்க்க அன்புமணி வேண்டுகோள்
வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:00 மணிக்கு, மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில், சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கவுள்ளது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.மாநாடு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். எனவே, அன்று இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கிறேன்.- அன்புமணி, தலைவர், பா.ம.க.,