உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றணும்: அன்புமணி வலியுறுத்தல்

டாஸ்மாக் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றணும்: அன்புமணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.அவரது அறிக்கை: தமிழக அரசின் மது வணிக நிறுவனமான டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த இரு நாட்களாக நடத்தி வரும் சோதனைகளில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்யப் பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது.

விசாரணை

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகனுடன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் வாட்ஸ்-ஆப் மூலம் நடத்திய தகவல் பரிமாற்றத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய வேண்டும்; யாருக்கு பார் ஒப்பந்தம் வழங்க வேண்டும். வாகன ஒப்பந்தம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. அவற்றை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரும் முழுமையாக செய்து முடித்ததற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

பணம் காய்க்கும் மரம்

டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய தரகர்களின் தலையீடு இருந்திருக்கிறது; ஊழல்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இவையே சான்று. மேலாண்மை இயக்குனரிடம் அமலாக்கத்துறையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது வீட்டிலும், அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசுக்கு மட்டுமின்றி, ஆட்சியாளர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக திகழ்வது டாஸ்மாக் தான் என்பதை அண்மைக்காலமாக வெளியாகி வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு மாறாக டாஸ்மாக்கை ஊழல் சுரங்கமாக மாற்றியிருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்.

சி.பி.ஐ., விசாரணை!

டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள்; அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
மே 17, 2025 19:06

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு ஆணையிட வேண்டுமாம். யாருக்கு ஆணை? மாநில நிர்வாக general consent பெற வேண்டும் என்ற விதியை standing consent என்று மாற்றி வாதிட்டு வென்று விட்டனர். பல மாநிலங்கள் சிபிஐ உள்ளே நுழைந்து செயல்பட அனுமதிப்பது இல்லை. சிபிஐ, அமுலாக்க துறை.. மாநில தொடர்பு வழக்கின் ஆரம்ப நிலை அறிய தான். சிபிஐ உள்துறை செயலாளர் மூலம் ஒரே உத்தரவில் அனைத்து தீர்ப்புகளை / மாநில ஆணைகளை ரத்து செய்ய முடியும்.


SUBBU,MADURAI
மே 17, 2025 14:11

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2004க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது உத்தரப்பிரதேசத்தில் பரேலியில் உள்ள ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரிக்கும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராயச்சி மையத்திற்கும் கையூட்டு பெற்று அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவுசெய்திருக்கிறது. அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியில் சுற்றிக் கொண்டு உள்ளார் இந்த உத்தமர் சின்ன மாங்காய் இவர் டாஸ்மாக் வழக்கில் சிபிஐ பற்றி பேசுவதுதான் வேடிக்கை!


Amar Akbar Antony
மே 17, 2025 15:26

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. உபிசுக்களுக்கு அறிவு இல்லயா?


Kjp
மே 17, 2025 17:11

அண்ணாமலை பல்கலைக் கழக பாலியல் தொடர்பான வழக்கில் அந்த சாரை காப்பாற்ற எத்தனை முயற்சிகள் எப்ஐ ஆரை கசிய விட்டது திமுக நிர்வாகி அல்ல அனுதாபிதான் என்று உருட்டியவர்கள் பொள்ளாச்சி தீர்ப்பை பற்றி பேசலாமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை