உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி நடைபயணத்துக்கு தடை... போலீசை வைத்து விளையாடியது யார்

அன்புமணி நடைபயணத்துக்கு தடை... போலீசை வைத்து விளையாடியது யார்

பா.ம.க., தலைவர் அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானதன் பின்னணியில், தி.மு.க., - ஐ.டி., அணி செயல்பாடு உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இது குறித்து, அரசியல் மற்றும் போலீஸ் வட்டாரங்களில் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8eq7vv23&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு' எனும் பெயரில், 100 நாள் நடைபயணத்தை, திருப்போரூரில் அன்புமணி துவங்கினார். இந்த நடைபயணம், நவ., 1ல், தர்மபுரியில் நிறைவு பெறும்படி திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியொரு நடைபயண திட்டத்தை அன்புமணி அறிவித்ததுமே, ராமதாஸ் தரப்பு, நடைபயணத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டைப் போட திட்டமிட்டது. இதற்காக, 'அன்புமணி நடைபயணத்தால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும்; அதனால், அதற்கு அனுமதி வழங்கக்கூடாது' என, ஜூலை 22ல், ராமதாஸ், டி.ஜி.பி.,க்கு புகார் மனு அனுப்பினார். இந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பது என புரியாமல் தவித்த போலீஸ் உயர் அதிகாரிகள், ராமதாஸின் புகார் கடிதத்தை அப்படியே, அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்தது. புகார் கடிதத்தின் மீது சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், நடைபயணத்தைத் துவங்கிய அன்புமணி, தி.மு.க.,வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். கூடவே, 'உரிமை பயணம்' என்ற தலைப்பில், வீடியோ காட்சிகளுடன் கூடிய, 5:11 நிமிட பாடல் ஒன்றையும் வெளியிட்டார். அதில், 'தி.மு.க., கொடி, முதல்வர் ஸ்டாலின் படத்தை காட்டி, தி.மு.க., அரசை அகற்ற வேண்டும்; தி.மு.க., ஆட்சியை விரட்டிட அன்புமணி போர்படை திரள்கிறது. 8 திசைகளிலும், இக்குரல் ஒலிக்க வேண்டும்' என, இருந்தது. இதனால், அன்புமணி மீது தி.மு.க., தரப்பு கோபம் அடைந்தது. தலைமையில் இருந்து, தி.மு.க., - ஐ.டி., அணியினருக்கு உத்தரவுகள் பறந்தன. கூடவே,ஜூலை 24ல், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் கமிஷனர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை நகல்களும் அனுப்பப்பட்டன. இந்த நகல்களை வைத்து, தி.மு.க., - ஐ.டி., அணி சித்து விளையாட்டைத் துவங்கியது. சுற்றறிக்கை நகலை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு அனுப்பினர். அதை அப்படியே செய்தியாக்கிய தொலைக்காட்சிகள், அன்புமணி நடைபயணத்துக்கு போலீஸ் தடை என செய்தி வெளியிட்டனர். இதனால், போலீசார் மீது கோபம் அடைந்த அன்புமணி, சட்ட ரீதியில் எதிர்கொள்ள முடிவெடுத்தார். இருந்தாலும், தன்னுடைய அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவை போலீஸ் அதிகாரிகளுடன் பேச வைத்தார். அப்போது அவர்கள், இந்த விஷயத்தில் நடந்த விபரங்களை தெரிவித்து, அவரை சமாதானப்படுத்த, எவ்வித தடங்கலும் இன்றி, அன்புமணி தன்னுடைய இரண்டாம் நாள் நடைபயணத்தை செங்கல்பட்டில் தொடர்ந்தார். இவாறு அவ்வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை