வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உங்கள் டாக்டர் கொய்யாவின் மதச்சார்பின்மை க்கு குந்தகம் வராமல் சர்ச் மசூதிக்கும் போய்ட்டு வந்துடுங்க
வாழ்த்துக்கள்
சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா, சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தார்.ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில், பக்தர்கள் விரதம் இருந்து, கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வர். இது தவிர, ஆண்டுதோறும் மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க முடியும்.இந்நிலையில் விரதம் இருந்து, இருமுடி கட்டி, சபரிமலை யாத்திரை மேற்கொண்ட சவுமியா நேற்று முன்தினம், 18 படிகள் வழியாக சென்று, அய்யப்பனை தரிசித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, 'எக்ஸ்' பதிவில், 'சபரிமலையில், 18ம் படியேறி சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது, என் சிறு வயது கனவு; 50 ஆண்டு கால வேண்டுதல் நிறைவேறியது' என தெரிவித்துள்ளார்.
உங்கள் டாக்டர் கொய்யாவின் மதச்சார்பின்மை க்கு குந்தகம் வராமல் சர்ச் மசூதிக்கும் போய்ட்டு வந்துடுங்க
வாழ்த்துக்கள்