உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை

அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிச., 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hluts1ug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37 என்பவரை, கடந்தாண்டு டிச., 25ல் கைது செய்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரனுக்கு எதிராக, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.பின், இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7ல் மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த 23ல் நிறைவு பெற்றதை அடுத்து, கடந்த மே 28ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இன்று (ஜூன் 02) தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்தது.தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ''குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்க கூடாது'' என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாட்கள் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 120 )

Amar Akbar Antony
ஜூன் 02, 2025 22:23

துர்வேஷ் நீங்கள் சொன்னதில் ஒன்றை விட்டுவிட்டிர்கள் அதாவது மிஸா கைதியாக ஒருத்தர் இருந்தாரே அவருக்கு கூட லாதிக்கட்டி ஒரு போலீஸ் விடாமல் அனைவரும் ஷூ மற்றும் கிடைத்ததை எல்லாம் வைத்து அடித்து துவம்சம் செய்ததுபோல இக்குற்றவாளிகளையும் செய்திருக்கவேண்டும் என்று கூற மறந்துவிட்டிர்கள். இது உங்களுக்கு நினைவுபடுத்தத்தான். காலம் வரும் அடுத்தகோடையில் மிச்சம் மீதி எல்லாம் அகப்படும். காத்திருக்கவும்.


anonmi
ஜூன் 02, 2025 22:20

நிதியைக் காப்பாற்ற மதுரை மாநாட்டில் முடிவெடுத்து விட்டோம். இனி சாராவது மோராவது.


SIVA
ஜூன் 02, 2025 21:45

துர்வேஷ் சகாதேவன் நாளை உன் வீட்டு பெண்கள் ஞானசேகரன் போன்ற ஒருவனால் பாதிக்கப்பட்டால் கூட இப்படித்தான் கருத்து சொல்வோயா, சாவர்க்கருக்கும் நீ எழுதுவதற்கும் என்ன சம்பந்தம் ,


Karthik
ஜூன் 02, 2025 21:30

ஏற்கனவே அந்த சார் ஐ காப்பாத்தியாச்சு.. இனி இவனை அடுத்த வருஷம் அண்ணா பிறந்த நாளுக்கு ரிலீஸ் பண்ணி சுதந்திரமா வெளிய உலாவ விட்ருவாங்க.. அப்புறம் என்ன.?? மறுபடியும் மொதல்ல இருந்து கோடு போட வேண்டியதுதான்..


vbs manian
ஜூன் 02, 2025 21:10

ஜாமினில் வெளி வந்து கவுன்சிலர் எம் எல் ஏ அமைச்சர் என்று ஆகாமல் இருக்க பிரார்த்தனை செய்வோம்.


Kasimani Baskaran
ஜூன் 02, 2025 19:15

தீம்க்கா அனுதாபி முன்னாள் நிர்வாகி ஞானசேகரனுக்கு தண்டனை கொடுத்தார்களோ இல்லையோ பொள்ளாச்சி கேடித்தனம் பெரியதா அல்லது அண்ணா பல்கலை கேடித்தனம் பெரிதா என்று பட்டிமன்றமே நடத்துகிறார்கள். இதுகளுக்கு பெண்கள் ஒரு பொழுதுபோக்கு என்கிற கோட்பாடு வெட்கக்கேடானது.


ManiK
ஜூன் 02, 2025 19:05

அவசர தீர்ப்பு.. திமுக முக்கியஸைதர்களை பாதுகாத்த தீர்ப்பு. சீபிஐ விசாரனை தான் உண்மையை கொண்டுவரும்.


PV
ஜூன் 02, 2025 20:44

Correct


Indian
ஜூன் 02, 2025 18:57

Shall we release this person.Every criminal one to be punished


Ganesan
ஜூன் 02, 2025 18:48

பா.ஜ.க வில் இதெல்லாம் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி தானே, பிறகு இதில் என்ன சர்ச்சை


raghavan
ஜூன் 02, 2025 18:41

இன்னும் கொஞ்ச நாளில் ஐகோர்ட் அப்பீல் போட்டுவிட்டு ஜாமீனில் வெளியே சுத்துவான். கட்சி கூட்டத்தில் பிரியாணி போட்டு செல்பீ எடுத்து போடுவான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை