உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி டீன் நியமனத்தில் அண்ணா பல்கலை விதிமீறல்

கல்லுாரி டீன் நியமனத்தில் அண்ணா பல்கலை விதிமீறல்

சென்னை:ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளுக்கு மாறாக, உதவி பேராசிரியர்களை, 'டீன்' பதவிக்கு நியமித்து, அண்ணா பல்கலை விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் மற்றும் அண்ணா பல்கலை விதிமுறைகளின்படி, பேராசிரியர் ஒருவரை மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பு கல்லுாரிகளுக்கு 'டீன்' ஆக நியமிக்கலாம்.அவர், 15 ஆண்டுகள் கல்வி பணியிலும், சர்வதேச ஆய்விதழ்களில் எட்டுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி, எட்டு கல்லுாரிகளில் டீன் பதவிக்கு, உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அண்ணா பல்கலை கீழ் அரியலுார், கோவை, நாகர்கோவில், திண்டிவனம், துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட, 16 நகரங்களில் உறுப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன.அவற்றில், திண்டிவனம், அரியலுார், பண்ருட்டி, நாகர்கோவில், துாத்துக்குடி, திருக்குவளை, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய எட்டு உறுப்பு கல்லுாரிகளில், 'டீன்' பதவியில், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதாவது, கற்பித்தலில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தான், உதவி பேராசிரியராக நியமிக்கப்படுகின்றனர். அவர்களை, கல்லுாரியை நிர்வகிக்கும் டீன் பொறுப்புக்கு நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லுாரிகள் உள்ளிட்டவற்றுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., விதிகளை பின்பற்றிதான், அண்ணா பல்கலை அங்கீகாரம் வழங்குகிறது. உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், முதல்வர் நியமனம் உள்ளிட்டவற்றை கடுமையாக ஆய்வு செய்து தான் அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால், அதன் உறுப்பு கல்லுாரிகளில், டீன் நியமனத்தில், ஏ.ஐ.சி.டி.இ., விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை பல்கலை நிர்வாகம் கண்டுகொள்ளாதது ஏன் என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mkha
ஜூலை 11, 2025 18:45

எங்கும் ஊழல். துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்ட வில்லை. அதனால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். பணம் இருந்தால் ஒருவருக்கே பல பதவிகள். தரத்திற்கு பெயர் போன பல்கலைக்கழகம் இப்போது மாணவர்களின் கல்வியை வீணாக்குகிறது


Sivaranjani Ranjith
ஜூலை 11, 2025 17:30

ரூல்ஸ் லம் தனியார் கல்லுரிக்கு மட்டும் தானா கோவேர்ன்மெண்ட்க்கு ரூல்ஸ் லாம் கிட்டியதா?


Dr ARUL JOSE J
ஜூலை 11, 2025 14:21

அண்ணா பல்கலைக்கழகம் போதுமான நிர்வாக அனுபவமில்லாத உதவி பேராசிரியர்களை டீன் பதவிக்கு நியமித்தது ஒரு தவறான முடிவாகும். இவ்வாறு அனுபவமற்றோர் உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கும்போது அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்கள் கல்வி தரத்தையும், மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் நலனையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இச்செயல் கல்வி நிறுவனத்தின் மதிப்பு, நம்பிக்கை மற்றும் அகாடமிக் நற்பெயருக்கு தீமையாக அமையக்கூடும். எனவே, இந்நியமனங்களில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகள் மீறாதபடி திறமை, அனுபவம் மற்றும் தகுதி போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இப்பொறுப்புகளுக்கு பேராசிரியர்களை நியமிக்கவேண்டும்.


Ranjith ganesan
ஜூலை 11, 2025 10:55

தகுதியற்றவர் நிர்வாகம் எப்படி நல்ல மாணவர்கள்களை உருவாக்க முடியும் மாணவர் எதிர் காலம் என்ன ஆகும். அண்ணா பல்கலைக்கழக தரத்தை குறைப்பதாகக் இருகிறது.தகுதி வாய்ந்த பேராசிரியர் நிலமை என்ன? முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லவும்


Vaishnavi Vaishu
ஜூலை 11, 2025 10:43

Anna University preach other self financing colleges but never follow its own preaching when comes for it. Hope anna university corrects it mistake.


Vaishnavi Vaishu
ஜூலை 11, 2025 10:39

அண்ணா பல்கலைக்கழகம் ஒரு போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை