உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்'' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: டிசம்பர் 23ம் தேதி, 2024ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் சகோதரிக்கு மிக மோசமான, கோரமான ஒரு பாலியல் வன்கொடுமை நடந்தது நமக்கு தெரியும். 23ம் தேதி நடந்த பாலியல் சம்பவத்திற்கு 25ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தார்கள். 25ம் தேதி காலையில் இருந்து ஒரு சாமானிய மனிதனாக நானும் பேச ஆரம்பித்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5qufckw5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

call detail record

25ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று அதையும் நாங்கள் உங்கள் முன் வைத்தோம். எல்லா அரசியல் கட்சிகளும் போராடினார்கள். அரசியல் பேச விரும்பவில்லை. நான் சி.டி.ஆர்., (call detail record) ஆதாரத்தின் அடிப்படையில் பேச போகிறேன். 25ம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு பல விஷயங்களை பார்த்தோம். எப்.ஐ.சி., கசிய விடப்பட்டது.

30 ஆண்டுகள் கடுங்காவல்

27ம் தேதி நான் ஒரு அறப்போராட்டத்தை முன் எடுத்தேன். சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து கண்காணித்தது. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. முக்கிய குற்றவாளியாக, ஒரே குற்றவாளியாக இருக்க கூடிய ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அன்றைக்கு கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறோம். ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தது நம்ம எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

தொலைபேசி எண்

டிசம்பர் 24ம் தேதி, ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் கைது செய்கிறார்கள். பிறகு வெளியே விட்டு விடுகிறார்கள். 25ம் தேதி மாலை மீண்டும் கைது செய்கிறார்கள். ஏன் கைது செய்த பிறகு விடுதலை செய்தார்கள். இதில் யாரு எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள். எதற்காக தி.மு.க.,வில் சில தலைவர்களுக்கு பதற்றம்? ஆதாரங்களை எங்கு எல்லாம் அழித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. 9042977907 என்பது தான் ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசி எண்.

இதையெல்லாம் விசாரித்தார்களா?

சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் தொலைபேசி பிளேட் மோடில் இருந்ததாக அரசு வழக்கறிஞர் சொல்லி உள்ளார். 8.52 மணி வரை பிளேட் மோடில் இருந்ததை தான் சி.டி.ஆர்., சொல்கிறது. பெண்ணை வன்கொடுமை செய்த பிறகு இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் முதலில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு தான் போன் செய்துள்ளார். காவல் துறை மீது நான் அதிக மதிப்பு வைத்து இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த காவல் துறை அதிகாரி பெயரையும், பதவியையும், மொபைல் எண்ணையும் வெளியிடவில்லை.

5 முறை போனில் பேசியது எதற்கு?

48 மணி நேரம் கழித்து அரசு என்ன பதில் சொல்லும் என்பதை பார்த்து விட்டு வெளியிடுகிறேன். 6 நிமிடம் கழித்து 9.01 மணிக்கு ஞானசேகரனுக்கு மீண்டும் அந்த போலீஸ் அதிகாரி அழைக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி யார்? அவர் பேசியதை மறைத்தது ஏன்? குற்றம் செய்த பிறகு போலீஸ் அதிகாரிக்கு ஞானசேகரன் கூறியதை விசாரித்தீர்களா? அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த மறுநாள் (டிச.,24ம் தேதி) ஞானசேகரனும், தி.மு.க., வட்டச் செயலாளர் சண்முகமும், 5 முறை போனில் பேசுகின்றனர்.காலை 7.27 மணிக்கு முதல் அழைப்பு. மாலை 4.01 மணி வரை 5 முறை பேசுகிறார்கள். அதன் பிறகு தான் போலீஸ் ஞானசேகரனை அழைத்துச் செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது பேசவில்லை. வெளியில் வந்த பிறகு மீண்டும் ஞானசேகரனும் சண்முகமும் பேசுகின்றனர். எதற்கு விடுவித்தனர்? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். 25ம் தேதி மீண்டும் ஞானசேகரனை கைது செய்த பிறகு அண்ணா பல்கலை கேமரா வேலை செய்யவில்லை என போலீசார் சொல்கிறார்கள்.

ஆதாரங்கள் அழிப்பு

டிச.,24ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த பிறகு, தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு போனில் பேசுகிறார். 8.32 மணிக்கு மீண்டும் இருவரும் பேசுகின்றனர். எதற்காக இவ்வளவு பதட்டம்? அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், குறிப்பிட்ட அந்த 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். டிச.,24ம் தேதி இரவு தான் முக்கியமான தினம். அன்று தான் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன.யார் அந்த சார் என்ற கேள்வியை முதலில் இருந்து கேட்கிறோம். முதல்வருக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கிறது. 24ம் தேதி பல விஷயங்கள் நடந்து இருக்கிறது. நான் எதற்கு பயப்பட மாட்டேன். உடும்பு பிடியாக பிடித்து போக போகிறேன். அண்ணா பல்கலை மாணவியின் சகோதரன் ஆக நான் சாட்டையால் அடித்து கொண்டேன். கேள்விகள் தொடர்ந்து கேட்போம். ஆளும் கட்சியில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது. யார் எல்லாம் பதவியை தவறாக பயன் படுத்தி உள்ளனர். போலீசாரின் கையை கட்டி போட்டார்கள். 24ம் தேதி ஞானசேகரனை விடுதலை செய்து ஆதாரங்களை அழிக்க யார் எல்லாம் உடந்தையாக இருந்தார்களோ அவர்களுக்கு குற்றவாளிகள் தான். அதில் யார் அந்த சார் என்பவர் மறைந்து இருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Radhakrishnan Seetharaman
ஜூன் 03, 2025 21:04

தமிழக அரசியல் இப்படி பரபரப்பாக இருந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 03, 2025 16:02

குற்றவாளிக்கு ஆதரவாக செயல் பட்டவர்களும் குற்றவாளிகளே எனவே அண்ணாமலை அண்னன் சொல்வதுபோல் விசாரித்தால் என்னததவறு .. எய்தர்வகள் எங்கோ இருக்க அம்புகளை நோவானேன் ...


G Mahalingam
ஜூன் 03, 2025 15:54

உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்.‌ உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடிக்கு திமுக ஆட்சி அல்வா கொடுத்து விட்டது.


குடிகாரன்
ஜூன் 03, 2025 15:49

திராவிட ஆட்சியில் காவல் துறை எப்படி செயல் படுகிறது என்று மக்கள் அறிய வேண்டும் அல்லவா. அண்ணாமலை முன்பே கொடுத்து இருந்தால் தடயங்கள் அழிக்கப்பட வசதியாக இருக்கும்


Narayanan
ஜூன் 03, 2025 15:20

தனது ஆட்சிக்காலத்திலேயே அவனை விடுதலைசெய்ய உச்சநீதிமன்றம் வரை பேசி வைத்து ஆயிற்று . அதுதான் நடக்கும்


venugopal s
ஜூன் 03, 2025 15:15

அது தான் உயர் நீதிமன்றமே இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டதே, அப்புறம் என்ன விசாரணை? அப்படி பார்த்தால் குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூடத்தான் நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை!


ஆரூர் ரங்
ஜூன் 03, 2025 17:04

அன்புத் தம்பிக்கு வேண்டப்பட்ட பெருசு யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. இப்போ கூட விசாரிக்கலாம்.


KavikumarRam
ஜூன் 03, 2025 14:58

இன்னமுமே தமிழகத்தில் நடந்த நடந்து கொண்டிருக்கும் எந்த பிரச்சினைகளையும் பாஜகவும் அதிமுகவும் பெரிய அளவு போராட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு செல்லவில்லை. எதோ பேருக்கு அறிக்கை விடுவது அப்பப்போ உப்புக்கு சப்பாணியாக கூட்டமாக நின்று கொண்டு குரல் கொடுப்பதுன்னு அதிமுக செய்கிறது, பாஜகவும் திறனுடன் போராட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. அல்லது அவர்கள் நடத்தும் போராட்டங்கள் ஆர்எஸ்பிஐ மீடியாக்களால் மறைக்கப்படுகிறது. இப்பவாவது இதை ஞாபகப்படுத்துனீங்களே இல்லீன்னா மாசற்றவன்னு மறைக்க ஆரம்பிச்சிருப்பானுங்க.


Kjp
ஜூன் 03, 2025 14:51

அமைச்சர் ரகுபதி அண்ணாமலைக்கு என்ன சால்ஜாப்பு பதில் சொல்ல போகிறார்.


Palanisamy Sekar
ஜூன் 03, 2025 14:50

அண்ணாமலையின் வீடியோ செய்திகள் வரும் சற்றுமுன்னர் தான் பெருமைப்பட பீத்திக்கொண்டிருந்தார் ஸ்டாலின். பாருங்க எங்கள் ஆட்சியில் விசாரணையை முடித்து சொந்த கட்சிக்காரனுக்கே தண்டனை வாங்கிக்கொடுத்தேன் என்று சொன்னார். இப்போ புரியுது ஏனிந்த அவசரமென்று. கட்சிக்காரன் பெரிய பதவியில் இருப்பவனை காப்பாற்ற அவசர அவசரமாக தீர்ப்பு வாங்கினார்கள். ஆனாலும் இந்த அரசு வழக்கறிஞர் ரொம்பதான் மிரட்டினார்..இனி யாராச்சும் யார் அந்த சார்ன்னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுடுவோம் ன்னு மிரட்டல் தொனியில் சொன்னாரே.. இந்த வழக்கறிஞர் கோர்ட்டருக்கு தவறான செய்திகளை கொடுத்து வழக்கின் போக்கினையே மாற்றிவிட்டார். அதற்காக அவர் மீது வழக்கு பாய்ந்திட வேண்டும். அண்ணாமலையின் வீடியோவை பார்த்துவிட்டு நீதிபதி அவர்கள் மீண்டும் இந்த விசாரணையை பெரிய அளவில் நடத்தியே தீரவேண்டுமுங்க. இதுதான் நம்ம கோரிக்கை


Sridhar
ஜூன் 03, 2025 14:38

இதே குற்றத்தை ரெகுலரா செய்யறவன் அப்போ மட்டும் பண்ணினவுடன் எதுக்கு போலீஸ்காரங்களோடயும் வட்ட செயலாளரோடயும் பேசப்போறான்? பாக்கப்போனா, அன்னைக்கு மாட்டிக்கப்போறோம்னு நினைச்சிருப்பானா? அவன் வாழ்வில் மற்றொரு நாள்தானே அது? அவன் என்ன புது குற்றவாளியா அரசியல் மற்றும் போலீஸ் பாதுகாப்பு தேடறதுக்கு? பாதிக்கப்பட்ட நபர்கூட சம்பவம் நடந்த உடனே புகார் கொடுக்கலையே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை