உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 28) போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tj4md9c3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் தி.மு.க., பிரமுகர் என்பது விசாரணையில் தெரியவந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விபரம் ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது.அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் பின்னணி என்ன?* அண்ணா பல்கலை., வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.* டிசம்பர் 24ம் தேதி சென்னை கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் மாணவி புகார் அளித்தார்.* டிசம்பர் 25ம் தேதி புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தி.மு.க., பிரமுகர் ஞானசேகரனை கைது செய்தனர்.* டிசம்பர் 28ம் தேதி வழக்கு விசாரணையை 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது.* ஜனவரி 8ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.* பிப்ரவரி 24ம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.* இந்த பாலியல் வழக்கில் தி.மு.க., பிரமுகர் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.* இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்தத மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது.* பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் உள்பட 12 பிரிவுகளில் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.* சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஏப் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் விசாரணை நடந்தது.* வழக்கில் போலீசார் தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். *கடந்த மே 20ம் தேதி விசாரணை நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினர் இறுதி வாதங்களை முன் வைத்தனர்.* அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

Palanisamy Sekar
மே 29, 2025 04:09

இந்த நபர் செய்த் குற்றமும் போலீசாரின் விசாரணையும் இந்த நபருக்காக பின்புலம் இருந்தவரின் செல்வாக்கில் வெளியே சர்வ சாதாரணமாக சென்றதும் அதன் பிறகு அண்ணாமலை போன்றோரின் எதிர்ப்பு குரலால் மீண்டும் விசாரணை செய்ததுபோலவும் அவரது கை முறிந்தது போலவும் புகைப்படத்தை வெளியிட்டு கோர்ட்டை மக்களை நம்பவைத்த கதையெல்லாம் கனகச்சிதமாக முடிந்தது என்றால்..பிற பாலியல் வழக்குகளில் காட்டாத இந்த வேகத்தை இந்த வழக்கில் மட்டும் ஏன் அவசரம் அவசரமாக விசாரித்தார்கள் எனபதை அரசியல் அறிந்தோர் புரிந்துகொள்வார்கள். சார் என்று ஒருவர் பாலியல் துன்பத்துக்கு இடையே பேசினார் என்கிற அந்த பெண்ணின் புகார் பற்றி எதுவுமே விசாரிக்காத மர்மம் என்ன? எதிர்க்கட்சிகளும் கூட எதிர்பார்த்த அளவுக்கு போராட்டமோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை. பழனிச்சாமி அவர்கள் சொற்போர் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தார். சி பி ஐ க்கு விசாரணைக்கு போராடியிருந்தால் வெற்றிபெற்றிருக்க முடியும். ஏதோ காம்ப்ரமைஸ் நடந்தது போலவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட்ட அதிகாரிமீது ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத நீதியானது தீர்ப்பின் போதாவது அதனை சொல்ல சொல்லி பெண்ணின் வக்கீல்கள் சொல்லலாம். திருப்தியே இல்லாத வழக்கின் போக்கும் இப்படி இருக்க நீதிமட்டும் எப்படி இருக்கப்போகிறது? ஆளும் கட்சிக்கு விரைந்து முடிக்க அவசரம் தேர்தல் சமயத்தில் மக்களின் நினைவுக்கு வந்துவிட கூடாது என்பதால் இந்த அவசரம். ஆட்சி மாறியதும் யார் அந்த சார் யார் அந்த பெண்ணின் விவரங்களை யார் சொல்லி வெளியிட்டார்கள் என்கிற விவரங்களையெல்லாம் மறுவிசாரணையில் கொண்டுவர வேண்டும். இந்த வழக்கு இதோடு முடியவில்லை என்பதே எனது கருத்து. மீண்டும் சி பி ஐ விசாரிக்கணும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் விடை தெரியாத விவரங்களுக்கு மீண்டும் விசாரிக்கணுமா


தாமரை மலர்கிறது
மே 29, 2025 00:46

அந்த சாரையும் அவர் சார்ந்த அமைச்சரையும் எப்போது குற்றவாளி என்று அறிவிக்க போகிறீர்கள்?


RaKa
மே 29, 2025 00:17

ஐந்தே மாதத்தில் தீர்ப்பு யாரை காப்பாற்ற இவ்வளவு வேகம்? யாரந்த சார் என்று தமிழக மக்கள் ஓரளவு கணித்த பின்னும் ஏன் அவரை காவல் துறை நெருங்கவில்லை?


Matt P
மே 28, 2025 23:36

கட்சி பலத்தையும் கட்சி பெரியவர்களையும் தனதாக்கி அவர்களுக்கும் உதவி செய்து பலனடைந்து அடுத்தவர்கள் வாழ்க்கையை நாசமாக்கி எப்படியும் வாழ முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மாட்டியது அவர்களின் துரதிர்ஷ்டம்.


தமிழன்
மே 28, 2025 23:05

FIR leak செய்தவர்களுக்கு என்ன தண்டனை.. ?


துர்வேஷ் சகாதேவன்
மே 28, 2025 23:01

அவன் கைது செய்யப்படும்போது அவனுடைய செல் போன் FLIGHT MODE இல் இருந்துள்ளது அப்புறம் எப்படி பேசி இருப்பான் என்று போலீஸ் சொல்கிறது, அனால் இதே எடப்பாடி பொள்ளாச்சி சம்பவம், யாரை காப்பாற்ற என்ன என்ன செய்தார், ஏன் கொள்ளை கொலை கொடநாட்டு வழக்கு ஏன் முடிய மாட்டேங் குதோ அப்போ தான் எடப்பாடி கோட்டம் அடங்கும்


C.SRIRAM
மே 28, 2025 19:37

நேரத்தை வீணடிக்க விடாமல் மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்ய விடாமல் தூக்கு தண்டனை கொடுத்து வழக்கை உடனடியாக முடிக்க வேண்டும்


M.Malaiarasan, Tuticorin...
மே 28, 2025 19:16

திரு் அண்ணாமலை ஜி... அவர்களே...இப்போதாவது சொல்லுங்களேன்....அந்த சார் யாறென்று ?


Ganesan
மே 28, 2025 22:41

ஏன் இதை நாம் இப்படி இருந்திருக்கலாம் என்று யோசிக்க கூடாது? என்னை பொறுத்தவரை, ஒருத்தரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சிலவற்றை பெறுவதற்கு. ஐயா, சார், மற்றும் பல பெரியவர்கள் பெயரை உடனே பயந்து விடுவதற்கு உச்சரிப்பது வழக்கமான ஒன்று. அதிலும் இவன் அந்த பெண்ணிடம் இருந்து, ஏமாற்ற பெற முடியாததை, ஒரு கற்பனை "ஐயா, சார், மற்றும் பல பெரியவர்கள்" பெயரை சொல்லி இருக்கலாம் இது எனது யூகம்...


Kasimani Baskaran
மே 29, 2025 03:40

கணேசன்... இந்தக்கேடி சார் என்ற சந்தேக நபர்கள் இருவருடன் தொடர்பில் இருந்து இருக்கிறான். சாதாரண பிரியாணிக்கடை ஓனர் என்றால் அந்த அளவுக்கு சக்தி மிகு உள்ளத்துக்கு வெங்காயங்களுடன் தொடர்பு கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இதை அந்த சார்களுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விபரங்கள் போன்றவை தெளிவாக சரிபார்க்கப்பட்டு இருக்கவேண்டும். வெறும் ஒரு அவசரமாக மறுப்பு மூலம் மட்டுமல்லாமல் காவல்துறை தீவிர விசாரணை மூலம் சார் இல்லை என்று நிரூபித்து இருக்கவேண்டும்.


Anand
மே 28, 2025 18:54

ஒருவேளை இவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும், சில நாட்களில் தலைவர்கள் பிறந்த நாளில் நன்னடத்தை? காரணமாக விடுவிக்கப்படலாம்.


தமிழன்
மே 28, 2025 23:07

ஆளும் கட்சி என்றால் சுகமான வாழ்க்கை தானே.. எங்கே இருந்தால் என்ன? அங்கே கூடுதல் வசதி கிடைக்கலாம்.


மீனவ நண்பன்
மே 29, 2025 03:01

தலைவர்களின் நன்னடத்தையை பின்பற்றி நடந்ததற்காகவா ?


பேசும் தமிழன்
மே 28, 2025 18:39

கடைசி வரை... யார் அந்த சார் என்று சொல்லவேயில்லை..... ஞானசேகரன் வெறும் அம்பு மட்டும் தான்...... எய்தவன்...யார் அந்த சார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை.


தமிழன்
மே 28, 2025 23:08

call history அண்ணாமலையிடம் இருக்கிறது என்று அவரே சொல்லி இருக்கிறார்.. குற்றவாளியை மறைப்பது யார்


முக்கிய வீடியோ