உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி; வளாகத்தில் சைக்கிள் மட்டும் அனுமதி!

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி; வளாகத்தில் சைக்கிள் மட்டும் அனுமதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை., வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.பிரபலமான சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் போராட்டம் ஒரு புறம், மாணவிகளின் மீதான பாதுகாப்பு பற்றிய கேள்விகள் ஒருபுறம் என பல்கலைக்கழகம் பெரும் நெருக்கடிக்கு ஆளானது. இந்நிலையில், இன்று (ஜன.,05) பல்கலைக்கழக வளாகத்திற்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:* அண்ணா பல்கலை., வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.* மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலை பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.* வெளிநபர்கள் நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.* மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும்.* பணி முடிந்ததும் கட்டுமான தொழிலாளர்கள் பல்கலையை விட்டு வெளியேற வேண்டும்.* வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் நிறுத்தப்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும்.* மாணவர்கள் எப்போதும் தங்கள் அடையாள அட்டையை அணிய வேண்டும். * சி.சி.டி.வி., கேமிரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்* பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
ஜன 06, 2025 08:59

எதுக்கு இஞ்சினீரிங் கல்வியெல்லாம்? சைக்கிக்ள போய் பகுத்தறிவு பாசறையில் பயிற்சி எடுத்து பட்டம் குடுங்க. பிரியாணி கடை ஆரம்பியுங்க.


D.Ambujavalli
ஜன 06, 2025 08:23

ஆடி கார் செய்வதை சைக்கிளில் கூட செய்யலாம் அல்லவா? 140 செக்யூரிட்டிகளில் அங்கு என் ஒருவரும் இல்லை? இதிலிருந்தே முன்னேற்பாடாகத்தான். அவர்களும் நகர்த்தப் பட்டிருப்பார்கள் என்று தெரியவில்லையா?. எல்லாருக்கும் உரிய பிரிஸ்ட்டாக உண்டு


AMLA ASOKAN
ஜன 05, 2025 21:50

ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அவளது சுய ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு , குடும்ப கெளரவம் , அவள் படித்து உணர்ந்த தமிழ் பண்பாடு & தமிழ் கலாச்சாரம் தான் . ஒரு அந்நிய ஆண் தான் அவளுக்கு எதிரி . அதனால் தான் இஸ்லாமிய மதத்தில் மஹரம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்கள் . அவளது இரத்த உறவுகள் தவிர மற்ற அந்நிய ஆண்கள் அவள் அருகில் இருக்க அனுமதியில்லை .


அப்பாவி
ஜன 06, 2025 09:01

இந்தியா ஆண், பெண் சுதந்திரமாக இயங்க அனுமதி அளிக்கிறது. பிடிக்கலைன்னா ஆப்கானிஸ்தானுக்கோ, சவுதிக்கோ ஓடிப்போயிடு. எஞ்சாய் பண்ணு.


பெரிய குத்தூசி
ஜன 05, 2025 19:27

அந்த சார் னு சொல்றாங்களே அன்பில் சார், அவருக்கு அனுமதி உண்டா?


அப்பாவி
ஜன 05, 2025 18:36

கருப்பு கலர் சைக்கிள்களுக்கு அனுமதி உண்டா?


pandit
ஜன 05, 2025 18:24

பிரியாணி ஆடி கார் சார் ஆசியுடன் ஸ்பெஷல் அனுமதி . அப்போது மட்டும் சிசி டிவி அணைத்து வைக்கப்படும்


sankaranarayanan
ஜன 05, 2025 18:16

இந்திய சுதந்திரப்போராட்ட வீரகளை பிரிட்டிஷ் அரசு அந்தமான் சிறையில் அடைத்துவைத்து பல இன்னல்களுக்கு ஆளாக்கினர் அது எவ்வளவே தேவலாம்போல இப்போது இருக்கிறது இந்த திராவிட மாடல் அரசில் அதைவிட மோசமாக நமது சுதந்திர மண்ணிலேகூட சுதந்திரமாக அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களையும் ஆடுமாடுகளை போன்று பாவிப்பது வெட்கக்கேடு


Bahurudeen Ali Ahamed
ஜன 05, 2025 17:11

அய்யா தமிழன் அவர்களே பாதிக்கப்பட்ட அந்தப்பெண் தன் பாதுகாப்பிற்காக ஆண் நண்பரை ஏற்படுத்திக்கொண்டார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த ஆண் நண்பர்தான் தன்னை நம்பி வந்த பெண்ணை அம்போவென விட்டுவிட்டு ஓடிப்போனான், அதே இடத்தில் அந்தப்பெண்ணின் சகோதரன் இருந்திருந்தால் தன் உயிரே போனாலும் எதிர்த்து நின்றிருப்பான், பெண்களே உங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது, ஆனால் அதை உங்கள் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துங்கள், உயர்வீர்கள்


Ganesh
ஜன 05, 2025 15:59

சார், அங்குள்ள எல்லாருக்கும் எலக்ட்ரானிக் அடையாள அட்டை குடுத்து எல்லா கேட் லையும் நடைமுறை படுத்தினாலே போதும்... புதிதாக வருபவர்கள் பல்கலை அனுமதி கடிதம் + ஆதார் கார்டு வாங்கி எல்லா கேட் லையும் இதை நடைமுறை படுத்தினாலே போதும்.... ஆனால் இதை அரசியல் ஆட்கள் கடைபிடிப்பர்களா?


Kasimani Baskaran
ஜன 05, 2025 15:06

பல்கலைக்கழகத்துக்குள் கொண்டவர்களும் செல்லும் அளவில் வைத்திருந்த நிர்வாகத்துக்கு கல்தா கொடுத்து புது நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். மொத்தமாக காவல்துறை குற்றவாளிக்கு முட்டுக்கொடுப்பது ரசிக்கும் படியாக இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை