உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவி, வேங்கைவயல் விவகாரம்; சட்டசபையில் விவாதிக்க வி.சி.க., கவன ஈர்ப்புத் தீர்மானம்

அண்ணா பல்கலை மாணவி, வேங்கைவயல் விவகாரம்; சட்டசபையில் விவாதிக்க வி.சி.க., கவன ஈர்ப்புத் தீர்மானம்

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க வேண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6ம் தேதி, காலை 9.30 மணிக்கு கவர்னர் ரவி உரையுடன் துவங்குகிறது. நேற்று (ஜன.,03) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று தமிழக கவர்னர் ரவியை சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்ற அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இன்று (ஜன.,04) அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க வேண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M.Srinivasan
ஜன 05, 2025 07:01

பாஜக ஏன் கவன ஈர்ப்பு மனு அளிக்கவில்லை ?


Ramesh Sargam
ஜன 04, 2025 20:30

அண்ணா பல்கலை மாணவி விவகாரம், வேங்கைவயல் விவகாரம் சட்டசபையில் விவாதிக்க திமுக அனுமதிக்காது. ஆனால், முதல்வரின் படத்தின் மீது மண் வீசிய பாட்டியைப்பற்றி விவாதிக்கும் இந்த திமுக அரசு.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 19:40

இவர் மேல் இருந்த எல்லா மதிப்பும் போய் விட்டது. பெட்டி வாங்கிக்கொண்டு கட்சியை செயலிழக்க வைத்து விட்டு, சங்கிகளுக்கு பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் போட்ட பிச்சையில் எம் பி ஆகிய துரோகி.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 19:35

ஏழாம் கூலி விடுதலை பூனை.


raja
ஜன 04, 2025 17:52

ஆக சிறுத்தை குட்டிகளுக்கும் உண்டி குலுக்கிகளுக்கும் தெரிந்துவிட்டது ஸ்டாலின் தான் வர மா... விடியல் தர மாட்டாரு என்று...


M Ramachandran
ஜன 04, 2025 17:18

தீ மு க் கா வை எதிர்த்து சதி. இது வைக்கோ அண்ணன். எப்படி திடீர் என்று கமிஷசின் கம்மிகளும் திரு மா வும் கூவு கிறார்கள். என்ன திட்டம் வைத்துள்ளார்கள். தீவிரத்தை மடையய் மற்றும் வேலை? நம்ப முடியவில்லை இதைய்ய நம்ப முடிய வில்லை.


M Ramachandran
ஜன 04, 2025 17:13

திரு மா அண்ணனுக்கு எப்படி வேங்கை வயல் பற்றி ஞ்னோதயம் ஏர்ப்பட்டிச்சி? நீள் உரக்கத்திலிருந்து எழுந்து விட்டாரா?


Rajarajan
ஜன 04, 2025 16:30

அதாவது, எப்படி சொல்றது நான் ?? இப்போதான் தி.மு.க. மீது எதிர்ப்பு அலை வீச ஆரம்பிச்சிருக்கு. அதனால, இப்போதான், வண்டியை வேறுபக்கம் திருப்ப எதுவா இருக்கும். அதான் வேற என்னத்த சொல்ல. அப்போ படகுல ஓட்டை விழுது. அதுக்காக, ஏன் வேங்கைவயலுக்கு ஆரம்பத்திலே சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரலன்னு, சின்னப்புள்ள தனமா கேக்க கூடாது. அதுவேற, இதுவேற. எடுடா வண்டிய, அமுக்குடா ஹாரண. ஓட்டுடா அ .தி.மு.க. ராயப்பேட்டா பக்கமா.


தமிழன்
ஜன 04, 2025 15:55

அம்னீஷியா, டிமினிஷியா எதுவும் இல்லையா..?


Ramalingam Shanmugam
ஜன 04, 2025 15:21

என்ன குருமா ive amnesivaa


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை