உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் கனவு ஜூன் 4ல் தகர்க்கப்படும்

தி.மு.க.,வின் கனவு ஜூன் 4ல் தகர்க்கப்படும்

சென்னை : ''காங்கிரஸ், தி.மு.க., இடம் பெற்றுள்ள, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கனவு உலகத்தில் வாழ்கின்றன. அக்கட்சியினரின் கனவு வரும், 4ம் தேதி தகர்க்கப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். லோக்சபா தேர்தலுக்கு பின் முதல் முறையாக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8yijxl94&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: இம்முறை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெறும். நாடு முழுதும் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். தென் மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பின் வடக்கு, தெற்கு என்ற வாதம் இருக்காது. காங்கிரஸ், தி.மு.க., இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி கட்சிகள் கனவு உலகத்தில் வாழ்கின்றன. அக்கட்சியினரின் கனவு, அடுத்த மாதம் 4ம் தேதி தகர்க்கப்படும். பா.ஜ.,வினர் கொண்டாட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார். இது, காலத்தின் கட்டாயம். நாட்டை எதிர்க்கும் ஆதிக்க சக்திகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுக்கு பின் மேலே இருப்பவர்கள், கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே செல்லலாம்.அதைப்பற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம். இனி அடுத்து கொடுக்க போகும் வேலையையும் செய்து முடிப்போம்.எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பது முக்கியமல்ல.எவ்வளவு ஓட்டு சதவீதம் பெறப் போகிறோம் என்பது தான் முக்கியம். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக உழைத்து தான் உயர்ந்துள்ளனர்.அதேபோல் நாமும் உழைத்தால், நம் இலக்கை அடைய முடியும். தேர்தலில் சரிவர பணியாற்றாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். தேர்தல் முடிவுக்கு பின், அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
மே 28, 2024 17:05

பதவி, நாற்காலி பேராசை எல்லோருக்கும். பா.ஜ ஜெயிச்சு இவரு தோத்தா கெவுனராயிடலாம். இவுரு ஜெயிச்சு பா.ஜ தோத்தா இப்பிடியே கண்டிநியூ பண்ணலாம். இவுரும் ஜெயிச்சு, பா.ஜ வும் ஜெயிச்சா கேபினட் மந்திரியாயிடலாம். இவுரு தோத்து, பா.ஜ வும் தோத்தா விவசாயம். பாக்க போயிடலாம். இந்த நாளில் ஒண்ணுதான் நடக்ஜப் போகுது. இப்பவே ஏன் கூப்பாடு?


Jai
மே 28, 2024 15:12

ஆளும்கட்சி ரூ500 கொடுத்ததாகவும் எதிர்கட்சி ரூ200 கொடுத்ததாகவும் பிஜேபி எதுவும் கொடுக்கப்படவில்லை என்று பரவலான பேச்சு. இதுவரை எந்த பிரதமரும் மெச்சும் வகையில் தமிழ் மொழியை பிரதமர் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளில் பேசும் போதும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோலை கைத்தடி என்று காங்கிரஸ்காரர்கள் வைத்திருந்ததை மாற்றி புதியதாக கட்டிய பாராளுமன்றத்தில் செங்கோலை பிரதானப்படுத்தி தமிழ் மக்களுக்கு மரியாதை கொடுத்துள்ளார் பிரதமர். பிரதமர் கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலும் தமிழ்நாடு பிஜேபிக்கு நல்ல தலைமை கிடைத்துள்ளதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலும் டுமிழன் 500 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் ஓட்டு போட்டுள்ளான். இதற்கு மேல சின்னத்தை மட்டும் பார்த்து ஓட்டு போடும் அடிமைகள் வேறு உள்ளனர். ஆகவே அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.


குணாளன்
மே 28, 2024 17:07

செங்கோல் மன்னராட்சியின் அடையாளம். அதஒ ஒழித்து செங்கோலை கைத்தடியாக்குனவங்க காங்கிரஸ்காரங்க. அதை துரும்ப கொண்டுவந்து சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த பாக்குறவங்க பா.ஜ ஆளுங்க. இதுல மக்களுக்கு எங்கே கௌரவம் வந்திச்சு?


venugopal s
மே 28, 2024 12:16

தமிழக மக்கள் இவருக்கு வைக்கப் போகும் ஆப்பை மறந்து விட்டாரோ?


vadivelu
மே 28, 2024 12:26

பாவம் ஐயா நீங்க. ஆப்பு உங்களுக்குத்தான். ஜூன் 4 11.00 மணிக்கு மேல்


Gopinathan S
மே 28, 2024 11:25

பொன்னார் , வானதி, நயினார் ஏன் இங்கே பங்கேற்கவில்லை என்று இவருக்கு தெரியுமா? இவரு சொல்ற மாதிரியே நாலாம் தேதிக்கு அப்புறம் இருக்கு கச்சேரி.


Senthoora
மே 28, 2024 06:53

ஒரே ஜோக்கை திரும்ப, திரும்ப சொல்லுறிங்களே/


மேலும் செய்திகள்