உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4,000 கோடி டெண்டரில் ஊழல்; திமுக அரசு மீது அண்ணாமலை பரபரப்பு புகார்

ரூ.4,000 கோடி டெண்டரில் ஊழல்; திமுக அரசு மீது அண்ணாமலை பரபரப்பு புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை; தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் வாயிலாக ஏற்கனவே ஒரு பெரும் ஊழல் நடைபெற்றதை, கடந்த மார்ச் மாதம் சுட்டிக் காட்டியிருந்தோம். தற்போது, மீண்டும் ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqbz14f0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 சென்னை மாநகராட்சி 4 மற்றும் 8 ஆகிய இரண்டு மண்டலங்களில், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி கோரல், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, சுமார் ரூ.4,000 கோடி ஆகும். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாள், ஏற்கனவே நான்கு முறை தள்ளி வைக்கப்படதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, நவம்பர் 20, 2025 நேற்றைய தினம் மாலை 3 மணி வரை, ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மூன்று நிறுவனங்கள், தங்கள் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பித்திருந்தனர்.இந்த நிலையில், ஒட்டு மொத்த விதிகளையும் மீறி, நேற்று மாலை 3 மணிக்கு முடிவடைந்த ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பை, மீண்டும் ஒரு நாள் நீட்டித்து, இன்று (நவ.,21) கடைசி நாள் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு, நேற்று மாலை, 4 மணிக்கு மேல் வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், மேலும் ஒரு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.இதன்படி, ஏற்கனவே மூன்று நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி மதிப்பைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி மதிப்பை அமைத்து, ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைப்பதற்குச் சாதகமாகவே, இந்த கால நீட்டிப்பு செய்துள்ளதாக அறிய முடிகிறது.ஏற்கனவே நேரம் முடிவடைந்த ஒப்பந்த அறிவிப்பை, மீண்டும் கால நீட்டிப்பு செய்வது, முற்றிலும் விதிமீறல் மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மையையும் பாதிப்பதாகும். இந்த விதிமீறல் காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரிய மூன்று நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், ஒப்பந்த மதிப்பான சுமார் ரூ.4,000 கோடியில், பெருமளவில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.உடனடியாக, சென்னை மாநகராட்சி, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், இந்த கால நீட்டிப்பு செய்தது யார் வற்புறுத்தலில் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். நேரம் முடிவடைந்த பின்னர், ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனம் யாருடையது, அவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Marai Nayagan
நவ 21, 2025 17:50

திருட்டு திராவிட குடும்பம் கொள்ளை அடிப்பதை இங்கே பல 200 உ.பி க்கள் முட்டு கொடுத்து வருவது கண்கூடு. அவர்களுக்கு டாஸ்மாக் மாடல் தான் வேண்டும் திருடிய காசில் பங்கு...அவ்வளவே


சூர்யா
நவ 21, 2025 17:43

அமைச்சர்கள் மீது பல நூறு கோடி ஊழல் பட்டியல்.


Rajan A
நவ 21, 2025 17:23

இருந்தால் வழக்கு போட வேண்டியது தானே? இந்த கட்சியும் திராவிட புதைமண்ணில் சிக்கிவிட்டதோ?


Ragukkumar T
நவ 21, 2025 17:19

இவர் பெரிய ஆபீசர் வந்துறுவாரு அப்படியே, உன்னை விடவா பெரிய ஊழல் பண்ண போரங்க


T.Senthilsigamani
நவ 21, 2025 17:03

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்?’ என சர்க்காரியா கமிஷன் முன்பு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஊழலை நியாயப்படுத்தி பேசிய திருட்டு திராவிட கும்பல்களுக்கு இது சாதாரண விஷயம் தான். ஓட்டு போட்ட மக்கள் தான் பாவம்


Ramesh A
நவ 21, 2025 17:03

நீ ரொம்ப யோகியும் ..உங்க கட்சில ..எவனும் திருடன் ரவுடி இல்லியா...உங்களோடது கழுவுங்க..அப்புறம் அடுத்த விட்டல கழுவலாம்


Murthy
நவ 21, 2025 16:45

ஊழல் என்று சொல்வதோடு சரி .....குற்றவாளி என்று தண்டனை பெற்றவர்களையும் காப்பாற்றுவதுதான் பிஜேபி வேலை


தலைவன்
நவ 21, 2025 17:20

இத்தோடு இன்றய நகைச்சுவை முடிந்தது. மீண்டும் சந்திக்கலாம்?? - அண்ணாமலை


பாமரன்
நவ 21, 2025 16:42

இவரோட வாய் உதார் மற்றும் இவர் நடத்தும் வார் ரூம் பாய்ஸ் குடுத்த சவுண்ட நம்பி அம்லுஅக்கா அடிமைங்க டாஸ்மாக் போய் பல்பு வாங்கிய காயம் இன்னும் ஆறாததால இவரை கம்பெனி கூட நம்ப வாய்ப்பில்லை... காண்ட்ராக்ட் எடுத்துட்டு அனுபவிக்கற அவஸ்தை இந்த நியூஸ் போட்டது... போங்க போங்க


ديفيد رافائيل
நவ 21, 2025 16:34

நேரடியாக இருக்க வாய்ப்பில்லை, பினாமி பெயரில் தான் மாட்டுனா apply பண்ணேன் மட்டுமே சிக்குவான்,


Maruthu Pandi
நவ 21, 2025 16:28

8000 கோடி ரூபாய்க்கு மூடு கால்வாய் போட்டார்கள் . சித்தாலப்பாக்கத்தில் இந்த மூடு கால்வாயில் குப்பை டைப்பு அடைத்து கொண்டு , சும்மா மழை பேஞ்சாலே சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து ரோட்டில் குளம் பல தேங்கி விடுகிறது . வாகன ஓட்டிகள் படும் சிரமம் சொல்லி மாளாது .அவலத்தின் உச்சம் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை