உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: திருவள்ளூரில், தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jm6gttzy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, தி.மு.க., நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Oviya Vijay
பிப் 28, 2025 00:27

எனக்கு இருக்கும் ஒரு சந்தேகத்தை இங்கு யாரேனும் நிவர்த்தி செய்யுங்களேன்... உங்களுக்கு என் கேள்விக்கான பதில் தெரிந்தால்... என் கேள்வி என்னவெனில்... ஒரு கிராமத்தில் மும்மொழிக் கொள்கை அடிப்படையிலான அரசுப் பள்ளி ஒன்று செயல்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்... அப்பள்ளியில் இந்திய மொழிகளில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறார்கள்... அப்படியானால் உதாரணத்திற்கு அந்த அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் பயிலும் ஒரு மாணவருக்கு தமிழ் ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக தெலுங்கு மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு கன்னட மொழி பயில விருப்பம். ஒரு மாணவருக்கு ஒரியா மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு பஞ்சாபி மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு ராஜஸ்தானி மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு குஜராத்தி மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு மலையாள மொழி பயில விருப்பம்... இவ்வாறிருக்கையில் இத்தனை மொழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒவ்வொரு மொழிக்கும் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தனித்தனியாக நியமனம் செய்வார்களா??? இல்லையேல் இதனை எவ்வாறு கையாள்வார்கள்...??? இந்த கேள்விக்கான பதில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்... நன்றி...


Priyan Vadanad
பிப் 28, 2025 05:28

கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஒன்றியத்திடம் கல்வி அதிகாரம் இருப்பதால், அவர்கள் எங்களிடம் இந்திக்கு மட்டும்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி இந்தியை திணித்து விடுவார்கள். கொல்லைப்புறம் வழியாய் வீட்டுக்குள் நுழையும் கலை இவர்களுக்கு என்ன தெரியாததா?


Shivam
பிப் 27, 2025 22:53

சாட்டை எங்கே? சீக்கிரம் எடுத்துட்டு வா இங்க இந்த ஊசி மணி அப்புறம் ரங்கு பெட்டி மொக்கை தாங்க முடியலை, விட்டா என்னை பீட் பண்ணிருவாங்க


Rajkumar Ramamoorthy
பிப் 27, 2025 22:34

Annamalai ji.. super


T.sthivinayagam
பிப் 27, 2025 21:25

நாளை உலகை ஏஐ ஆளும் அதற்கு இந்தியா முன்னேரி வருகிறது என்று சொல்லி கொண்டே எங்கள் பிள்ளைகளை ஹிந்தி அல்லது வேறு இந்திய மொழி படிக்க சொல்லுவது வேதனை தருகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்


Loganathan Balakrishnan
பிப் 28, 2025 12:53

அவங்க ஹிந்தி படிக்க சொல்லல உங்களுக்கு தெரியுமா தமிழ் நாட்டுல தமிழ் சொல்லி கொடுக்காத எத்தனை பிரைவேட் ஸ்கூல் இருக்கு


எஸ் emm
பிப் 27, 2025 20:43

thi mu கவிற்கு இப்போ இல்லங்க, அப்பான்னுடைய காலத்திலிருந்தே தமிழ் பற்று என்று கூறிக்கொண்டு. அரசியலையும். மக்களையும் ஏமாற்றுவதே இவர்களின் வேலை.


venugopal s
பிப் 27, 2025 20:19

அண்ணாமலைக்கு தமிழக அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது ஒப்பாரி வைக்கா விட்டால் தூக்கம் வராது!


Sundar R
பிப் 27, 2025 20:06

அண்ணாமலை வெல்வது உறுதி.


Velan Iyengaar
பிப் 28, 2025 10:07

நியமன தேர்தலிலா? அந்த கட்சிக்குலேயே ஒரு ஹெர்த்தல் வைத்து ஆளாவது வெல்ல துப்பு இருக்கா??


Sampath Kumar
பிப் 27, 2025 20:00

உங்க ஹிந்தியை நீங்க வியாபாரம் மட்டும் அல்ல அதிகாரம் செய்யவும் ஆதிக்கம் செலுத்தவும் பண்னுவது போல தான் இதுவும்


Venkataraman
பிப் 27, 2025 19:20

சுடாலின் ஆட்சியில் எல்லா விஷயமும் அரசியலாக்கப்படுகிறது, பிரசினையாக்கப்படுகிறது. எல்லாமே ஓட்டுக்காக திசை திருப்பும் நிகழ்வாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மத்திய அரசுக்கு எதிராக ஏதாவதொரு பிரசினையை உருவாக்கிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமான பிரசினைகளாக உள்ள சட்டம் ஒழுங்கின்மை, ஊழல், வேலையில்லா திண்டாட்டம், கடன் வாங்கி இலவசங்களை தருவது, டாஸ்மாக் கொள்ளை, கஞ்சா புழக்கம் போன்றவற்றில் அக்கறை செலுத்தாமல் அவற்றை திசை திருப்புவதற்காக, ஊரை ஏமாற்றுவதற்காக நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.


rama adhavan
பிப் 27, 2025 21:16

மக்கள் ஏன் கேள்வி கேட்காமல் ஓட்டு மட்டும் போடுகிறார்கள்? பிரதான எதிர்க்கட்சி ஏன் தீவிரமாக போராடவில்லை? கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை. இதனால் நம்மிடம் தான் பிழை.


rama adhavan
பிப் 27, 2025 18:39

என்ன செய்ய முடியும்? சாலை ஓரத்தில் கார் நிறுத்தக் கூடாது, கடை வைக்கக் கூடாது, குப்பை கொட்டக்கூடாது, இப்படி பல விதிகள். ஆனால் மக்களால் தான் மீறப்படுகின்றன. அது போல் இதுவும். எப்படி நிறுத்துவது என்று வழி கண்டு பிடிக்க முடியவில்லையே? அதை காணுங்கள் தயவு செய்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை